
ராதா பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஜி.ஆர். மதன் கிருஷ்ணன் தயாரித்திருக்கும் ஐபிஎல் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் கருணாநிதி
இதில் யூடியுப் பிரபலமான டிடிஎஃப் வாசன் நாயகனாக அறிமுகம் கிஷோர், அபிராமி, குஷிதா கல்லாப்பு, ஆடுகளம் நரேன், திலீபன், ஜான் விஜய், போஸ் வெங்கட், சிங்கம்புலி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
படக்குழுவினர்கள்:-இசையமைப்பாளர்: அஸ்வின் விநாயகமூர்த்தி, ஒளிப்பதிவாளர்: எஸ்.பிச்சுமணி, , எடிட்டர்: பிரகாஷ் மப்பு, அதிரடி: தினேஷ் சுப்பராயன், மக்கள் தொடர்பு: நிகில் முருகன்
படத்தை பார்ப்போம்:
ஒரு டிராவல் கம்பெனியில் கேப் டிரைவராக பணிபுரியும் நடுத்தர வர்க்க மனிதரான கிஷோர் சிறு பிரச்சனையில் வேலையை விட்டு அவரது மனைவி அபிராமி தன் நகைகளை அடமானம் வைத்து சொந்தமாக கார் வாங்கி கால்டாக்ஸி ஓட்டி வருகிறார். இவருடைய தங்கையை ஃபுட் டெலிவரி செய்து வரும் டிடிஎஃப் வாசனை காதலிக்கிறார் இவர்களின் காதலுக்கு கிஷோர் கடும் எதிர்ப்பு
திடீர் கிஷோருக்கு விபத்து ஏற்பட்டு காலில் அடிபடுகிறது. எலும்பு முறிவு இதனால் கார் ஓட்ட முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது.
தனது காரை வாடகைக்கு விடுகிறார். அந்த வாடகை கார் ஒட்டுனரால் பெரிய ஆபத்தில் சிக்கி கொள்கிறார். போலீஸ் அதிகாரியாக இருக்கும் போஸ் வெங்கட், லாக்கப்பில் ஒருவரை அடித்து கொன்று விடுகிறார். இந்த பழியை கிஷோர் மீது சுமத்தி அவரை சிக்க வைக்கிறார். குற்றத்தை ஒப்புக் கொண்டு கையெழுத்திடுகிறார்.பின் நீதிமன்றம் கொண்டு செல்கிறது வழக்கு விசாரணனை நடைபெறுகிறது நீதி கிடைத்ததா… தண்டனை கிடைத்ததா ? கிஷோர் லாக்காப் மரணம் குற்றத்தை ஒப்பு கொண்டு கையெழுத்திட காரணம் என்ன..? லாக்காப்பில் இறந்தவருக்கும் இவருக்கும் என்ன தொடர்பு TTF வாசன் கிஷோர் தங்கையை கரம் பிடித்தாரா..படத்தின் மீதி கதை…
டிடிஎஃப் வாசன் நாயகனாக அறிமுகமானாலும் இப்படத்தில் அவரது நடிப்பை வெளிப்படுத்த போதுமான வாய்ப்பு வழங்கப்படவில்லை.சிங்கம் புலி , போஸ்வெங்கட் ஆகியோர் அவரவர் கதாபாத்திரங்களில் சிறப்பாக நடித்துள்ளார்கள்.
இசை அஸ்வின் விநாயகமூர்த்தி இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணிசையில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம். ஒளிப்பதிவு பிச்சுமணியின் காட்சி ரசிக்க முடிகிறது.
எடிட்டர்: பிரகாஷ் மப்பு, படத்திற்க்கு தேவையான காட்சிகள் மட்டும் சேர்த்துள்ளார்
தினேஷ் சுப்பராயனின் சண்டை காட்சிகள் TTF வாசன் பைக் துரத்துக் காட்களில் சிறப்பாக உள்ளது
லாக்கப் டெத்தை பல திடுக்கிடும் சம்பங்கள் மையமாக வைத்து படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் கருணாநிதி.முதல் பாதி திரைக்கதை இரண்டாம் பாதி திரைக்கதை இன்னும் கவனம் செலுத்திருக்க வேண்டும் உங்கள் முயற்ச்சி பாராட்டுகள்.










