Saturday, June 20

“டபுள் ஆக்குபன்சி” திரை விமர்சனம்.

ஏசிஎஸ் அருண் குமார் (பென்ஸ் மீடியா) மற்றும் குஷ​;பு சுந்தர் (அவ்னி மூவிஸ்) தயாரித்திருக்கும் டபுள் ஆக்குபன்சி படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் அஸ்வின் கந்தசாமி.

இதில் சந்தோஷ், ரேஷ்மா வெங்கடேஷ், சம்யுக்தா விஸ்வநாதன், வினோத் கிஷன், விடிவி கணேஷ், பகவதி பெருமாள் (பக்ஸ்), விச்சு விஸ்வநாத், போஸ் வெங்கட், வினோதினி வைத்தியநாதன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

தொழில்நுட்பக்:கலைஞர்கள்

கிரியேட்டிவ் புரொடியூசர்: அனந்திதா சுந்தர், இசை: சாம் சி.எஸ், ஒளிப்பதிவு: சந்தகுமார் சக்கரவர்த்தி, படத்தொகுப்பு: பிரவீன் ஆண்டனி, ,மக்கள் தொடர்பாளர்: ரியாஸ் கே அஹ்மத், பாரஸ் ரியாஸ்

கதைக்கரு

ஒரு இதயம் இரண்டு உருவம், இரண்டு காதல் எந்த காதல் வென்றது என்ற வித்தியாசமான கதைக்கரு

படத்தை பார்ப்போம் :

திருமணம் ஆகி 15 ஆண்டுகளாகியும் ஒரு தம்பதிக்குக் குழந்தை இல்லை. கடவுள் நம்பிக்கையே இல்லாத கணவன் கடவுளை மனமுருகி வேண்ட ஒரு ஆண் குழந்தை பிறக்கிறது. ஆனால் . சில நிமிடங்களில்  இறந்து விடுகிறது அந்தத் தம்பதி மீண்டும் கடவுளிடம் பிரார்த்தனை செய்ய மீண்டும் கடவுள் அருளால் உயிர் பெறுகிறது. ஆனால் பெண் குழந்தையாக…காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பெண், மாலை 6.01 லிருந்து மறுநாள் காலை 5.59 வரை ஆண் ஆக மாறி வளர்கிறது குழந்தை. இதனால் ஊரை விட்டு இரவு நேரத்தில் யாருக்கும் தெரியாமல்  வெளி ஊருக்கு வந்து விடுகிறார்கள் இந்த அதிசய குழந்தைக்கு ரஜினி என்ற பெயர் வைத்து வளர்கிறது ஆண் பெண் இருவருக்கும் இந்த பெயர் பொருந்தும் திடீரென போஸ் வெங்கட் – வினோதினி தம்பதி விபத்து ஒன்றில் இறந்து விட, இந்த அதிசய பிறவிகள் சென்னைக்கு வந்து விடுகிறார்கள். ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள முடியாமலும், ஒருவரது செயல்கள் மற்றவரின் நினைவில் நிற்காமலும் இருக்கும் இவர்களது இந்த மாற்றம் மட்டும் தினமும் நடக்கிறது , பகல் முழுவதும் ரேஷ்மா வெங்கடேஷாக இருப்பவர், இரவு சந்தோஷாக மாறிவிடுவார். மதுபாரில் வேலை செய்கிறார் இந்த விசித்திரமான இவர்களது வாழ்க்கையில் காதல் மலர்கிறது. ரேஷ்மா வெங்கடேஷை வினோத் கிஷன் காதலிக்க, சந்தோஷை சம்யுக்தா விஸ்வநாதன் காதலிக்கிறார். இந்த காதல் வெற்றி பெற்றதா ? இல்லையா? காதலர் நிலை என்ன என்பதை பல திருப்பங்களுடன் படத்தின் மீதிகதை..

நாயகனாக வரும் சந்தோஷ் காதல், டான்ஸ், ஆக்சன் சென்டிமென்ட் என எல்லாத்தையும் சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளார் .இவரது காதலியாக சம்யுக்தா கச்சிதம்.

நாயகியாக வரும் ரேஷ்மா வின் கண் பார்வை, உடல் மொழி அருமை. ஆடியன்சுக்கு நல்ல எமோஷனல் கனெக்ட் தருவதில் இவருக்கு வெற்றி.

நாயகியின் காதலனாக வரும் வினோத் லிஷன் சிறப்பான நடிப்பு. வழங்கியுள்ளார்

விடிவி கணேஷ் புடவை அணிந்து பெண்ணாக நினைத்து நடனம் ஆடும் அந்த ஒரு காட்சி ரசிக்க முடியவில்லை மற்ற  அனைத்து காட்சிகளும் ரசிக்கும்படியாக இருந்தது.

பகவதி பெருமாள், விச்சு விஸ்வநாத், போஸ் வெங்கட், வினோதினி ஆகியோரின் திரை இருப்பும், அவர்களது அனுபவம் வாய்ந்த நடிப்பும் திரைக்கதைக்கு பலம் சேர்த்திருக்கிறது.

ஒளிப்பதிவு சாந்தகுமார். ஒளிவீச்சு படத்திற்க்கு சிறப்பாக அமைந்தது

எடிட்டிங் பிரவீன் ஆண்ட்டனி. படத்திற்க்கு தேவையான காட்சிகள் மட்டும் சேர்த்துள்ளனர்

சாம் சி.எஸ்சின் இசையில் பாடல்கள், பின்னணி இசை ஓக்கே ரகம்

எழுதி இயக்கியிருக்கும் அஸ்வின் கந்தசுவாமி, ஒரு இதயம் இரண்டு உருவம், என்ற வித்தியாசமான கதைக்கருவை தனது சுவாரஸ்யமான திரைக்கதை மூலம் பார்வையாளர்கள் அனைவரையும் ரசிக்கும்படியாக  கொடுத்துள்ளார்.நம்ப முடியாத விசயம் தான், ஆனால் இத்தகைய அதிசயங்களை சினிமா புதுமைகளை விரும்புகிறவர்களுக்கும், விருந்து

மொத்தத்தில், ‘டபுள் ஆக்குபன்ஸி’ மக்களை மகிழ்விக்கும்

ரேட்டிங் 3:.6