“நிழற்குடை” திரை விமர்சனம்.
தர்ஷன் பிலிம்ஸ் சார்பில் ஜோதி சிவா தயாரித்து சிவா ஆறுமுகம் கதை திரைக்கதை எழுதி இயக்கியுள்ள படம் நிழற்குடை.
இதில் தேவயானி, விஜித், கண்மணி, இளவரசு, ராஜ்கபூர், மனோஜ்குமார், வடிவுக்கரசி, நீலிமாஇசை, தர்ஷன் சிவா, குழந்தைகள் நிஹாரிகா, அஹானா என இரு குழந்தைகள் நடித்துள்ளனர்.
தொழில் நுட்ப கலைஞர்கள்:-வசனம் – ஹிமேஷ்பாலா,இசை – நரேன் பாலகுமார், கலை இயக்கம் – விஜய் ஆனந்த், படத்தொகுப்பு – ரோலக்ஸ், ஒளிப்பதிவு – ஆர் பி குருதேவ்,மக்கள் தொடர்பு – ஏ.ஜான்
படத்தை பார்ப்போம்
ஐடி நிறுவனத்தி வேலை செய்யும் விஜித் -கண்மணி இளம் தம்பதியினர் இவர்களுக்கு ஒரு அழகான பெண் குழந்தை இருக்கிறது அடுக்குமாடி குடியிருப்பில் குடியிருக்கிறார்கள் இவர்கள் இருவரும் வேலைக்கு செல்வதால் குழந்தையை பார்த்து கொள்வதற்க்கு ஒரு இளம் பெண்ணை வேலைக்கு வைக்கிறார்கள் அந்த இளம் பெண்ணுக்கு ஒரு ஆண் பாய்பிரண்டு அவனை அடுக்குமாடி குடியிருப்பில...
