Sunday, July 26

“தி டோர்” திரைப்பட விமர்சனம்.

தி டோர்”
திரைப்பட விமர்சனம்

நடித்தவர்கள் :- பாவனா,
கணேஷ்வெங்கட்ராமன், ஜெயபிரகாஷ்,
ஸ்ரீரஞ்சனி, நந்தகுமார், கிரீஷ், பாண்டிரவி,

சங்கீதா, செந்தூரி, பிரியா வெங்கட், ஆறுமுகம், கபில்,

பைரி வினு, ரோஷினி , சித்திக்,வினோலயா,
மற்றும் பலர் நடித்துள்ளனர்…

டைரக்டர் : – ஜெய்தேவ்.

மியூசிக் : – வருண் உன்னி.

ஒளிப்பதிவு :-
ஜி.கௌதம்.

படத்தொகுப்பு:- அதுல் விஜய்.

தயாரிப்பாளர்கள் : ஜூன் ட்ரீம் ஸ்டிடுயோஸ்,
எல் எல்‌பி-நவீன் ராஜன். மக்கள் தொடர்பு; பரணி..

படத்தை பார்ப்போம்:பிரபல தனியார் நிறுவ​னத்தில்    கட்டிடக்கலை நிபுணரான (மித்ரா )பாவனா வேலை செய்கிறார், அவர் வடிவமைக்கும்  அடுக்குமாடி குடியிருப்பின் கட்டிட வளாகத்தில் பணிக்காக பழமையான சின்ன கோவில் ஒன்று இடிக்கப்படுகிறது.

கோவில் இடிக்கப்பட்ட சில மணி நேரங்களில் பாவனாவின் தந்தை  ஸ்கூட்டரில் வீட்டிற்கு திரும்பும் மித்ராவின் தந்தை (வழக்கறிஞர்) மர்மமான முறையில் இறந்து விடுகிறார். தந்தையின் மரணம் மித்ராவையும் அவரது குடும்பத்தையும் பெரிய அளவில் பாதிக்கிறது. இதனால்  வேலைக்கு . போகுவதில்லை வேலையை விட்டு வெளியேறி விடலாம் என்று முடிவு எடுக்கிறார் அவர் வேலை பார்க்கு கம்பெனியின் முதலாளி  ஜெயபிரகாஷ்  (பாவன அப்பா நண்பர்) வீட்டுக்கு வந்து சமாதனம் செய்கிறார் .மீண்டும் தன் வேலைக்கு வருகிறார். இருந்தாலும்  அவரை சுற்றி சில அமானுஷ்ய சக்தியின் சம்பவங்கள் நடக்கிறது.

தனது நண்பர்களின் உதவியுடன் தன்னை பின் தொடரும் அமானுஷ்யத்தின் பற்றி தெரிந்து கொள்ள முயற்ச்சி செய்கிறார் பாவனா தெரிந்து கொள்ள முயற்சிக்கும் போது, அவர் சந்திக்கும் நபர்கள் இறந்து போகிறார்கள். அவர்களின் இறப்புக்கும்,

இந்த மர்மமான மரணம் எதனால் ஏற்படுகிறது? இந்த மரணத்திற்கும் பாவனா – க்கும் உள்ள தொடர்புகள் என்ன? அமானுஷ்ய உருவம்  பாவனாவை பின் தொடர்வது காரணம் என்ன ஏன் எதற்காக? என்பதே படத்தின் மீதி கதை …

மீண்டும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ் சினிமாவுக்கு ரீ எண்ட்ரி ஆக கொடுத்திருக்கும் பாவனா, கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையில் நடித்திருக்கிறார். தன்னை சுற்றி நடக்கும் மர்ம சம்பவங்களின் முடிச்சுகளை அவிழ்ப்பதற்காக முயற்சிக்கும்

பாவனாவின் பயணத்தில் திகில் குறைவாக இருந்தாலும், எதிர்பாராத திருப்பங்கள் படத்தை சுவாரஸ்யமாக  வேகமாக நகர்த்தி செல்கின்றன.

இப்படத்தில்  நடிகர்கள் பயணம் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் கணேஷ் வெங்கட்ராமனுக்கு வழக்கமான வேலையாக இருந்தாலும் அதை எந்தவித குறையும் இன்றி சூப்பரா செய்திருக்கிறார்.

ஜெயப்பிரகாஷ் பிரபல தனியார் நிறுவ​னம்   , ஸ்ரீரஞ்சனி, நந்தகுமார், கிரிஷ், பாண்டி ரவி, சங்கீதா, சிந்தூரி, பிரியா வெங்கட், ரமேஷ் ஆறுமுகம், கபில்,
பைரி வினு, ரோஷினி, சித்திக், வினோலியா  மற்றும் இதில் நடித்த அனைவரும் திரைக்கதை ஓட்டத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் கெளதம்.ஜி, பாவனாவை அழகாக காட்டியிருக்கிறார் கொடைக்கானல் இயற்கை அழகை அப்படியே நம் கண்முன் காட்சிபடுத்தியுள்ளார்  திகில் காட்சிகளில் எந்தவித பயத்தையும்  ஏற்படுத்தவில்லை

. இசையமைப்பாளர் வருண் : உன்னியின் பின்னணி இசை சில காட்சிகள் மூலம் திகிலடைய செய்தாலும், பல இடங்களில் அதிகப்படியான சத்தம் மூலம் காதை கிழிக்கவும் செய்திருக்கிறது.

ஆரம்பத்தில் திகில் படமாக தொடங்கினாலும், அடுத்தடுத்த காட்சிகளில் கிரைம் திரில்லராக பயணிக்கும் படத்தை சுவாரஸ்யமாக நகர்த்திச் செல்லும் வகையில் படத்தொகுப்பாளர் :அதுல் விஜய்காட்சிகளை தேவையானத்தை மட்டும் நேர்த்தியாக தொகுத்திருக்கிறார்.

எழுதி இயக்கியிருக்கும் : ஜெய்தேவ், வழக்கமான பாணியிலான திகில் கதையாக ஆரம்பித்தாலும், அதில் திகில் உணர்வுகளை குறைத்துவிட்டு, கிரைம் புத்தகம்  படிப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும் வகையில் அடுத்தது என்ன எதிர்பார்ப்புடன்  திரைக்கதையை சுவாரஸ்யமாக நகர்த்தி செல்கிறார்.

பாவனா தேடும் ராம் நபர் யார்? என்ற எதிர்பார்ப்பு, அந்த தேடல் பயணத்தில்

ஏற்படும் திருப்பங்கள் மற்றும் மர்ம மரணங்களும், அதன் பின்னணி என்னவாக இருக்கும்? என்ற எதிர்பார்ப்பும்

பார்வையாளர்களை படத்துடன் ஒன்றிவிட செய்கிறது.

திகில் மற்றும் கிரைம் த்ரில்லர் இரண்டையும் ஒரே நேர்கோட்டில் பயணிக்க வைக்கிறது  ரசிகர்களுக்கு வித்தியாசமான உணர்வை ஏற்படுத்தி ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குநர் ஜெய்தேவ்.

மொத்தத்தில், ‘தி டோர்’ பயம்யின்றி அனைவரும் பார்க்கும் படமாக உள்ளது.