
டி ஆர் பாலா மற்றும் அனில் குமார் ரெட்டி தயாரிப்பில் வெங்கடாச்சலம் இணைத் தயாரிப்பில் ஃபேரி டேல் பிக்சர்ஸ், ஏ ஆர் டூரிங் டாக்கீஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனங்கள் விஜிவி கிரியேஷன்ஸ் மற்றும் சினிமாரஸா புரொடக்ஷன்ஸ் உடன் இணைந்து வழங்கும் ஜின் தி பெட் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் தயாரிப்பாளர் டி.ஆர் பாலா.
இதில் முகேன் ராவ் – சக்தி, பவ்யா திரிகா – பிரியா , வடிவுக்கரசி – அபிதகுஜாலம்பால், பாலசரவணன் – பரன்ஜோதி, ராதா ரவி – மனோகர், நிழல்கள் ரவி – ராதா கிருஷ்ணன், வினோதினி – கீதா, ரித்விக் – சிம்பு ஆகியோர் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள்:- ஓளிப்பதிவு- அர்ஜுன் ராஜா, இசை இயக்குனர் – விவேக் மெர்வின், எடிட்டர் – தீபக், கலை இயக்குனர் – தினேஷ் குமார், ஸ்டண்ட் மாஸ்டர் – பிரதீப் தினேஷ் , ஒலி வடிவமைப்பு – டி உதயகுமார், வி.எஃப்.எக்ஸ் – விபின் விஜயன், வண்ணம் – சண்முகா பாண்டியன், ஆடை வடிவமைப்பாளர் – தீப்தி, பிஆர்ஒ – நிகில் முருகன்.
கதைகரு வெளி நாட்டில் வளர்க்கும் செல்ல பிராணி ( நம் ஊர் :பேய் -குட்டி சாத்தான் )அதனால் ஏற்படும் நல்லதும் -கெட்டதும் … பற்றி சொல்லும் கதை…
படத்தை பற்றி பேசுவோம :
மலேசியாவில் முகேன் ராவ் பாடகராக வேலை செய்கிறார் திடீர் வேலை பறிபோகுகிறது சென்னைக்கு வர முடிவெடுகிறார். தன் குடும்பத்தினர் கேட்ட பொருட்கள் மற்றும் அக்கா மகன் கேட்ட பரிசு பெருட்கள் வாங்க கடைக்கு செல்கிறார். கடையில் வினோதமான ஒரு பெட்டியை பார்க்கிறார் பெட்டியை பற்றி கடைகாரரிடம் விசாரிக்க அதுதான் ஜின் தி பெட் – செல்லபிராணி (கண்ணுக் தெரியாது பேய் ) என்று கூற அதை பற்றி கடைகாரர் கூறுகிறார் தினமும் அது சாப்பிடும் நேரம் தேவையான உணவு அதனுடைய செய்யல்பாடுகள் நீங்கள் கேட்டதை கொடுக்கும் நினைத்தது நடக்கும் அதே நேரத்தில் ..ஜின் தி பெட் சரியான நேரத்தில் உணவு கொடுக்கவில்லை யென்றால் எதிர் விளைவுகள் சந்திக்க நேரிடும். ஜின் தி பெட் ..அந்த பெட்டியை கையால் தொட்டவுடன் லாட்டரியில் 5 லட்சம் பரசு முகேன் விழுந்தது இந்த பெட்டி நம்மிடம் இருந்தால் அதிர்ஷ்டம் என்ற நம்பிக்கையில் வாங்கி சென்னைக்கு வருகிறார் வந்தவுடன் இவர் வாழ்க்கையில் நல்லது நடக்கின்றது அதே நேரம் வீட்டில் இருப்பவர்களுக்கு கெட்டது நடக்கிறது
இந்த நிலையில் ஒரு நாள் வெளியே சென்று விட்டு முகேன்ராவ் வீட்டுக்கு வருகிறார் வீட்டில் மனைவி பவ்யாதரிக்க ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடக்கிறார் மனைவியின் இந்த நிலைக்கு தான் வளர்க்கும் ஜின் காரணம் என்று நினைத்து வீட்டிற்குள் வைத்து வளர்த்த ஜின் வீதியில் தூக்கி வீசுகிறார்.. கொஞ்ச நாள் கழித்து மனைவியை கொலை செய்ய முயற்சித்தது ஜின் இல்லை யென்று உண்மை தெரியவருகிறது பவ்யாவை கொலை செய்ய முயற்சித்தது யார்? எதற்காக இந்த கொலை முயற்சி யார் இதை செய்தது? ஜின் நிலைமை என்ன? என்பதே படத்தின் மீதி கதை…
நடிகர் துடிப்பான இளைஞர் முகேன் ராவ் பிக்பாஸ் டைட்டில் வின்னர் சிறப்பன நாடிப்பை கொடுத்துள்ளார்
நடிகை . – இவருடைய காதல் மனைவி .பவ்யா திரிக்காவுடன் காதல் காட்சிகளிலும் அவரது நடிப்பு ரசிக்க வைக்கிறது.சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளார் தமிழ் திரையுலகில் நல்ல எதிர்காலம் உள்ளது.
பாலசரவணன் ஹீரோவுக்கு நண்பராக சிறப்பாக நடித்துள்ளார் சில நேரங்களில் அவர் செய்யும் காமெடி அவர் மட்டும் சிரித்து கொள்வார். மற்றும் இப்படத்தில் நடித்த ..வடிவுக்கரசி /இமான் அண்ணாச்சி/ வினோதினி /ராதா ரவி –நிழல்கள் ரவி – படத்திற்க்கு கூடுதல் பலம் மற்றும் பரன்ஜோதி, – மனோகர், ராதா கிருஷ்ணன், – கீதா, ரித்விக் – சிம்பு ஆகியோர் சிறப்பாக நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள் : ஒளிப்பதிவு. மலேசியா அழகை நம் ஊர் காட்சியை அழகாக காட்டியுள்ளார்அர்ஜுன் ராஜா,
இசை இயக்குனர் – விவேக் மெர்வின், இசை அருமை
எடிட்டர் – தீபக் படத்திற்க்கு தேவையான காட்சிகள் மட்டும் சேர்ந்து கொடுத்துள்ளார்
மற்றும் இப்படத்தில் பணியாற்றி அனைவரும் சிறப்பாக செய்துள்ளனர்
இயக்குனர் :டி.ஆர் பாலா. கதை தேர்வு சரியானது இப்படம் ரத்தமின்றி, சத்தமின்றி கொடுத்துள்ளார் இப்படம் குழந்தைகள் மற்றும் குடும்பத்துடன் பார்க்கும் படமாக உள்ளது இருந்தாலும் திரைகதையில் இன்னும் கவனம் . செலுத்தியிருக்கனும் உங்கள் முயற்ச்சிக்கு வாழ்த்துக்கள் பாராட்டு..










