
நடிகர்கள் :-
கதாநாயகன் சந்தோஷ் சோபன் கதாநாயகி :மானாசா வானாசி ,யோகி பாபு, ரகுவாக சுனில் ரெட்டி, ரமணா, லிவிங்ஸ்டன், ஸ்ரீரஞ்சனி மற்றும் பலர்.
தொழில்நுட்ப கலைஞர்கள்:-
எழுத்து – இயக்கம்: அஷ்வின் சந்திரசேகர்
ஒளிப்பதிவு – தினேஷ் புருஷோத்தமன்
இசை – அசல் இசை: ஆதித்யா ரவீந்திரன்
எடிட்டர்: கணேஷ் சிவா
கலை இயக்குநர்: மைக்கேல்
மக்கள் தொடர்பு: சதீஷ் குமார் (எஸ்2 மீடியா)
படத்தை பார்ப்போம்: இன்டீரியர் டெக்கரேட்டராக வேலை பார்க்கிறார் ஆனால் அதில் நிலையான இடத்தை அடைய முடியாமல் தவிக்கும் நாயகன் சந்தோஷ் , வருமானத்துக்காக பைக் டாக்ஸி ஓட்டுகிறார்.அதன் மூலம் நாயகி மானசா வாரணாசியின் நட்பு ஏற்பட மனசாவும் ஐடி துறையில் வேலை தேடி அலைந்து கொண்டிருக்கிறார். இருவருமே வேலை தேடி சென்னை வந்தவர்கள் என்பதால் சந்தர்ப்பவாசமாக ஒரே வீட்டில் தங்கி, லிவிங் டுகெதர் ஆகவே வாழ்ந்து வருகிறார்கள்.
இந்த விஷயம் மானசாவின் அப்பா விற்க்கு தெரியவருகிறது இதனால் மானசாவை- தன்னுடைய சொந்த ஊருக்கு அழைத்து சென்று விட்டார் இதை தெரிந்து கொண்ட நாயகன் சந்தோஷ் மானசாவின் ஊருக்கு செல்கிறார் அங்கு நோய் பாதிப்பால் மருத்துவமனை மானசா சேர்க்கப்பட்டுள்ளார் மானசாவை சந்தோஷ் சந்திக்கிறார் திடீர் இருவரும் மருத்துவமனை விட்டு யாரிடமும் சொல்லி கொள்ளாமல் இரவு நேரத்தில் வெளியேருகிறார்கள் இரு குடுபத்தாரும் மீண்டும் பிரச்சனை இவர்கள் எங்கு போனார்கள் ? எதனால் மருத்துவமனையை விட்டு வெளியேறினார் ? மானசா வந்துள்ள நோய் என்ன ? மீண்டும் சந்தோஷ் – மானசா தன்னுடைய சொந்த ஊருக்கு வந்தார்களா.. இன்னும் பல திருப்பங்களுடன் படத்தின் மீதி கதை ..
நாயகனாக நடித்திருக்கும் சந்தோஷ் சோபன்,வறுமை நிறைந்த இளைஞனாகவும்,திறமை மிகுந்த இன்டீரியர் டெக்கரேட்டராகவும் மானசாவிற்க்கு மனம் நிறைந்த காதலனாகவும் நடித்திருக்கிறார். அவருக்கான கதாபாத்திரம் சிறப்பாக. செய்துள்ளார்.
நாயகியாக நடித்திருக்கும் மானசா வாரணாசிக்கு சும்மா வந்துபோகிற வேடமாக இல்லாமல் அழுத்தமான வேடம்.அவருடைய அழகும் பாத்திரத்துக்கேற்ற நடிப்பும் நன்று.ஓரிரு இடங்களில் கண்கலங்க வைத்துவிடுகிறார். பார்வையாளர்களின் அனைவரின் கவனத்தை பெறுகிறார்.
யோகிபாபு .அவர் வருகிற காட்சிகள் சிரிக்கிற மாதிரி அமைந்திருக்கின்றன.ராஜிவ் கன்கலா,ஸ்ரீரஞ்சனி உள்ளிட்ட மற்ற நடிகர்களும் ஏற்றுக்கொண்ட வேடத்துக்கேற்ப நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் தினேஷ் புருசோத்தமன்,கதையில் இருக்கும் காதல் உணர்வுகளை காட்சிகளிலும் காட்டி இரசிக்க வைத்திருக்கிறார்.நாயகனுக்கும் நாயகிக்கும் கூடுதல் பலமாக அவருடைய ஒளிப்பதிவும் அமைந்திருக்கிறது.
இசையமைப்பாளர் ஆதித்யா ரவீந்திரனின் இசையில் பாடல்கள் இதமாக அமைந்து கேட்டு,பார்த்து இரசிக்க வைக்கிறது.பின்னணி இசை திரைக்கதையோடு இசைந்திருக்கிறது.
எடிட்டர் கணேஷ் சிவா,படத்தை போரடிக்காமல் கொண்டு செல்ல வேண்டும் என நினைத்திருக்கிறார்.கொண்டு சென்றுமிருக்கிறார் தேவையான காட்சிகள் சேர்த்துள்ளார் மற்றும் இப்படத்தில் பணியாற்றிய அனைவரும் சிறப்பாக பணியாற்றியுள்ளனர்
எழுதி இயக்கியிருக்கும் அஸ்வின் சந்திரசேகர்,உண்மையான காதல் உணர்வுகளுக்கு எந்நாளும் மரணமில்லை என்பதைச் நேர்த்தியாக அழகாக சொல்லியிருக்கிறார். நம்பிக்கையூட்டும் விதமாக திரைக்கதை அமைத்திருக்கிறார்.பாராட்டு வாழ்த்துக்கள்.
இளைஞர்கள் குடும்பஸ்தர்கள் கண்டிப்பாக பார்க்கலாம்.










