Sunday, July 26

“அனந்தன் காடு” திரை விமர்சனம்.

ஆர்யா நடிப்பில் ஜியென் கிருஷ்ணகுமார் இயக்கத்தில் ஜூன் 25, 2026 அன்று வெளியான  இது மலையாளத்தில் எடுக்கப்பட்டு தமிழில் டப் செய்து வெளியாகியுள்ளது.  அனந்தன் காடு அரசியல், பழிவாங்கல் மற்றும் இலங்கைப் போர் பின்னணியை மையமாகக் கொண்ட திரைப்படம

படத்தை பார்ப்போம்;

கோவாவில் தனது மகளின் திருமண நிச்சயதார்த்தத்தை வில்லன் சுனில் நடத்திக்கொண்டிருக்கிறார். அப்போது இளைஞர்கள் சிலர் சுனிலை துப்பாக்கி முனையில் சிறைபிடிக்கின்றனர். இவர்கள் யார்? எதற்காக சுனிலை துப்பாக்கி முனையில் பிடித்து வைத்துள்ளனர் என்பதை பிளாஷ் பேக் ஆரம்ப ஆகிறது ..

.கதைக்களம் இலங்கையில் 1980 மற்றும் 90களில் நடந்த போரில் தனது குடும்பத்தை இழக்கும் தமிழ் போராளி ஆர்யா, அங்கிருந்து தப்பித்து இந்தியா வருகிறார்.

அதே நேரத்தில் கேரளாவில் உள்ள முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் இந்திரன்ஸ் தலைமையில் கூலிப்படை இயங்கி வருகிறது. இவர்கள் முதலமைச்சரின்  விருப்பத்திற்கு எதிராக செயல்படுபவர்களை கொலை செய்வது இவர்களின் வேலை இவர்கள் மீது இருந்த கொலை வழக்கு ஆவனங்களை போலீஸ் தீயிட்டு எரித்தது ஆனால், ஒரு கட்டத்தில் இனி இந்த மாதிரியான கொலை விஷயங்களை செய்யமாட்டோம் என முடிவு செய்து இந்திரன்ஸ் குழு ,விழாவில் பாட்டு பாடும் கச்சேரி குழுவை நடத்தி வருகின்றனர் . ஆர்யா  அவருக்கு அடைக்கலம் கொடுக்கிறார்கள்.அதே நேரத்தில், அரசியல் மற்றும் அதிகார பின்னணியில் நடைபெறும் ஒரு கொலை சதியில் ஆர்யா எதிர்பாராத விதமாக சிக்கிக்கொள்கிறார். இவர்களின் வாழ்க்கையும், வில்லன் சுனில் சந்திக்கும் பிரச்சனைகளும் என்பதே பல திருபங்களுடன்  என்பதே படத்தின் மீதிக் கதையாகும்

ஆர்யா தமிழ் போராளியாக கதாபாத்திரத்தில்  வழக்கத்திற்கு மாறான அதிரடி ஆக்ஷன் தூள் கிளம்புகிறார்  இந்திரன்ஸ் சிறப்பாக நடித்துள்ளார்.மற்றும் சுனிலின் வில்லத்தனம் படத்திற்கு பலம் சேர்த்துள்ளது இவர்களுடன் . முரளி கோபி, அக்‌ஷய்குமார், தேவ் மோகன், போஸ் வெங்கட் போன்றோரின் நடிப்பிலும் குறை எதுவும் இல்லை.இப்படத்தில் நடித்த அனைவரும் சிறப்பு; தொழில்நுட்பம்: ஒளிப்பதிவாளர் யுவாவின் கேமரா காட்சிகள் நேர்த்தியாகவும், அஜனீஷ் லோக்நாத்தின் பின்னணி இசையும் படத்திற்கு நல்ல பலம் சேர்த்துள்ளது

.திரைக்கதை: முரளி கோபியின் எழுத்தில் உருவான திரைக்கதை மிகவும் குழப்பமாகவும், சுவாரஸ்யமில்லாமலும் உள்ளது.அரசியல்: படத்தின் மையக்கதையான அரசியல் மற்றும் ஈழப் பின்னணிக்கு முறையான நியாயம்சேர்க்கப்படவில்லை.முடிவு

தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் நடிகர்களின் உழைப்பு நன்றாக இருந்தாலும், படம் விறுவிறுப்பாக நகர்ந்தாலும் பலவீனமான திரைக்கதை .

‘அனந்தன் காடு’ திரைப்படம் பார்வையாளர்களை முழுமையாகக் கவரத் தவறிவிட்டது. உங்கள் முயற்சி பாராட்டு