
வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரித்திருக்கும் ராஜா கிளி படத்தை இயக்கியிருக்கிறார் உமாபதி ராமையா.
இதில் தம்பி ராமையா, சமுத்திரக்கனி, தீபா, பிரவீன் குமார் ஜி, டேனியல் அன்னி போப், பழ கருப்பையா, வெற்றிக்குமரன், அருள் தாஸ், சுவேதா ஷ்ரிம்டன், ரேஷ்மா பசுபலேட்டி, சுபா, வி.ஜே. ஆண;ட்ரூஸ், மாலிக், கிங் காங் மற்றும் பலர் நடித்துள்ளனர்
தொழில்நுட்பக் கலைஞர்கள்:- ஓளிப்பதிவு : கேதார்நாத் – கோபிநாத், பிஜிஎம்: சாய் தினேஷ்,ஒலிப்பதிவாளர்: தபஸ் நாயக், படத்தொகுப்பாளர்: சுதர்சன் ஆர், கலை இயக்குனர்: வைரபாலன் – வீரசமர், நடனம்: பிருந்தா – சாண்டி, ஸ்டண்ட் இயக்குனர்: சில்வா மாஸ்டர், ஸ்டில்ஸ்: மிலன் சீனு, ஆடை வடிவமைப்பாளர்: நவதேவி ராஜ்குமார், விளம்பர வடிவமைப்பாளர்: சிந்து கிராஃபிக்ஸ், மேலாளர்: கே எச் ஜெகதீஷ், நிர்வாக தயாரிப்பாளர்: சுப்ரமணியன் என், பிஆர்ஒ – ஜான்….
படத்தை பார்ப்போம்
சமுத்திரகனி :அன்பாலயம் என்ற மனநல காப்பக்கம் நடத்தி வருகிறார் . காரில் வெளியில் சென்று கொண்டு இருக்கும் போது தெரு ஒரத்தில் இருக்கும் குப்பை தொட்டியில் கிடக்கும் சாப்பாட்டை எடுத்து மனநோயளி சாப்பிட்டு கொண்டு இருக்கிறார். அவர் தான் தம்பிராமையா அவரை தன் காப்பகத்திற்க்கு அழைத்து வருகிறார் அவரை தலைமுடியை திருத்தம் செய்து குளிக்க வைத்து புதிய துணியை உடுத்தி படுக்க வைக்கிறார் அவர் கொண்டு வந்த பழயதுணி மூட்டையை பிரித்து பார்க்கிறார் அதில் பழய டைரி கிடைக்கிறது அதில் அவருடை வாழ்க்கை வரலாற்றை எழுதி வைத்துள்ளார். அதில் அவரை பற்றி…. சிறந்த முருகபக்தனாகவும் புகழ்பெற்ற தொழிலதிபராகவும் முருகப்பா குழுமத்தின் உரிமையாளராகவும் . பல பஸ்கள் /பெரிய துணி கடைக்கு சொந்தகராகவும் முருகப்பா சென்ராயன் வாழ்ந்து இருக்கிறார் . இவருடைய மனைவி தெய்வானை ( தீபா சங்கர்) கணவன் பல பெண்களுடன் தொடர்பு இருப்தாக நினைத்து கொள்கிறார் சந்தேக பார்வை தீ கொழுந்து விட்டு எரிகிறது . இவருக்கு ஒரே மகன். இவர் தொடங்கும் தொழில் வெற்றி பெறுகிறார் . இவருடன் கூட்டாக தொழில் செய்ய (பார்ட்னராக) இணைய (பெண்)ஐஸ்வர்யா பல கோடி பணத்துடன் அடியாட்களுடன் வருகிறார் இவர் கூட்டு சேர மறுக்கிறார் . அவர் எச்சரித்து செல்கிறார் .துணி கடையில் வேலை பார்க்கும் பெண் வள்ளி மலர் இரண்டவது மனைவியாக வருகிறார். அதே பகுதியில் வசிக்கும் இளம் கல்லூரி பெண் மூன்றாம் மனவியாக வருகிறாள் விசாக. அவளுடைய . இளமைக்கு தீனி போட முடியதால் அவள் வேற இளம் வாலிபனுடன் ஓட்டம் எடுக்கிறாள அவனுடன் திருமணம் நடக்கிறது . திடீர் இளம் வாலிபன் மலை அடிவாரத்தில் கொலை செய்யபட்டு இருக்கிறான் இந்த கொலை பழி தம்பி ராமையா (முருகப்பா சென்ராயன்) மீது விழுகிறது