Sunday, May 31

“என் காதலே” திரைப்பட விமர்சனம்.

ஸ்கை வான்டர்ஸ்; என்டர்டெயின்மென்ட் சார்பில் ஜெயலட்சுமி தயாரித்து எழுதி இயக்கியிருக்கும் படம் என் காதலே.

இதில் லிங்கேஷ், திவ்யா தாமஸ், லியா, காட்பாடி ராஜன், மாறன், கஞ்சா கருப்பு, மதுசூதனன், தர்ஷன் ஆகியோர் நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள்:-நிர்வாக தயாரிப்பாளர் – காட்பாடி ராஜன், ஒளிப்பதிவு – மூடர்கூடம் புகழ் டோனி ஜான், இசை – சாண்டி சாண்டெல்லோ, எடிட்டிங் – தனி ஒருவன் படப்புகழ் கோபி கிருஷ்ணா, பாடல்கள் – கபிலன், சந்துரு, ஜெயலட்சுமி , பாடியவர்கள் – ஸ்வேதா மோகன், சைந்தவி, ஸ்ரீதர் சேனா, திலீப் வர்மன் ( மலேசியா ) , அனிதா ஷேக், மக்கள் தொடர்பு – வேலு

மீனவ குப்பத்தில் பெரிய மனிதராக வலம் வருபவர் மதுசூதனன். அவரின் தங்கை      ம​கன் லிங்கேஷ். சிறு வயதில் சுனாமி பேரலையில் அப்பா அம்மா வை இழந்த  லிங்கேஷை தன் சொந்த மகன் போல் பாசம் காட்டி வளர்கிறார் தாய்மாமன் மதுசூதனன். மாமனுக்கு ஒரே மகள் திவ்யா இவள்  லிங்கேஷ் மீது அளவு கடந்த பாசம் காதலும் வைத்துள்ளார் லிங்கேஷ்க்கு யாராவது முத்தம் கொடுத்தால் அவுங்க சின்ன 6 வயது பெண் குழந்தை கூட முத்தம் கொடுத்தாலும் இவளுக்கு பிடிக்காது. அவன் மீது கண் முடித்தனமான  காதல் பாசத்தை வைத்துள்ளாள்  லிங்கேஷ் மாமன் பக்கபலமாக  தன் குடும்பமாக நினைத்து பாசத்துடன் இருந்து மீன்பிடி தொழிலையும் செய்து வருகிறார். இந்நிலையில் மீனவ சமுதாயத்தை பற்றி ஆய்வு செய்து தெரிந்து கொள்ள லண்டனிலிருந்து லியா மற்றும் அவரது நண்பர்கள் மீன குப்பத்திற்க்கு வருகின்றனர். அவர்களுக்கு வேண்டிய உதவிகள் செய்யுமாறும்,  மாமன் லிங்கேஷிடம் கூறுகிறார். வெளிநாட்டவர்களுக்கு வழிகாட்டியாகவும், தமிழக கலாச்சாரத்தை பற்றி சொல்ல லிங்கேஷ் இவர்களுடன் பயணிக்கிறார்   முதலில் லிங்கேஷின்  பிடிக்காத லியா பின்னர் லிங்கேஷின் நல்ல  மனதையும் குப்பத்து மக்கள் லிங்கிலீஷ் மீது வைத்திருக்கும் மரியாதை பார்த்ததும் தெரிந்து  கொண்டதும் லிங்கேஷ் மீது இவளுக்கு அவன் மீது மரியாதை காதலும். வருகிறது ஒன்றாக ஊர் சுற்றுகிறார்கள்  .ஊர் மக்களும் அங்கங்க பார்க்கிறார்கள் இருவரும் காதலிக்க தொடங்குகின்றனர். இந்த காதல் விஷயம் மெல்ல திவ்யாவுக்கு தெரிய வர  லிங்கேஷ்யிடம். திவ்யா மறைமுகமாக தன் காதலை வெளிப்படுத்துகிறார் தன்னை காதலிப்பதை அறிந்து அதிர்ச்சியாகும் லிங்கேஷ் காதலை ஏற்க மறுக்கிறார். விஷயம் கேள்விப்பட்ட மாமன் மதுசூதனன் லிங்கேஷ்-லியா காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து  ஊர் பஞ்சாயத்தை கூட்டி லிங்கேஷ்-லியா பிரித்து விடுகிறார். அதன் பின் லியா திடீர் காணவில்லை என்ன நடந்தது? – லியா எங்கு போனார் ! லிங்கேஷ் யாரை திருமணம் செய்து ? திவ்யா. திருமணம் நடந்ததா ? என்பதே படத்தின் மீதிக்கதை.

