Friday, September 11

“கார்மேனி செல்வம்” திரை விமர்சனம்

அருண் ரங்கராஜுலு தயாரித்திருக்கும் கார்மேனி செல்வம் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் ராம் சக்ரி.

இதில் பி.சமுத்திரக்கனி – செல்வம், லக்ஷ்மி பிரியா சந்திரமௌலி – சாந்தி, கரண் சக்கரவர்த்தி – பாலு, கௌதம் வாசுதேவ் மேனன் – சம்பத், அபிநயா – தேவி, படவா கோபி – பாலன், கார்த்திக் குமார் – வசந்த், கோதண்டம் – பிளாட் சுந்தரம், மதுமிதா – ப்ரீத்தி, அர்ஜுனன் – பாண்டியன், ஹரிதா பரகோட் – ரீனா, ஜெயந்தி – அபிராமி, மற்றும் பலர் நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள் கிரியேட்டிவ் தயாரிப்பாளர் – ஸ்ரீ சரவணன், ஒளிப்பதிவாள​ர் – யுவராஜ் தக்ஷன், எடிட்டிர்– ஜெகன் ஆர் வி – தினேஷ் எஸ், பாடல் வரிகள் – மணி அமுதவன், உமா தேவி கே, நடன இயக்குனர் ஹரிஷ் கார்த்திக்,   மக்கள் தொடர்பு – நிகில் முருகன்

படத்தை பார்ப்போம்.

சமுத்திரக்கனி தன் மனைவி லக்ஷ்மி பிரியா மற்றும் மகன் பாலுவுடன் கடற்கரையோரம் ஒரு சிறிய வீடு சந்தோசமா வாழ்க்கை  பக்கத்தில் சிறிய தள்ளுவண்டியில் டிபன் கடை நடத்தி வருகிறார் லஷ்மி பிரியா சமுத்திரகனி கார் டிரைவர் பணக்காரர் கெளதம் மேனனிடம்  டிரைவராக வேலை செய்கிறார்   மிகவும் விசுவாசமாக அவர்களின் குடும்பத்தில ஒருவராக  இருக்கிறார். ஒரு நாள் கௌதம் மேனன் தன் மகளுடன் அயல் நாடு செல்கிறார். கெளதம் மேனன் சொந்தமான காரை கால்டாக்சி காராக மாற்றி ஓட்டுகிறார் சமுத்திரகனி. கடன் வாங்கி ஆடம்பரமாக செலவு செய்கிறார். கடன் வாங்கிய தனது மச்சானால் அவமானப்படுத்த படுகிறார். ஒரு கட்டத்தில் வேறு வழியில்லாமல் பணம் சம்பாதிக்க ஷார்ஜா செல்கிறார். சமுத்திரகனி வெளிநாட்டில் பணம் சம்பாதித்து கடனை அடைத்தாரா? கெளதம் மேனனுக்கு இவர் தனது காரை கால்டாக்சியாக பயன் படுத்திய விஷியம் தெரிந்ததா? பல திருபங்களுடன் படத்தின் மீதிகதை

சமுத்திரக்கனி, வழக்கமான அறிவுரை சொல்லும் கதாபாத்திரங்களில் இருந்து விலகி, ஒரு சராசரி மனிதனின் தவிப்பை, குற்ற உணர்வை, இயலாமையை மிக நேர்த்தியாக வெளிப்படுத்தியுள்ளார்.

லட்சுமி பிரியா சந்திரமௌலி, ஒரு நடுதர குடும்பத்தின் பொறுப்பான குடும்பத் தலைவியாக, பல கனவுகளுக்கு இடையே  போராடும் பெண்ணின் மனநிலையை மிகச் சிறப்பாகக் வெளியத்தியுள்ளார்

மற்றும் இவர்களுடன் நடித்த  நடிகர்களில் கௌதம் மேனன் மற்றும் அபிநயா ஆகியோர் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட துணை கதா பாத்திரங்களிலும் சிறப்பாக நடித்துள்ளனர்

யுவராஜ் தக்ஷனின் கேமரா, சென்னை போன்ற மாநகரத்தின் நெருக்கடியையும், ஒரு நடுத்தர குடும்பத்தின் வீட்டையும்  கடற்கரையோரம் பகுதியையும் அப்படியே கண்முன் நிறுத்துகிறது. ராமானுஜத்தின் பின்னணி இசை, படத்திற்க்கு பெரிய பலம்

கார்மேனி செல்வம் படத்தின் திரைக்கதையையும் நேர்த்தியாக சிறப்பாக அமைத்திருந்தால் ஒரு நடுத்தர குடும்ப வாழ்க்கை.கதையை சிறப்பாக சொன்னதற்காக பாராட்டலாம்  இப்படத்தை பார்க்கலாம்.