Sunday, May 31

“பூக்கி” திரை விமர்சனம்.

தயாரிப்பு : விஜய் ஆண்டனி கார்ப்பரேஷன்
இயக்கம் : கணேஷ் சந்திரா
நடிப்பு : அஜய் தீஷன், தனுஷா, ஷியரா, சுனில், லட்சுமி மஞ்சு, பாண்டியராஜன்,விவேக் பிரசன்னா, கருப்பு பாண்டி, பிக் பாஸ் சத்யா, இவர்களுடன் இரண்டு பாடல் மட்டும் விஜய் ஆண்டனி மற்றும் பலர் நடிக்கிறார்.

தொழில்நுட்ப கலைஞர்கள்
ஒளிப்பதிவு : கணேஷ் , இசை : விஜய் ஆண்டனி: ஸ்டண்ட் மாஸ்டர்: பிரபு ஜாக்கி ,நடன இயக்குநர் ஹரி கிரண் மக்கள் தொடர்பு :: சதீஷ் (ஏய்ம்)

கதைக்கரு. :

ஹீரோ அஜய் தீஷன் ஹீரோயின் தனுஷா காதலர்கள் இவர்களின் ஈகோ பிரச்னை, பிரிகிறார்கள்  இருவருக்கும் இன்னொரு காதல் வருகிறது இருவருமே  பழைய காதலா? புதிய காதலா .? யாருடன் இணைந்தார்கள்  இதுதான் பூக்கி .

படத்தை பார்ப்போம்.

கதாநாயகன் அஜய் திஷன்  , கதாநாயகி ஆர்.கே. தனுஷா ஆகிய இருவரும் கடந்த ஆறு ஆண்டுகளாக காதலித்து வருகிறார்கள். ஒரு நாள்  , கார் பயணத்தில்  இவர்களுக்குள் பெரிய வாக்குவாதமாக மாறுகிறது. காரை நிறுத்தி நடு ரோட்டில் நின்று வாக்குவாதமாக எல்லை மீறி  நாயகி கண்ணத்தில் ஒங்கி அடிக்கிறார் நாயகன் திரும்பி நாயகன் கண்ணத்தில் நாயகி ஓங்கி அடிக்கிறாள்  இந்த சம்பவத்தை (Road-ல்) ரோட்டில் சென்றவர்கள் தன்னுடைய செல்போனில் வீடியோ எடுத்து Youtube மற்றும் அனைத்து  சமூக வலைத்தளங்களில் வெளியிடுகிறார்கள் இந்த வீடியோ வைரால் ஆகிறது இதை பார்த்த நண்பர்கள், உறவினர்கள் பொதுமக்கள்  இவர்கள் எங்கு வெளியில் சென்றாலும்  இவர்களை பற்றி தான் பேச்சு  இதனால் கருத்து வேறுபாட்டால்  இருவரும் அஜய் தீஷன், தனுஷா  இருவரும் பிரிகிறார்கள் நாயகி மனது அமைதிபெற ஆன்மீக குருஜி ஆஸ்ரம் செல்கிறார் அங்கு நடக்கும் மோசடி கண்டு அதிர்ச்சி ஆகிறார் மீண்டும் மனமாற்றத்திற்க்காக நாயகி இன்னொரு பையனுடன் ஊர் சுற்றுகிறார்.நாயகனும் இன்னொரு பெண்ணுடன் ஊர் சுற்றுகிறார்   இவர்கள் பிரிவை இருவரும் எப்படி எதிர்கொள்கிறார்கள் மீண்டும் பழைய காதலர்களுடன் ஒன்று சேர்ந்தார்களா ? புதிய காதலர்களுடன் ஒன்று சேர்ந்தார்களா..? இல்லையா? என்பதே பல திருப்பங்களுடன் படத்தின் மீதிக்கதை..

அஜய் துறுதுறு நடிப்பு, ஸ்டைலான டான்ஸ், யூத் பார்வையாளரை கவரும். , காதலியுடன் நடு ரோட்டில் வாக்குவாதம் எல்லை மீறி காட்சிகள் அசத்தி இருக்கிறார். பெங்களூரில் இன்னொரு காதலியுடன் ஊர் சுற்றும் மற்றும்  மேட்ரிமோனியலில் பெண் பார்க்கும் விதம் ரசிக்க வைக்கிறது. சுனில், ஆன்மிகம் சம்பந்தப்பட்ட காட்சிகள் ரசிக்கும்படியாக உள்ளது

அறிமுக நடிகை தனுஷா தன் கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளார், தனக்கான வரன்மேட்ச் பார்க்கும் போது சந்திக்கும் நபர்கள் அவர்கள் நடந்துக்கொள்ளும் விதம், அந்த காட்சி ரசிக்கும்படியாக

விஜய் ஆண்டனி இரண்டு பாடல் காட்சிகள் மட்டும் கலர்புல்லாக வந்து போகிறார்.

விவேக் பிரசன்னா ஒயின்ஷாப் காட்சி மற்றும் இப்படத்தில் நடித்த அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர்

எடிட்டிங் மற்றும் .ஒளிப்பதிவு : கணேஷ் , இசை : விஜய் ஆண்டனி: படத்திற்கு பெரிய பலம்

ஹீரோ அஜய் தீஷன் ஹீரோயின் தனுஷா வின் ஈகோ பிரச்னை, கருத்து வேறுபாடு படம் முழுவதுமே இவர்கள் 2 பேரை சுற்றியே நடக்கிறது, அதை முடிந்தளவிற்கு போர் அடிக்காமல் அனைவரும் ரசிக்கும்படியாக கொடுத்துள்ளார் இயக்குனர் கணேஷ் சந்திரா இவருடைய முயற்சிக்கு பாராட்டு. இன்றை காதலர்கள் காதலிப்பவர்கள் இளைய தலைமுறைகள் அவசியம் பார்கலாம்