
நடிகர்கள் :-விது – (சத்யா) ப்ரீத்தி ஆஸ்ராணி – (விஜி )அவினாஷ் – (மணி)மாஸ்டர் மகேந்திரன் – (சந்தோஷ்) கிரண் – (வசந்த்)
சிந்து ஷ்யாம் – விஜி அம்மாவாக
பிரேம்குமார் – குருநிலா கதிரவன்
ஆதிரா பாண்டியலட்சுமி பாண்டியலட்சுமி,
தயாரிப்பு நிறுவனம் : ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ – ஜி ஸ்குவாட்
தயாரிப்பாளர்கள் _கார்த்திகேயன்.எஸ் – லோகேஷ் கனகராஜ்
எழுதி இயக்கியவர் – ரத்ன குமார்
ஒளிப்பதிவாளர் – மாதேஷ் மாணிக்கம்
எடிட்டர் – ஆர் எஸ் சதீஷ் குமார்
கலை – சண்முகராஜ்
இசை – ஷான் ரோல்டன்
பாடல் வரிகள் – உமா தேவி , பாக்கியம் சங்கர், மோகன் ராஜா, ரத்ன குமார், ஷான் ரோல்டன்
ஸ்டண்ட்ஸ் – டான் அசோக்
நடன இயக்குனர் – லீலாவதி, ஷெரிப் எம் ,மக்கள் தொடர்பு – சதீஷ் எஸ்2 மீடியா
படத்தை பார்ப்போம் :
29 வயதான கதாநாயகன் விது நடுதர குடும்பம் ஒரு பட்டதாரி தன் சொந்த கிராமத்தை விட்டு வேலை தேடி சென்னைக்கு வருகிறார், தனியார் தங்குவிடுதியில் மற்றும் வீட்டின் மொட்டை மாடியில் இருக்கும் ரூம்மில் ( Room-ல்) நண்பர்களுடன் தங்குகிறார் தனியார் தம்பெனியில் வேலை கிடைக்கிறது கதாநாயகி சிறியவதில் அப்பாவை பிரிந்து அம்மா வளர்ப்பில் வாழும் நாயகி ப்ரீத்தி அஸ்ராணி ஐஏஎஸ் ஆக வேண்டும் என்று ஒரு இலட்சியத்துடன் வாழ்கிறார் கதாநாயகனும் கதா நாயகியும் ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்கிறார்கள் இருவரும் நட்பாக பழக ஆரம்பித்து அதுவே காதலாக மலர்ந்தது படுக்கைவரை சென்றது திடீர் இருவரும் பிரிகிறார்கள் நாயகன் சொந்த ஊருக்கு செல்கிறார் அங்கு சமூகசேவை ஈடுபடும் நாயகன் அங்குள்ள கிராமத்து ஏரியை சுத்தம் செய்கிறார் அந்த ஊரில் கல்லூரி நடத்தும் பெரிய பணக்கார் பிரச்சனையால் போலீஸ் கைது செய்து சிறையில் அடைக்கிறது சிறையிலே நாயகனை கொலை செய்ய காவல்துறை அதிகாரி திட்டம் போடுகிறார் இந்த திட்டத்தில் நாயகன் கொலை செய்யபட்டாரா ? சிறையவிருந்து வெளியே வந்தாரா? இல்லையா ? நாயகியுடன் இணைந்தாரா? பல கேள்விகளுக்கு பல் திருப்பங்களுடன் படத்தின் மீதி கதை
