“டபுள் ஆக்குபன்சி” திரை விமர்சனம்.
ஏசிஎஸ் அருண் குமார் (பென்ஸ் மீடியா) மற்றும் குஷ;பு சுந்தர் (அவ்னி மூவிஸ்) தயாரித்திருக்கும் டபுள் ஆக்குபன்சி படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் அஸ்வின் கந்தசாமி.
இதில் சந்தோஷ், ரேஷ்மா வெங்கடேஷ், சம்யுக்தா விஸ்வநாதன், வினோத் கிஷன், விடிவி கணேஷ், பகவதி பெருமாள் (பக்ஸ்), விச்சு விஸ்வநாத், போஸ் வெங்கட், வினோதினி வைத்தியநாதன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
தொழில்நுட்பக்:கலைஞர்கள்
கிரியேட்டிவ் புரொடியூசர்: அனந்திதா சுந்தர், இசை: சாம் சி.எஸ், ஒளிப்பதிவு: சந்தகுமார் சக்கரவர்த்தி, படத்தொகுப்பு: பிரவீன் ஆண்டனி, ,மக்கள் தொடர்பாளர்: ரியாஸ் கே அஹ்மத், பாரஸ் ரியாஸ்
கதைக்கரு
ஒரு இதயம் இரண்டு உருவம், இரண்டு காதல் எந்த காதல் வென்றது என்ற வித்தியாசமான கதைக்கரு
படத்தை பார்ப்போம் :
திருமணம் ஆகி 15 ஆண்டுகளாகியும் ஒரு தம்பதிக்குக் குழந்தை இல்லை. கடவுள் நம்பிக்கையே இல்லாத கணவன் கடவுளை மனமுருகி வே...
