Sunday, May 31

“நிழற்குடை” திரை விமர்சனம்.

தர்ஷன் பிலிம்ஸ் சார்பில் ஜோதி சிவா தயாரித்து சிவா ஆறுமுகம் கதை திரைக்கதை எழுதி இயக்கியுள்ள படம் நிழற்குடை.

இதில் தேவயானி, விஜித், கண்மணி, இளவரசு, ராஜ்கபூர், மனோஜ்குமார், வடிவுக்கரசி, நீலிமாஇசை, தர்ஷன் சிவா, குழந்தைகள் நிஹாரிகா, அஹானா என இரு குழந்தைகள் நடித்துள்ளனர்.

தொழில் நுட்ப கலைஞர்கள்:-வசனம் – ஹிமேஷ்பாலா,இசை – நரேன் பாலகுமார், கலை இயக்கம் – விஜய் ஆனந்த், படத்தொகுப்பு – ரோலக்ஸ், ஒளிப்பதிவு – ஆர் பி குருதேவ்,மக்கள் தொடர்பு – ஏ.ஜான்

படத்தை பார்ப்போம்

ஐடி நிறுவனத்தி வேலை செய்யும் விஜித் -கண்மணி இளம் தம்பதியினர் இவர்களுக்கு ஒரு அழகான பெண் குழந்தை இருக்கிறது அடுக்குமாடி குடியிருப்பில் குடியிருக்கிறார்கள் இவர்கள் இருவரும் வேலைக்கு செல்வதால் குழந்தையை பார்த்து கொள்வதற்க்கு ஒரு இளம் பெண்ணை வேலைக்கு வைக்கிறார்கள் அந்த இளம் பெண்ணுக்கு ஒரு ஆண் பாய்பிரண்டு அவனை அடுக்குமாடி குடியிருப்பில் வர வைத்து ஜாலியாக இருக்கிறார்கள். குழந்தைக்கு தூக்க மருந்து கொடுத்து தூங்க வைத்துவிடுகிறாள் இப்படியாக பல நாட்கள் செல்கிறது ஒரு நாள் குழந்தைக்கு வலிப்பு நோய் வந்து ஆபத்தான நிலையில் குழந்தையை மருத்து மனையில் சேர்த்து சிகிச்சை பெற்று நலமுடன் குழந்தை வீட்டுக்கு அழைத்து வரப்பட்டது .இளம் பெண் வேலைகாரி – அவளின் பாய்பிரண்டு விஷியத்தை அடுக்குமாடி குடியிருப்பு . வாட்மேன் நடந்தை ஐடி தம்பதியினரிடம் கூற இதனால் வேலைகாரியை வீட்டை விட்டு வெளியே துரத்தப்பட்டார்.. இந்த ஐடி தம்பதியினர் இவ்வளவு நடந்து தன் குழந்தை பார்த்து கொள்வதற்க்கு இவர்கள் தயாராக இல்லை ! கம்பெனியின் . வேலை காரணம் என்று கூறப்படுகிறது குழந்தையின் அப்பா வெளிநாட்டில் மோகம் அங்கு வேலை பார்க்க அசை தம்பதியினர்களுக்கு விருப்பம். குழந்தையின் பிறந்த நாள் அன்று முதியோர் காப்பகத்திற்க்கு வருகின்றனர் அங்கு தேவயானி பார்க்கிறார்கள் இவரோ இலங்கை தமிழ்பெண் தன் குழந்தை குடும்பத்தை போரில் இழந்து தனிமையில் காப்பக்கத்தில் இருக்கிறார். தேவயானியிடம் தங்களின் குழந்தையை பார்த்து கொள்ள நீங்கள் எங்களுடன் வர வேண்டும் என்று கேட்க தேவயானி மறுப்பு சொல்ல பிறகு மறுநாள் ஐடி தம்பதியினர் வீட்டுக்கு தேவயானி வருகிறார் ஐடி தம்பதியினர் ரொம்ப சந்தோஷம் வழக்கம் போல் தம்பதியினர் வேலைக்கு சென்று விடுகிறார்கள் தேவயானி குழந்தை நன்கு பார்த்து கொண்டு இருந்தார்கள் ஐடி தம்பதியினர் அமெரிக்கவில் வேலைகிடைத்து விடுகிறது very Happy இதை கொண்டாட தன் வீட்டு மாடியில் பிரண்ட்ஸ் வர வைத்து (Drinks party)தண்ணி பார்ட்டி கொடுத்து சந்தோஷமாக போய்கிட்டு இருக்கு திடீர் குழந்தை காணமல் போகிறது .. வழக்கமான போலீஸ் விசாரணை அடுக்குமாடி குடியிருப்பில் ஒருவன் வித்தியாசமான உருவத்தில் இருந்தான் இந்த குழந்தை பின்தொடர்ந்து வருவான் , குழந்தை பார்க்கில் விளையாடும் போது அங்கு ஒரு பெரியவர் அடிகடி வந்து குழந்தைக்கு சாக்லேட், (Drinks) மில்க்ஷேக்  கொடுப்பார் , போலீஸ் விசாரித்ததில் எந்த உண்மையும்  கிடைக்கவில்லை?  குழந்தை கிடைத்ததா ? எங்கு சென்றது ? குழந்தையை பின்தொடர்ந்து வந்தவர்கள் யார் ? யார் கடத்தினார்கள் என்பது படத்தின் மீதி கதை…

நடிகர்கள்

இப்படத்தில் தேவயானி பேசும் வசனம் எல்லோருடைய கவனத்தை ஈர்க்கிறது படத்திற்க்கு முழு பலம் இவர் தான்.

விஜித், கண்மணி, ஐடி தம்பதியினராக குழந்தையின் பொறுப்பில்லாத அப்பா அம்மாவாக சிறப்பாக நடித்துள்ளனர்.

போலீஸ் இன்ஸ்பெக்டராக இளவரசு, ஐடி தம்பதியினர் வேலை பார்க்கும் MD – யாக ராஜ்கபூர்,

வடிவுக்கரசி விஜித் அம்மாவாகவும் மற்றும்  மனோஜ்குமார்,, நீலிமாஇசை, தர்ஷன் சிவா, குழந்தைகள் நிஹாரிகா, அஹானா என இரு குழந்தைகள் சிறப்பாக நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள்

.இசை – நரேன் பாலகுமார், கலை இயக்கம் – விஜய் ஆனந்த், படத்தொகுப்பு – ரோலக்ஸ், ஒளிப்பதிவு – ஆர் பி குருதேவ், சிறப்பாக தன் பணியை செய்து உள்ளனர்.

இன்றைய காலகட்டத்தின் தேவையான கதை இதில் தேவயானி கதாபாத்திரம் மிகவும் பொருத்தமாக இருந்தது சரியான தேர்வு இயக்குனர் ஆறுமுகம் அவர்களுக்கு பாராட்டு வாழ்த்துக்கள். நிழற்குடை. அனைவரும் பார்க்க வேண்டிய படம் முக்கியமாக இளம் தம்பதியினர் அவசியம் பார்க்க…

Related posts: