“என் காதலே” திரைப்பட விமர்சனம்.
ஸ்கை வான்டர்ஸ்; என்டர்டெயின்மென்ட் சார்பில் ஜெயலட்சுமி தயாரித்து எழுதி இயக்கியிருக்கும் படம் என் காதலே.
இதில் லிங்கேஷ், திவ்யா தாமஸ், லியா, காட்பாடி ராஜன், மாறன், கஞ்சா கருப்பு, மதுசூதனன், தர்ஷன் ஆகியோர் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள்:-நிர்வாக தயாரிப்பாளர் – காட்பாடி ராஜன், ஒளிப்பதிவு – மூடர்கூடம் புகழ் டோனி ஜான், இசை – சாண்டி சாண்டெல்லோ, எடிட்டிங் – தனி ஒருவன் படப்புகழ் கோபி கிருஷ்ணா, பாடல்கள் – கபிலன், சந்துரு, ஜெயலட்சுமி , பாடியவர்கள் – ஸ்வேதா மோகன், சைந்தவி, ஸ்ரீதர் சேனா, திலீப் வர்மன் ( மலேசியா ) , அனிதா ஷேக், மக்கள் தொடர்பு – வேலு
மீனவ குப்பத்தில் பெரிய மனிதராக வலம் வருபவர் மதுசூதனன். அவரின் தங்கை மகன் லிங்கேஷ். சிறு வயதில் சுனாமி பேரலையில் அப்பா அம்மா வை இழந்த லிங்கேஷை தன் சொந்த மகன் போல் பாசம் காட்டி வளர்கிறார் தாய்மாமன் மதுசூதனன். மாமனுக்கு ஒரே மகள் திவ்யா இவ...