நாயகன் விது 29 வயது இளைஞன் ஒருவன் கல்யாண ஆகாமல் தன் குடும்பம் தனக்கான அடையாளத்தை தேடுவேது உருவாக்குவது அங்கு சந்திக்கும் பிரச்சனை அவமானம் , சிறை வாழ்க்கை அதை எதிர்கொள்வதும் காதலி கிடைத்ததும் ஏற்படும் சந்தோஷம், காதல் தோல்வி , விரகத்தியில் கலாட்டா கல்லூரி காலத்தில் வில்லன் மீண்டும் சந்தித்து அவனிடம் மோதுவது எல்லாமே நம் ஊரு கிராமத்து பையன் பார்த்தது போல் இருந்தது டான்ஸ், ஆக் ஷன் அனைத்திலும் சூப்பர் சிறப்பான நடிப்பை வெளிபடுத்தி அசத்திட்டார். திரையுலகில் நல்ல எதிர்காலம் உள்ளது
நாயகி ப்ரீத்தி ஆஸ்ராணி தமிழ் சினிமாவிற்கு கிடைத்துள்ள திறமையான நடிகை. காதலியாகவும், விதுவுடன் எல்லை மீறும் காட்சிகள் பார்வையாளர்கள் ஏக்கத்தை எதிர்ப்பார்ப்பையும் எல்லை மீறாமல் கொடுத்துள்ளார் பல காட்சிகள் கண்களில் பேச வைக்கும் நடிகையாகவும் அசத்தியிருக்கிறார். பல காட்சிகளில் காதல், எமோஷன் அனைத்திலும் சிறப்பாள நடிப்பை கொடுத்துள்ளார். திரையுலகில் நல்ல வரவேற்பை பெறுவார்
மகேந்திரன் வில்லன் கதாபாத்திரத்தில் சில காட்சிகள் வந்தாலும், கதையின் ஓட்டத்திற்க்கு தேவையான பங்கிளை சிறப்பாக கொடுத்துள்ளார்.
விதுவின் ( Roommet )ரூம் நண்பராக வருபவர், நாயகனின் அம்மாவாக வரும் ஆதிரா பாண்டியலட்சுமி, நாயகியின் அம்மாவாக சிந்து ஷியாம் உள்ளிட்ட மற்ற கதாபாத்திரங்களும் சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளார்
இசை இந்த படத்திற்கு மிகப்பெரிய பலம் மெல்லிசையால் நம் மனதை நெருங்கி வருடுகிறது.
ஒளிப்பதிவுச் சிறப்பாக அமைந்துள்ளது படத்தில் அடிக்கடி மழைக்காட்சி வருகிறது இயக்குநரின் எண்ணங்களை காட்சியாக மாற்றும் திறமையான ஒளிப்பதிவாளர் வாழ்த்துக்கள்
இயக்குனர் ரத்னகுமார் இன்றைய காலகட்டத்திற்க்கு தேவையான கதை காதலர்கள் காதலிக்கும் போது அவர்களை சுற்றியிருக்கும் உறவுகள் அவர்கள் லட்சியங்கள் , அடையாளங்கள் தொலைந்து போகிறது காதலர்கள் வாழ்க்கையில் என்ன நடக்கும் ஒருவனின் சாதனை என்பது அழகான பெண் காதலியாக கிடைத்துவிட்டால் அதுவே அடையாளம் அல்ல அவனின் அடையாளம் இந்த உலகத்திற்க்கு அறிய பட வேண்டியவையாக இருக்கனும் என்பதை அழகாக நேர்த்தியாக சொல்லியிருக்கிறார். பாராட்டு இடைவேளை பின் காதலர் சந்திப்பு உரையாடல் அதிகம் கொஞ்சம் குறைந்துயிருக்கலாம் காதலை மிகவும் எதார்த்தமாக சொல்லியிருக்கிறார்
இந்தபடம் காதலர்கள் ஜாலியாகவும் ரொமன்ஸ் எல்லாம் அளவாக தான் இருக்கும் சில காட்சிகளில் உதிர்ந்த வசனங்கள் ரசிக்கும் படியாக இருந்தது இயக்குனர் முயிற்சி பாராட்டுகள்
இப்படம் காதலர்கள் பார்க்கவேண்டிய படம்
ரேட்டிங் : 3. /










