
நடிகர்கள் : பாலு எஸ்.வைத்தியநாதன், அஞ்சனா கிர்த்தி, மேகாலி மீனாட்சி, லொள்ளு சபா ஜீவா
இசை : ஸ்ரீகாந்த் தேவா
ஒளிப்பதிவு : பாலு எஸ்.வைத்தியநாதன்
இயக்கம் : பாலு எஸ்.வைத்தியநாதன்
தயாரிப்பு : தாரகை சினிமாஸ்
மருத்துவ கல்லூரி மாணவரான நாயகன் பாலு எஸ்.வைத்தியநாதன், தான் படிக்கும் அரசு மருத்துவக் கல்லூரியை தனியாரிடம் கொடுப்பதாக தகவல் வருகிறது இதற்க்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, தன்னுடன் படிக்கும் மாணவர்களுடன் சேர்ந்து போராட்டம் நடத்த தயரகிறார் போலீஸ் அனுமதி தரமறுக்கிறது இதனால், தன் மருத்துவ கல்லூரி வளாகத்திற்க்குள் உண்ணாவிரத போராட்டம் நடத்துகிறார் அவருக்கு சில கட்சிகள் ஆதரவும் சிலர் மிரட்டல்கள் வருகிறது.
அடுத்தது , நாயகி அஞ்சனா கிர்த்தி அறம் செய் என்ற அரசியல் அமைப்பின் மூலம், இன்றைய நம் நாட்டில் நடக்கும் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார் . இதனால், அவருக்கும் ஆளும்கட்சி பல்வேறு எதிர்ப்புகள் மிரட்டல் வருகிறது. இதனால், தங்கள் அமைப்பில் முக்கியஸ்தராக இருக்கும் சில நபர்களின் இழப்பை சந்தித்தாலும் , கொள்கையில் உறுதியாக தெளிவாக நிற்கும் இவர்களின் போராட்டம் வென்றதா? இல்லையா , என்பது தான் படத்தின் மீதிகதை.
கதை, வசனம், திரைக்கதை எழுதி இயக்கி ஒளிப்பதிவு செய்திருப்பதோடு, கதையின் நாயகனாகவும் நடித்திருக்கும் பாலு எஸ்.வைத்தியநாதன், சமூகப்பிரச்சனைப் சமுகத்தில் நடக்கும் அவலங்களை பிரச்சனைகளையும் படமுழுக்கு சொல்லி கொண்டே இருக்கிறார்
மாணவர்களுடன் சேர்ந்து அமைதி வழியில் போராடும் காட்சிகளில் முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கும் பாலு எஸ்.வைத்தியநாதன், அவ்வபோது மேகாலியுடன் டூயட் பாடல் பாடி, தனது நாயகன் ஹீரோயிசம் செய்து அசத்தியிருக்கிறார்
அஞ்சனா கிர்த்தி : நிமிர்ந்த நடை நேர்கொண்ட பார்வையும், யார்க்கும் அஞ்சாத , சமூக போராளியாகவும் வீர பெண்ணாகவும் சிறப்பான நடிப்பை வழங்கியுள்ளார் அவரது தோற்றம் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறது.அவருக்கு பாராட்டு
காமெடி நடிகராக இருந்த லொள்ளு சபா ஜீவா, நாயகனின் நண்பனாக படத்தில் குணச்சித்திர நடிகராக நடித்து அசத்தியிருக்கிறார் .
பாலு எஸ்.வைத்தியநாதனின் காதலியாக நடித்திருக்கும் மேகாலி, பாடல்களுக்கு நடனம் ஆட மட்டுமே பயன்பட்டிருக்கிறார்.
ஜாக்குவார் தங்கம், , அமைச்சர் சொப்பன சுந்தரியாக நடித்திருக்கும் இவர் இருவரும் நடிக்கும் காட்சி. செயற்கை தனமாக இருந்தது . பயில்வான் ரங்கநாதன், நடிகை திருச்சி சாதனா நடித்திருக்கும் காட்சிகள் ரசிக்கும்படியாக இருந்தது .மற்ற கதாபாத்திரங்ககளில் நடித்த அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர்.
ஆம்புலன்ஸ் ஓட்டுனராக வந்த (துணை நடிகை) பேசும் வசனம் : நீட் தேர்வினால் தற்கொலை செய்துகொண்ட அனிதா பற்றி பல திரைப்படங்களில் பேசியிருக்கிறார்கள், ஆனால் இந்த படத்தின் அனிதா பேசும் காட்சி பாராட்டும்படி இருக்கிறது.
ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் படியாக இருந்தது . பின்னணி இசையிலும் சில இடங்களில் கவனிக்க வைக்கிறது
இப்படத்தில் பணியாற்றிய அனைத்து தொழில் நுட்ப கலைஞர் சிறப்பாக பயணி செய்துள்ளார்
” இயக்குநர் பாலு எஸ்.வைத்தியநாதன் சொல்ல முயற்சித்திருக்கும் கருத்துகள் சமூகத்திற்கு அவசியமானது என்றாலும், அதை அளவுக்கு அதிகமான கருத்துக்களை கொடுத்துயிருக்கிறார்
இப்படத்தின் கதை தேர்வு சரியானது. திரைக்கதையில் கவனம் செலுத்தி இருக்கலாம் படத்தின் சில காட்சிகள் , நீளம் குறைத்து இருக்கலாம் ரசிகர்களின் பொறுமையை அதிகம் தேவை .










