
கந்தர்வா செல்லுலாய்ட்ஸ் கிரியேட்டர்ஸ் சார்பில் கிருத்திகா காந்தி தயாரித்து, கதை, திரைக்கதை, வசனம், பாடல் வரிகள், இசையுடன் ஆர்.கே. திவாகர் இயக்கி இருக்கும் படம் கீனோ.
இதில் மகாதாரா பகவத், மாஸ்டர் கந்தர்வா, ரேணுகா சதீஷ், கண்ணதாசன், ராஜேஷ் கோபிஷெட்டி, மாஸ்டர் சிவ சுகுந்த், சுந்தர் அண்ணாமலை, சிவம் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
படக்குழுவினர்கள் : ஒளிப்பதிவு: ஆலிவர் டேனி, படத்தொகுப்பு : கிருத்திகா காந்தி,மக்கள் தொடர்பு : பெரு துளசி பழனிவேல்.
தமிழ் சினிமாவில் குழந்தைகளை மையமாக கொண்டு பல படங்கள் வெளிவந்துள்ளது அந்த வரிசையில். . கீனோ படமும்
படத்தைப் பற்றி பேசுவோம்
நடுத்தரகுடும்பம் அழகான வாழ்க்கை கணவன் /மனைவி /13 வயதில் ஒரு மகன் மகாதாரா பகவத் கார்ஷோரூம் வேலை பார்க்கிறார், மனைவி ரேணு சதீஷ்,ஹவுஸ் வைஃப் ஆக இருக்கிறாங்க மகன் 13 வயது மாஸ்டர் கந்தர்வா பள்ளிக்கு செல்கிறான் இந்த குடும்பம் தான் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரம் இவர்கள் வீட்டில் ஆடம்பர பொருள்களோ இல்லை மிகவும் சிக்கனமாக வாழ்க்கை இருந்தாலும் மகிழ்ச்சியில் வாழ்கின்றனர். ஒரு நாள் இரவு மகனை மாடியில் இருக்கும் துணியை எடுத்து வா அம்மா அனுப்ப, அங்கே கீனோ என்ற மனிதன் வித்தியாசமான தலையுடன் கூடிய உருவம் தன்னை அழைப்பதை பார்த்து பயந்து கிழே வந்து விடுகிறான். அம்மா நடந்ததை சொல்ல, ஒன்றுமில்லை என்று அம்மா சமாதானப்படுத்தி தூங்க வைக்கிறார். அன்று முதல் கந்தர்வா எங்கு சென்றாலும் பின் தொடர்ந்து வந்து பயமுறுத்தி கீனோ மறைந்து விடும் கீனோவினால் பாதிக்கப்படுகிறான்.இப்படியாக சில நாட்கள் கடந்து விடுகின்றன பையன் தன் பாட நோட்டு புத்தகத்தில் கீனோ படத்தை வரைந்து வைக்கிறான் இது அப்பாவும் பார்த்து விடுகிறார்கள் மகனின் அம்மா வெளிநாட்டு மோகம் கொண்டவர் வெளிநாடு வேலையும் கிடைத்து வெளிநாட்டில் சென்று விட்டார் மகனையும் கணவனையும் .அப்பப்ப வீடியோ போன் காலில் மகனையும் கணவன் நலம் விசாரிப்பார் பையன் நிலமை அப்படியே தான் இருக்கிறது வீட்டில் பூஜை அமானுஷ்ய தீயசக்திகள் இருப்பதாகவும் அதை விரட்டுவதற்கு சிலர் வருகிறார்கள் வந்தவர்கள் இந்த வீட்டில் எந்த தீய சக்தியும் இல்லை என்று சொல்லிவிட்டு போய்விடுவார்கள் இந்நிலையில் யார் இந்த கீனோ? எதற்காக கந்தர்வாவை மட்டும் பயமுறுத்துகிறது? என்ன காரணம்? பெற்றோரால் கந்தர்வாவின் பிரச்சனைக்கு தீர்வு காண முடிந்ததா? என்பதே படத்தின் மீதி கதை
மகாதாராபகவத் பையனுக்கு அப்பாவாக நடுதரகுடும்பத்தைச் சார்ந்த மக்களின் எதார்த்தமான வாழ்க்கையை நடிப்பு மூலம் கொடுத்திருக்கிறார்
ரேணுகா சதீஷ் : பையனுக்கு அம்மாவாக நடுதரகுடும்பத்தைச் சார்ந்த பெண்கள் புதிய வீடு வாங்கணும் கார் வாங்கணும் மிகப்பெரிய ஆசையுடன் பெரிய கனவு வாழ்க்கை நடிப்பு மூலம் நல்ல கொடுத்து இருக்கிறார்.
மாஸ்டர் கந்தர்வா, கீனோ பார்த்த பயப்படுறதும் அதனால் ஏற்படும் மனப்பிரச்சனையும் நல்ல நடிப்பு மூலம் கொடுத்திருக்கிறார்
மற்றும் படத்தில் நடித்த அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர்
தொழில்நுட்ப கலைஞர்கள்
ஒளிப்பதிவு: ஆலிவர் டேனி, சிறப்பாக தன் பணியை செய்துள்ளார் : எடிட்டர் கிருத்திகா காந்தி, படத்திற்க்கு தேவையான காட்சி மட்டும் இணைத்து கொடுத்துள்ளார்.
கதை, திரைக்கதை, வசனம், பாடல் வரிகள், இசையுடன் ஆர்.கே. திவாகர் இயக்கி இருக்கும் படம் கீனோ.பல வெற்றிடங்களை காட்டி அப்பப்ப நம்மை பயமுறுத்துகிறார் இப்படம் அனைவரும் பார்க்கலாம் பயமின்றி பார்க்கலாம் பொறுமை காக்க வேணும்.