மீனவ இளைஞராக லிங்கேஷ்   தான் மீன்பிடி தொழிலை செய்பவராக வருவதும், அதன்  வெளிநாட்டினருடன் இணைந்து வரும் காட்சிகள்   காதலியை பிரிந்து தவிக்கும் காட்சிகளிலும் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

மாமன் மகளாக திவ்யா காதலை சொல்ல தவிப்பதும், மாமனின் காதலை கேள்விப்பட்டு வெளிப்படுத்தும் கோபம்,  கதறி துடிப்பதும்,  கிராமத்து பெண்ணாக  இயல்பான நடிப்பை கொடுத்திருக்கிறார்.

தமிழக கலாச்சாரத்தை ஆய்வு செய்ய வரும் வெளிநாட்டு காதலியாக லண்டனைச் சேர்ந்த பிரிட்டிஷ் நடிகை லியா சில இடங்களில் தமிழ் மொழி  பேசுவதும்  ரசிக்கும்படியாக இருந்தது , தன் காதலனை நினைத்து உருகும் காட்சிகள், தன்னால் பிரச்சனைகள் ஏற்படும் போது  விலகிச் செல்வது  படத்திற்கு கூடுதல் பலத்தை சேர்த்துள்ளார்.

மீனவ தலைவராக மதுசூதனன், பொருந்த மாக இருந்தது, மற்றும்  வில்லனாக காட்பாடி ராஜன், தர்ஷன், மாறன், கஞ்சா கருப்பு ஆகியோர் படத்தின் முக்கிய காட்சிகளுக்கு தங்களது பங்களிப்பை சிறப்பாக கொடுத்துள்ளனர்.

ஒளிப்பதிவாளர் டோனி ஜான் கடல் அழகை யும் மற்றும் கடல் சார்ந்த இடங்களையும் கண்களுக்கு அழகாகவும் படம் பிடித்து கொடுத்துள்ளார்

இசையமைப்பாளர் சாண்டி சாண்டெல்லோ பாடல்கள் வரிகள் புரியும்படி / கேட்கும்படி ரசிக்கும் படியாகவும் இருந்தது பின்னணி இசையிலும்  தன் பங்களிப்பை சரியாக கொடுத்துள்ளார் .

படத்தொகுப்பாளர் கோபிகிருஷ்ணா தேவையான காட்சிகள் இணைத்து கொடுத்துள்ளார்  இன்னும் கொஞ்சம் நீளத்தை குறைத்துயிருக்கலாம்

மீனவ இளைஞனின் வாழ்க்கையில் குறுக்கிடும் காதலால் ஏற்படும் பிரச்சனை  வழக்கமான காதல் கதையாக இருந்தாலும் திரைக்கதையில் இறுதியில் திருப்பத்துடன் முடித்து  சிறப்பாக இயக்கியுள்ளார் ஜெயலட்சுமி. (பெண்) இயக்குனரின் முயற்ச்சிக்கு பாராட்டு வாழ்த்துக்கள்.

மொத்தத்தில் இப்படம் அனைவரும் பார்க்கும் படமாக தான் உள்ளது.