சிறையில் அடைக்கப்படுகிறது உடல்நலம் பாதிப்பு ஏற்படுகிறது இவருடைய தொழில் நிர்வாகத்தை அவர் மகன் பார்த்துக் கொள்கிறான் திடீர் ஒரு நாள் தம்பி ராமையா எச்சரித்த பெண் இவரை சந்திக்கிறார் சில ஆலோசனை கூறுகிறார் தம்பி ராமையா வெளியில் தனியார் மருத்துவமனை சேர்கிறார்கள் அங்கு அவர் மகன் வந்து எல்லா பத்திரங்களில் கையெழுத்து வாங்கியுடன் அவரை கழுத்தை இருக்கி கொள்ள முயல்கிறான் மகன் இவரை கொல்ல காரணம் என்ன ? தண்டனை பெற்ற கைதி குப்பை தட்டி மனநோயளி இருப்பதற்க்கு காரணம் யார்? போலீஸ் காவலில் இருந்தவர் எப்படி வெளியே வந்தார்? என்ன நடந்தது ? என்பது தான் மீதிகதை
தொழிலதிபராக முருகப்பா சென்ராயனாக தம்பிராமையா – வின் கதாபாத்திரம் தமிழகத்தை உலுக்கி நடந்த உண்மை கதை சம்பவமாக நடை உடை பாவனை அனைத்தும் அப்படியே இருந்தது மனநலம் குன்றிய பாதிக்கப்பட்ட கதாபாத்திரம் சிறப்பு சாப்பாட்டுக்காக குடிகார பசங்களிடம் கெஞ்சுவதும் கூத்தாடுவது / இரண்டவது மூன்றாவது மனைவி கலால் எட்டி மார்பில் உதைப்பது அவர் மீது பரிதாபம் வரும் அளவிற்க்கு கண் கலங்க வைக்கிறார். இவர் நடிகர். திலகம் திரையுலக வாரிசாக வரலாம். |
சமுத்திரகனி :
மனநலம் பாதிக்கப்பட்டவர்களை குணபடுத்துவதும் பாதுகாப்பதும் அவர் வாழ்க்கையில் வெளிச்சத்தை ஏற்படுத்தவும் எடுக்கிற முயற்ச்சிகள் நேர்மையாகவும் சரியாக இருந்தது.
தம்பி ராமையாக்கு ஆலோசனை சொல்லும் ஸ்ரீகுரு சாமியாராக பழ கருப்பையா சிறப்பாக நடித்திருந்தார் சரியான பொருத்தமாக இருந்தது .
இதில் நடித்த . நடிகர்கள் ! ஆடுகளம் நரேன் / தீபா ஷங்கர் /தம்பிராமையாக்கு மூன்றாவதாக வந்த மனைவி விசாக கல்லுரி பெண் சிறப்பாக நடித்துள்ளார் மற்றும் இப்படத்தில் நடித்த அனைவரும் சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள் :
ஒளிப்பதிவு ஒளிப்பதிவாளர்கள் கேதார்நாத் – கோபிநாத் ஆகியோரது கேமரா, முருகப்பனின் பணக்கார வாழ்க்கையையும், பசி மிகுந்த தெரு ஒரமாக குப்பை தொட்டி சாப்பாட்டிற்க்காக தேடும் வாழ்க்கையையும் எதார்த்தமாக காட்சிப்படுத்தியிரு
இசை : நடிப்பைத் தாண்டி இசையிலும் அறிமுகம் தம்பி ராமையா பாடல் ராகம் கிளுகிளுப்பு காட்சிகளில் அவரது இசை ரசிக்கும்படியாக இருந்தது அனைவரின் கவனத்தை ஈர்க்கிறார்
எடிட்டர் : சுதர்சன் தேவையான காட்சிகள் மட்டும் சேர்த்து படத்தை விறுவிறுப்பாக நகர்த்து செல்லுகிறது அவருடை பணி சிறப்பாக இருந்தது.
இயக்குனர் உமாபதி ராமையா.ஒரு பிரபலமான தொழில் அதிபர்களின் வாழ்க்கை எப்படி அவர்களது வீட்டில் சந்தேக தீ எப்படி பிரச்சனைகள் உருவாகிறது. ஆண்களின் சபல புத்தி எப்படி சறுகலை கொடுக்கிறது என்பதை ஆழமாக அழுத்தமாக அழகாக சொல்லி உள்ளார் .. இப்படம் அனைவரும் ரசிக்கும்படியாக தெரித்துள்ளார்.










