Thursday, April 16

“லோக” திரைவிமர்சனம்.

வேஃபேரர் பிலிம்ஸ் தயாரித்து ஏஜிஎஸ் சினிமாஸ் வெளியீட்டில் வந்திருக்கும் லோகா அத்தியாயம் ஒன்று சந்திரா படத்தின் கதையை எழுதி இயக்கியிருக்கிறார் டொமினிக் அருண்.

இதில் சந்திராவாக கல்யாணி பிரியதர்ஷன், சன்னியாக (நஸ்லென் கே கஃபூர்), வேணுவாக சந்து சலீம்குமார், நைஜிலாக அருண் குரியன், நாச்சியப்ப கவுடாவாக சாண்டி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

படக்குழுவினர்கள் : ஒளிப்பதிவு : நிமிஷ் ரவி, எடிட்டர் : சாமன் சக்கோ, இசை : ஜேக்ஸ் பிஜாய், தயாரிப்பு வடிவமைப்பாளர் : பங்களான, நிர்வாக தயாரிப்பாளர் : ஜோம் வர்கீஸ், ஸ்டண்ட் : யானிக் பென், கலை : ஜித்து செபாஸ்டியன், ஒப்பனை : ரோனெக்ஸ் சேவியர், ஆடை வடிவமைப்பாளர்கள் : மெல்வி ஜே, அர்ச்​சனா ராவ், பிற மொழி டப்பிங் இயக்குநர் : ஆர்.பி. பாலா (ஆர்.பி. ஸ்டுடியோஸ்), ஒலி வடிவமைப்பு : டான் வின்சென்ட், ஒலி கலவை : ராஜகிருஷ்ணன், பாடலாசிரியர் : சசிகுமார், முரி, ஜெபா டாமி, கெஸ்ட் கம்போசர்ஸ்; : டி.ஜே.சேகர், ஜே.கே, தயாரிப்பு கட்டுப்பாட்டாளர் : வினோஷ் கைமல், ரின்னி திவாகர், தலைமை இணை இயக்குநர் – சுஜித் சுரேஷ், டிஐ வண்ணக்கலைஞர் – யாஷிகா ரௌத்ரே, டிஐ ஸ்டுடியோ – கலர் பிளானட் ஸ்டுடியோஸ், விஷ{வல் எஃபெக்ட்ஸ் – லிட்டில் ஹிப்போ ஸ்டுடியோஸ் – பிக்டோரியல் எஃப்எக்ஸ், அனிமேஷன் – யூனோயன்ஸ் ஸ்டுடியோ, மக்கள் தொடர்பு : நிகில்முருகன்.

படத்தை பார்ப்போம்:

சந்திரா (கல்யாணி பிரியதர்ஷன்) பெங்க ளுருக்கு  அடுக்குமாடி குடியிருப்பில் புதிதாக குடியேறுகிறாள்  வெயிலின் தாக்கம் பட்டால் அவரது சருமம் பொசுங்கி புண்ணாகி விடும் . அதனால் இரவில் மட்டுமே வெளியே வரும் சந்திரா ஒரு ஓட்டலில் வேலை செய்கிறாள் இவள் கண்முன்னே யாராவது அப்பாவிகளை துன்புறுத்தினால்   அவர்களை அடித்து கை ,கால் உடைத்து துரத்தி விடுவாள் இவளாள் பாதிக்கப்பட்டவன் அந்த ஏரியாவின் தாதா இவர்கள் செய்யும் தொழில் தனியாக வருபவர்கள்  ஆண் /பெண்களை மயக்க ஊசி போட்டு ஆட்டோவில் தூக்கி எடுத்துட்டு போய்டுவார்கள் அவர்களின் உடல் உறுப்புகளை திருடி விற்க்கும் கும்பல் இவை அனைத்தும்  போலீஸ் உதவியுடன் ஜோரா நடக்கிறது இந்த கும்பல் போலீஸ் உதவியுடன் சந்திரா தீர்த்துகட்ட  பின் தொடர்கிறார்கள் சந்திரா நடவடிக்கையில் சந்தேகம் போலீஸ்க்கு அவள் இல்லாத நேரம் பார்த்து அவள் தங்கியிருக்கும் வீட்டு குள் போலீஸ் (SI எஸ்ஐ) நுழைத்து வீட்டை சோதனை செய்கிறார்  வெளியே சென்ற சந்திரா வீட்டுக்கு வருகிறாள் வீட்டுக்குள் யாரோ இருப்பதை அறிகிறாள்  இருவருக்கும் சண்டை போலீஸ் கழுத்தில் சந்திரா கடித்து விடுகிறாள் போலீஸ் (நாச்சியப்பா கவுடா ) தன் உடல் நிலையில் மாற்றத்தை உணர்கிறார். ஒரு பக்க்கம் சந்திரா பழிவாங்க துடிக்கிறார் இன்னொரு பக்கம் நான்தான் இந்த உலகத்தை ஆட்சி செய்வேன்.

