Sunday, April 19

”ரூம் பாய்” திரை விமர்சனம் .

ஏசிஎம் சினிமாஸ் சார்பில் சூரியகலா சந்திரமூர்த்தி தயாரித்திருக்கும்” ரூம் பாய்” படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் ஜெகன் ராயன்.

கதாநாயகன்  சி.நிகில் , நாயகி நிஷா இமான் அண்ணாச்சி  ,பிர்லா போஸ்  யூடியூப் புகழ் காத்து கருப்பு கலை  இன்ஸ்டா புகழ் கற்பகம் ,கவிதா விஜயன் , மற்றும் இவர்களுடன் மும்பை மாடல் அழகி நிதி மரோலி ஒரு பாடலுக்கு நடனமாடி இருக்கிறார்.

தொழில்நுட்ப கலைஞர்கள் :-ஒளிப்பதிவு – சி.பாரதி ராஜன் டிஎஃப்டி, பாடல்கள் – சூரியமூர்த்தி, இசை – வேலன் சகாதேவன் , படத்தொகுப்பு – டி.வி.மீனாட்சி சுந்தர், நடனம் – தினா, ஸ்டண்ட் – கார்த்திக் வர்மன் , உடைகள் – வளையாபதி , , மக்கள் தொடர்பு – புவன் செல்வராஜ்

படத்தை பார்ப்போம்

சிறார் கூர்நோக்கு பள்ளியின் வார்டனாக இருக்கும் பிரபாகர் காணவில்லை யென்று அவருடைய மகள் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கிறார் .காவல்துறை தீவிர தேடுதல் வேட்டை தொடங்குகிறது. இன்னொரு புறம் சிறார் கூர்நோக்கு பள்ளியிலிருந்து வெளியே வரும் நாயகன்  நிகில் வேலை தேடி தன் சித்தப்பா வசிக்கும் ஏலகிரிக்கு செல்கிறார். அங்கே சன்னி பன்னி ஹோட்டலை நடத்தும் இமான் அண்ணாச்சியிடம் வேலைக்கு சேர்கிறார். அங்கே  காத்து கருப்பு கலை நட்பு கிடைக்க, சில காரணங்களால் இருவரும் இந்த ஓட்டலில் வேலையை விட்டு  அதே ஏரியாவில்   பிரபலமான குயின் மார்க் ஹோட்டலில் ‘ரூம் பாய்’ வேலைக்குச்  இருவரும் சேர்கிறனர். அந்த ஹோட்டல்  வெளிப்பார்வைக்கு  பிரம்மாண்டமாக அழகாவும்  அமைதியாகவும், வசதியாகவும் இருந்தாலும்  அந்த ஹோட்டலின் மேனேஜர்  பிர்லாபோஸ்  அங்கு வேலை பார்க்கும். ஊழியர்களை அடிமைகளாக நடத்தபடுகிறது   கொடூரகாரன்  ஊழியர்கள் தப்பிக்க நினைத்தால் அவர்களுக்கு கடுமையான தண்டனை அப்படி அந்த ஓட்டலில் என்ன தான் நடக்குது பார்ப்போம் இளம் ஜோடிகளின் அந்தரங்கம் /பெரும் பணக்காரன், கள்ள உறவு, சமூக விரோத செயல்   இவர்களை ரகசிய கேமேர வைத்து   வீடியோவில் படம் பிடித்து, அவர்களை மிரட்டி பணம் பறித்தல், பல குற்றச் செயல் நடக்கிறாது  இதற்கிடையில், ஏலகிரியை சுற்றிப் பார்க்க வரும் வடமாநில பெண் நிஷா  தன் குடும்பத்தினருடன் ஹோட்டலில் வந்து தங்குகிறார். ஒட்டலில்  வேலை பார்க்கும் நாயகன்  நிகில் நீலகிரியில் இருக்கும் சுற்றுலா இடத்தை வடமாநில பெணணிக் குடும்பத்தாற்க்கு காட்டுகிறார்  நிஷாவுக்கும் நிகிலுக்கும் இடையே நட்பு காதலாக மலர்கிறது   சுற்றுபயணம் முடிந்தது நிஷா தன் சொந்த மாநிலத்திற்க்கு செல்கிறாள்  இந்நிலையில் கதாநாயகணை தேடி போலீஸ் குயின் மார்க் ஓட்டலுக்கு வருகிறது  கதாநாயகனின் பிளாஷ் பேக்  ஆரம்பம் ,சிறார் கூர்நோக்கு பள்ளியின் வார்டன் கிடைத்தாரா ? நாயகனை போலீஸ் தேடி வர காரணம் என்ன? வடமாநில பெண்ணுடன் காதல் மலர்ந்ததா? குயின் மார்க் ஹோட்டலில் நடக்கும் சட்டவிரோத  செயல் செய்வது யார் ? இறுதி காட்சி யாரும் யூகிக்க முடியாத சஸ்பென்ஸ், டுஸ்ட் பல திருப்பங்களுடன்  படத்தின் மீதி கதை..

நாயகன் நிகில் ஆட்டம் /ஆக்ஷ்ன் எல்லோம் சூப்பர்  ,நாயகி நிஷா சில காட்சிகள் வந்தாலும் அனைவரின் மனதில் நிற்கிறார்க மற்றும்இமான் அன்னாச்சி , காத்து கருப்பு கலை _நாயகனுடன் பயனிக்கிறார் அடிக்கடி சில காமெடி  ரசிக்கும்படியாக இருந்தது மற்றும் இப்படத்தில் நடித்த அனைத்து துணை அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – சி.பாரதி ராஜன் டிஎஃப்டி, பாடல்கள் – சூரியமூர்த்தி, இசை – வேலன் சகாதேவன் , படத்தொகுப்பு – டி.வி.மீனாட்சி சுந்தர், இவர்களின் பங்களிப்பு சிறப்பாக இருந்தது ,

நாயகன் ரூம்பாய் வாழ்க்கை ரகசிய கேமேராவில் சிக்கி தவிக்கும் சில குடும்பங்கள் இன்றைய காலகட்டத்தில் நடக்கும் சில சம்பவங்களை நேர்த்தியக  கதை, திரைக்கதை, வசனம் எழுதி அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு உருவாக்குகிறது இயக்குனர் ஜெகன் ராயன். உங்கள் முயற்ச்சி பாராட்டுகள்

படம் பார்க்கலாம்