Monday, August 10

”நீளிரா” திரை விமர்சனம்.

ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ சார்பில் கார்த்திகேயன் எஸ் – கார்த்திக் சுப்புராஜ் தயாரித்திருக்கும் நீளிரா படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் சோமீதரன்.

இதில் நவீன் சந்திரா, சனந்த், கபில வேணு, ரூபா கொடுவாயூர், வித்து, சித்து குமரேசன், நவயுகம், சுவாதி கிருஷ்ணன், நமசிவாயம் தம்பிப்பிள்ளை, கயல் வின்சென்ட், ரோஹித் கோகடே மற்றும் பலர் நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள்:-ஒளிப்பதிவு: செல்வரத்தினம் பிரதீபன், எடிட்டர்: ராதா ஸ்ரீPதர், இசை: கே,  சண்டைக்காட்சிகள்: தினேஷ் சுப்பராயன், இணை இயக்குனர்: விக்கி, ஆடைகள்: சுபைர் – தரங்கேணி, இணைத் தயாரிப்பாளர் : பவன் நரேந்திரா – அருள்மொழித்தேவன் காளிமுத்து,இணை தயாரிப்பு – ராணா டக்குபதி – கல்யாண் சுப்ரமணியன், மக்கள் தொடர்பு: நிகில் முருகன்​

கதை கரு

ஈழப் போருக்கு  நடுவில் ஒரு தமிழர் வீட்டில் விடிந்த கல்யாணத்தை நடத்த போராடும் குடும்பம் …

படத்தை பார்ப்போம்

1988-ஆம் ஆண்டு இலங்கையில் இந்திய அமைதிப்படை  காலக்கட்டத்தில் கதை தொடங்குகிறது. ஈழத்தில் ஒரு தமிழர் குடும்பம் தன் பெண்ணின் திருமணத்திற்காக இந்திய அமைதிப்படை மற்றும் இலங்கை படையினரிடம் அனுமதி கடிதம் பெற்று வீட்டில் திருமண ஏற்பாடு நடிக்கிறது வீட்டை சுற்றி துப்பாக்கி சுடும் சத்தம்  பதற்றமான சூழல், எந்தவித அசம்பாவிதமும் இல்லாமல் திருமணம் நல்லபடியாக நடக்க வேண்டும் என்ற ஒருவித பயத்தோடு இருந்தாலும் அந்த இரவில்  குடும்பத்தார் மற்றும் உறவினர்  மகிச்சியாகவும் விடிந்தா கல்யாணம. நடக்க இருந்த நிலையில்  அந்த இரவு நேரத்தில்  வழிதவறி வந்த இந்திய அமைதிபடையினர் திருமண நடக்கும் வீட்டின் முன்பு இருக்கும் காலி இடத்தில் ஒன்றுகூடி  அடுத்த தாக்குதல் நடத்த திட்டம் தீட்டுகிறார்கள்  இவர்களுடை மேல் அதிகாரி உத்தாவுக்காக காத்திருக்கிறார்கள் இந்த நிலையில் இந்திய அமைதிபடையினர் திடீரென திருமண வீட்டில் அத்துமீறி நுழைந்து அங்குள்ள ஆண்களை துப்பாக்கி முனையில்  மிரட்டுகிறார்கள் அங்குள்ள பெண்களை தவறாக  நடக்கமுயற்ச்சிக்கிறார்கள்  அந்த வீட்டில், வெளியுலகத் தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையில் அங்கு . இந்திய அமைதிப்படை கேப்டனுக்கும், அந்த வீட்டின் உள்ளவர்களுக்கும் இடையே ஏற்படும் மோதல்,   அமைதிப்படை வீரர்கள் திருமண நடக்கயிருந்த வீட்டில் அத்துமீறி உள்ளே நுழைய காரணம் என்ன? அங்குள்ள ஆண்களை துப்பாக்கி முனையில்  மிரட்ட அவர்களுடைய நிலமை என்ன ? தமிழர் வீட்டில் திருமணம் நடந்ததா ? எதிர்பாராத பல திருப்பங்களுடன் (நீண்ட இரவு ) நீளிரா  படத்தின்  மீதிக்கதை.

நடிகர்கள்

நவீன் சந்திரா நேர்மையான ராணுவ வீரராக, கடமை மற்றும் மனிதநேயத்தின் இடையே சிக்கிக் கொண்டுள்ள போர்வீராக  அழகாக வெளிப்படுத்துகிறார். ரூபா கொடுவாயூர் பாதிக்கப்பட்ட பெண்ணாக மிக இயல்பான, உணர்ச்சிகரமான நடிப்பை கொடுத்துள்ளார்.

சித்து குமரேசன், கயல் வின்சென்ட், சுவாதி கிருஷ்ணா, நவயுகா நமச்சிவாயம், தம்பி பிள்ளை, ரோகித் கராத்தே அனைவரும் போரின் பயத்தையும் பதட்டத்தையும் கண்களில் காட்டி கதையை தூக்கி பிடித்துள்ளனர்

ஔிப்பதிவு ;செல்வரத்தினம் பிரதீபன்  போரின் பதட்டத்தையும், இரவில் அந்த பகுதியின் இயல்பையும் மிக அழகாக பதிவு  செய்துள்ளார் .

இசை

கே பின்னணி இசை காட்சிகளோடு ஒட்டததிற்க்கு ஒன்றிணைந்து, பயனிக்கிறது சிறப்பாக இருந்தது  .

எடிட்டர்: ராதா ஸ்ரீPதர், படத்திற்க்கு தேவையான காட்சிகள் மட்டும் இணைத்துள்ளார் படத்தின் அடுத்தது என்ன  என்ற எதிர்பார்ப்பு கூட்டியுள்ளது மற்றும் இப்படத்தில் பணியாற்றி அனைத்து தொழில்நுட்பகலைஞர்கள் சிறப்பாக பணியாற்றி உள்ளனர்.

இதுவரை உலக வரலாற்று படத்தை பார்த்தோம் ஈழத் தமிழர்கள் சிங்கள ராணுவத்தால் ஈழத்தமிழர் அனுபவித்த வலிகளையும் கொடுமைகளையும் பார்தோம்  இதுவரை  தமிழ் சினிமாவில் சொல்ல படாத கதையை முதல் முறையாக  அமைதிப்படையினரால்  அனுபவித்த அட்டுழியம் கொடுமைகளை  துணிச்சலாக சொல்லியுள்ளார் கல்யாண வீட்டில் உறவுகாரர் பிள்ளைகள் விளையாடுவது வீட்டில் உறவுகார்கள்  தமிழ் நடிகரின் பட கேஸட் TVயில் டெக்  படம் பார்ப்பது இந்த காட்சி ரசிக்கும்படியாக இருந்தது  நேர்த்தியான திரைக்கதை அமைத்தது இயக்குநர் சோமிதரன், பாராடடுகள் உங்கள் முயற்ச்சி  தொடரட்டும்

நீளிரா படம் இது வழக்கமான படமல்ல, ஈழமக்களின் வாழ்க்கையும்  சொல்லும் படம்

புதிய கதைகளம் எதிர்பாரத கிளைமாக்ஸ் காட்சி பார்க்கலாம் ‘  பார்க்க வேண்டிய படம்