சந்திரா பற்றி பிளாஷ்பேக்:

சந்திராவின் பூர்வீகம் முன்னோர்கள்  ஒரு காட்டில் வாழ்ந்துள்ளனர் இவர்களை அந்த நாட்டு மன்னர்  அழித்து விட்டார் சந்திரா   சின்ன வயசில் “Super power” சூப்பர் பவர் அவள் உடம்பில் உருவாகிறது இதனால் இவள் யாரையும் கடித்தால் அவர்களின் உடம்பில் சில மாற்றங்கள் ஏற்படும் அப்படி தன் போலீஸ் கழுத்தை கடித்ததால் அவர் உடம்பில் மாற்றம் ஏற்படுகிறது..

மீண்டும் படத்தை பார்ப்போம்:  

சந்திரா குடியிருந்த அடுக்குகுடியிருப்பில்  எதிர்  வசிக்கும். இளம்வாலிப பசங்க ..தியாகராஜா வேணு (சந்து சலீம்குமார்) மற்றும் நைஜி (அருண் குரியன்) சந்திராவின் எந்த வேலைக்கும் போகாமல் நண்பர்கள்  இதில் சந்திராவை காதலிக்க போட்டி போடுவார்கள் சன்னி தற்செயலாக சந்திராவை பார்த்து பிடித்து போக, அவளுடன் பழக முற்படுகிறான். முதலில் தயங்கும் சந்திரா பின்னர் சன்னியுடன் பழகுகிறாள். கொஞ்ச நாள் கழித்த உடன் சந்திராவின் நடவடிக்கை பார்த்து சன்னி பயப்பிடுகிறான் சன்னி மற்றும் நண்பர்களுக்கும் ஆபத்து ஏற்படுகிறது. இவர்கள் அனைவரும் உயிரோடு தப்பித்தார்களா? நாச்சியப்பா சந்திராவிற்கு எதிராக பெரிய தீய சக்தியாக உருவாகி என்ன செய்தார்? சந்திராவால் அதை முறியடிக்க முடிந்ததா? சந்திராவின் கடந்த கால ரகசியங்களால் நிகழ்காலத்தில் என்ன நடக்கிறது? என்பதே படத்தின் மீதிக்கதை.

கல்யாணி அப்படியே அந்த சந்திரா கதாபாத்திரத்தில் பொருந்தி போகிறார், ஆரம்பத்தில் தன் சக்தி வெளியே தெரியகூடாது என அவர் பொறுத்து பொறுத்து சென்றாலும், ஒரு கட்டத்தில் அவர் தன் சக்தியை வெளிக்கொண்டு வரும் இடம் மாஸ் நடிகர்களுக்கு இணையான காட்சி.கல்யாணியும் ஹீரோக்களுக்கு நிகராக ஸ்டெண்ட் காட்சியில் கலக்கியுள்ளார்.

வில்லன் போல் இதில் வருவது சாண்டி டான்ஸ் மாஸ்டர் தான், அவரும் படம் முழுவதும் ஒரு ஆணாதிக்க திமிருடன் வருவது, அதோடு வாம்பயர் பவர் அவருக்கு வர, அவர் எடுக்கும் முடிவுகள் என சாண்டி தன்னால் முடிந்த பங்கை சிறப்பாக செய்துள்ளார்,

கல்யாணியை காதலிக்குக் கதாபாத்திரத்தில் நஸ்லான், ஏதோ காமெடியன் போல தான் படம் முழுவதும் வந்து செல்கிறார், ஆரம்பத்தில் கல்யாணியை இம்பரஸ் செய்ய அவர் செய்யும் வேலைகள், கடைசியில் அவர் வாம்பயர் என தெரிந்து அலறும் காட்சிகள் ரசிக்க வைக்கிறது.

மற்றும் இப்படத்தில் நடித்த அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர்

ஒளிப்பதிவு, இசை , எடிட்டர்என அனைத்திலும் செம ஸ்கோர் செய்ய, ஸ்டெண்ட் காட்சிகள் மிரட்டியுள்ளனர்.

இந்த சிறு பட்ஜெட்டில் இப்படி ஒரு குவாலிட்டியான படங்களை கொடுக்கிறார்கள் என்ற ஆச்சரியம் உள்ளது,

படத்தின் முதல் பாதி என்ன, என்ன என்ற ஆர்வத்தை தூண்டி, இரண்டாம் பாதியில் ஒரு கட்டத்திற்கு மேல் பெரிய திருப்பம் என்றில்லாமல், எல்லாமே நாம் எதிர்பார்த்தது போலவே தான் முடிகிறது, இப்படம் பார்க்கலாம்

.