
ஒயிட் ஸ்கிரீன் பிலிம்ஸ் சார்பில் சுரேஷ் நந்தா தயாரித்திருக்கும் வீராயி மக்கள் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் நாகராஜ் கருப்பையா.
இதில் வேல ராமமூர்த்தி, மாரிமுத்து , தீபா சங்கர், சுரேஷ் நந்தா, நந்தனா, ரமா, செந்தி குமாரி, ஜெரால்டு மில்டன், பாண்டி அக்கா ஆகியோர் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப வல்லுநர்கள்: இசையமைப்பாளர் – தீபன் சக்ரவர்த்தி, எடிட்டர் – முகன் வேல், ஒளிப்பதிவாளர் – எம்.சீனிவாசன், பாடலாசிரியர் – நாகராஜ் கருப்பையா மற்றும் கேஜிஎஃப் மதுரகவி, மக்கள் தொடர்பு -ஏய்ம் சதீஷ்.
அறந்தாங்கி அருகே உள்ள கிராமத்தில் சிறு வயதிலேயே அப்பா இழந்து அம்மா பாண்டி அக்கா அரவணைப்பில் முதல் மகன் வேலராமமூர்த்தி, இரண்டாவது மகன் மாரிமுத்து, மூன்றாவது மகன் ஜெரால்டு மில்டன், நான்காவது மகள் தீபாசங்கர் இவர்கள் அண்ணன் தம்பி தங்கையுடன் பாசமாகவும் ஒற்றுமையாகவும் அண்ணன் வார்த்தைக்கு மறுப்பு செல்லாத தம்பி ,தங்கையாக வாழ்ந்தார்கள் .தங்கை தீபா சங்கர் திருமணம் ஆகி வேறொரு ஊருக்கு சென்று விடுகிறார் . இவர்கள் வாழும் ஊரில் பெரும் பஞ்சம் மழையில்லை விவசாயம் செய்ய முடியவில்லை அந்த ஊர் மக்கள் வெளியூருக்கு வேலைக்கு செல்கிறார்கள் வேளாண் ராமமூர்த்தியும் வெளியூருக்கு வேலைக்கு செல்கிறார் திடீர் ரென்று இவர்களின் உறவுகளில் பெரும் விரிசல் ஏற்படுகிறது பகையாளி போல் பார்த்துக் கொள்வது நல்லது கெட்டது கலந்து கொள்வதில்லை இது ஒரு பக்கம் இருக்க .தங்கை தீபா மகளை வேளாண் ராமமூர்த்தி மகன் காதலிக்கிறான். பல வருடமாக பிரிந்த பாசக்கார குடும்பங்கள் ஒன்று சேர்ந்தார்களா? காதலர்கள் ஒன்று சேர்ந்தார்களா? அண்ணன் தம்பி தங்கை பாசஉறவுகளில் பெரும் பகையை மூட்டியது யார் ? அதன் பின்னனி என்ன? என்பதன் படத்தின் மீதிக்கதை.
வீராயி மக்கள் குடும்பத்தில் : நடித்தவர் முதல் மகன் வேளாண் ராமமூர்த்தி கம்பீரமான நடையுடன் பாசகார அண்ணாவும், தம்பி ,மாரிமுத்து அண்ணன் சொல்படி நடப்பவர் அண்ணன் மேல் மிகுந்த மரியாதை வைத்திருப்பவர் ,தங்கை தீபா சங்கர் அண்ணன் பாசத்திற்க்காக ஏங்கி தவித்து அழும் காட்சி கல்நெஞ்சையும் கரையவைக்கும் இவர்களுக்கு அம்மாவாக நடித்த பாண்டிய அக்கா நடிப்பு அற்புதம் இவர்கள் அத்தனை பேரும் போட்டி போட்டு நடிப்பை கொடுத்து வாழ்ந்து இருக்கிறார்கள் .
பிரிந்த சொந்தங்கள் அப்பா, சித்தப்பா, அத்தை மீண்டும் ஒன்று சேர்க்க முயற்சிக்கும் காட்சிகளில் சுரேஷ் நந்தாவின் நடிப்பு யதார்த்தம்.
இதில் நடித்த கதாபாத்திரம் மற்றும் ஊர் மக்கள் அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள் .
இன்றைய சினிமாவில் பெரிய நடிகர்கள் ,இயக்குனர்கள் ரத்தத்தை கொப்பளிக்க வச்சி தெறிக்கவிட்டு கொலைகள் செய்வது எப்படி? வித்தியாசமான ஆயுதங்கள் கொண்டு கொலை செய்வது எப்படி? யோசிச்சு பட காட்சிகள் வைக்கிறார்கள். இவர்கள் மத்தியில் அண்ணன்,தம்பி ,தங்கை அம்மா உறவுகளை அழகாகவும் நேர்த்தியாகவும் சொல்லி இருக்கிறார் இயக்குனர் நாகராஜ் கருப்பையா. அவருக்கு வாழ்த்துக்கள் சினிமாவில் நல்ல எதிர்காலம் இருக்கிறது.
ஒளிப்பதிவு :சீனிவாசன் :கிராமத்தின் அழகை அள்ளி தெரித்துள்ளார்
இசை :தீபன் சக்ரவர்த்தி, படத்திற்க்கு பக்கபலமாக இருந்தது.
எடிட்டர் – முகன் வேல், தேவையான காட்சி மட்டும் சேர்த்துள்ளார்.
இப்படத்தில் பணியாற்றிஅனைத்து தொழிற்கல்விகளும் சிறப்பாக தன் பணி செய்துள்ளனர்.
வீராய் மக்கள் உறவுகளின் பாசத்தை உயர்த்தி சொல்லும் அனைவரும் பார்க்க கூடிய படம்.










