Monday, June 22

“சாருகேசி” திரைவிமர்சனம் :

நடிகர்கள்:- ஒய் ஜி மகேந்திரன், சுஹாசினி மணிரத்னம், ராஜ் ஐயப்பா, ரம்யா பாண்டியன், சத்யராஜ், சமுத்திரக்கனி, தலைவாசல் விஜய், மதுவந்தி, தீனா ரித்விக், பிரித்திகா

தொழில்நுட்ப கலைஞர்கள்

தயாரிப்பு: அருண் விஷ{வல்ஸ், மெட்ராஸ் சினி புரொடக்ஷன் மற்றும் ஸ்ரீ அக்ரஹாரம் ராஜலட்சுமி புரொடக்‌ஷன்

இயக்குனர்: சுரேஷ் கிரு​ஷ்ணா இசை இயக்குனர்:  தேவா,ஒளிப்பதிவாளர்: சஞ்சய் பி எல்,வசனம் மற்றும் பாடல்கள்: பா விஜய், கதை: வெங்கட்எடிட்டர் ரிச்சர்ட்  ,மக்கள் தொடர்பு: ரியாஸ் கே.அஹ்மத், பாரஸ் ரியாஸ்

படத்தை பார்ப்போம்

இசை உலகில் கர்நாடக இசையில் புகழ்பெற்ற பாடகராக விளங்கும் ஒருவர், அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்டு தன் நினைவுகளை இழக்கத் தொடங்குகிறார்.சாருகேசியை பற்றி தெரிந்து கொள்ள அவரின் நண்பர் சமுத்திரகனியிடன்  ஒரு பிரபல தொலைக்காட்சி சேனலுக்காக பேட்டி எடுக்க வருகிறார் மதுவந்தி.அவரிடம் வெளிஉலகில் சாருகேசி பெற்ற புகழையும், குடும்பத்தின் உள்ளே நடந்த  சம்பவங்களையும் சொல்லி தொடங்க படம் ஆரம்பமாகிறது. சாருகேசி யாக(ஒய்.ஜி. மகேந்திரா) ஒரு மிகச்சிறந்த கர்நாடக இசை மேதை .இசையே தனது மூச்சாக வாழ்கிறார் இவருடைய மனைவி பாக்கியம் (சுஹாசினி மணிரத்னம்) மகன் ராஜ் ஐயப்பா,  குடும்ப நண்பர் தலைவாசல் விஜய், குடும்பத்திற்குள் பல ஆண்டுகளாக உதவியாளராக உடன் இருக்கிறார் சாருகேசி இவருடை மகனுக்கும் இவருக்கும் ஒத்துவராதா அப்பா மகன் இந்த குடும்பத்தில் மறைந்து கிடக்கும் ரகசியங்கள் மனக்காயங்களை இசை எவ்வாறு இணைக்கிறது என்பது பல திருப்பங்களுடன் படத்தின் மீதிகதை ..

படத்தின் இசை சக்கரவர்த்தியாக பொருத்தமான கதாபாத்திரம்  Y.G மகேந்திரன் பொருந்தும் இவருடைய மனைவியாக சுஹாசினி மணிரத்னம் குடும்பபாசம் கொட்டி கொடுகிறார் முதிர்ச்சியான  நடிப்பை சிறப்பாக நடித்துள்ளார் மற்றும் இவர்களுடன் தலைவாசல்விஜய்,, ராஜ் ஐயப்பா,ரம்யா பாண்டியன்,சிறப்பு தோற்றங்களில் வரும் சத்யராஜ சமுத்திரக்கனி, மதுவந்தி, ஜெயப்பிரகாஷ் ஆகியோரின் பங்களிப்பும் கதைக்கு வலுசேர்க்கிறது. ஆகியோர் தங்களது பாத்திரங்களை நேர்த்தியாக சிறப்பாக நடித்துள்ளனர்

ஒளிப்பதிவாளர் சஞ்சய் பி.எல்., கதையின் உணர்ச்சி ஆழத்தை அழகாக பதிவு செய்துள்ளார். இசைக் கச்சேரி காட்சிகள் மற்றும் குடும்ப உறவுகளை காட்சி ஒளிபதிவு அருமை

எடிட்டர் படத்திற்க்கு தேவையான காட்சிகள் சேர்த்துள்ளார்

இசைய தேவா, தனது அனுபவத்தை முழுமையாக வெளிப்படுத்தியுள்ளார். பாடல்கள் மட்டுமல்லாமல், பின்னணி இசையும் காட்சிகளின் உணர்வை மேலும் வலுப்படுத்துகிறது. இசையே படத்தின் மிகப்பெரிய பலம்.

இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா, அல்சைமர் நோயை வெறும் மருத்துவ பிரச்சனையாக மட்டும் காட்டாமல், அதன் மூலம் குடும்ப உறவுகளை

எந்தவிதமான செயற்கைத் தனமும் இல்லாமல், எளிமையான கதை சொல்லும் முறையில் பார்வையாளர்களை கதைக்குள் இழுத்துச் செல்கிறார்.

கத்தி ரத்தம் கொலை கற்பழிப்பு ஆபாச காட்சிகள் இல்லை

மொத்தத்தில், ‘சாருகேசி’ இசை பிரியர்களுக்குவிருந்து .அனைவரும் பார்க்கலாம்