Sunday, May 31

“கொம்பு சீவி.” திரைவிமர்சனம்.

ஸ்டார் சினிமாஸ் சார்பில் முகேஷ் டி செல்லையா தயாரித்திருக்கும் கொம்புசீவி படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் பொன்ராம்

இதில் சண்முகபாண்டியன் ,சரத்குமார் , தர்ணிகா- லைலா, சுஜித் சங்கர் – எ, முனிஷ்காந்த் –, கல்கி ராஜா – குந்து, காளி வெங்கட் – கான்ஸ்டபிள், ஜார்ஜ் மரியம்- கான்ஸ்டபிள், பிரபாகர் – கொண்டா ரெட்டி, ராமச்சந்திரன் – தரகர் பண்பாலன், இந்துமதி –  ஆகியோர் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

படக்குழுவினர்கள்:-இசை: யுவன் சங்கர் ராஜா, எடிட்டர்: தினேஷ் பொன்ராஜ், ஒளிப்பதிவு: பாலசுப்ரமணிய​ம், அதிரடி: பீனிக்ஸ் பிரபு, சக்தி சரவணன், கலை: சரவண அபிராமி, நடன இயக்குனர்: ஷெரீப், அசார், காவ்யா.ஜி, பாடல் வரிகள்: யுகபாரதி, பா.விஜய், சினேகன், ஸ்டில்ஸ்:- சி எச் பாலு, ஒப்பனை: பி எஸ் குப்புசாமி, ஆடை வடிவமைப்பாளர்: மீனாட்சி, மக்கள் தொடர்பு: நிகில்.

முருகன்.வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் மெகா ஹிட் படங்களை கொடுத்த பொன்ராம்  தற்போதுஷண்முக பாண்டியன் , இவர்கள் கூட்டணியில் வெளிவந்த கொம்புசீவி

வைகை அணை கட்டும் போது பல கிராமங்கள் செழிப்பானாலும், சில கிராமங்கள் பாதிக்கப்பட்டது. இதை மையமாக வைத்து கதைகளம் உருவாகியுள்ள படம் கொம்பு சீவி.

படத்தை பார்ப்போம்:

தேனி மாவட்டத்தில்  ஒரு கிராமத்தில் வாழ்ந்து வரும் சரத்குமார் ஊரில் நல்லது கெட்டது விஷயங்களில் கலந்து கொண்டு பெரிய மனிதராக வாழ்ந்து வருகிறார்

அதே ஊரில் தாய் தந்தையை இழந்த சிறுவன் சண்முக பாண்டியன், சரத்குமாரை ஒரு சிறிய சண்டையில் காப்பாற்றுகிறார். அதிலிருந்து  சரத்குமார் சண்முக பாண்டியனும் இருவரும் சேர்ந்து பயணிக்கிறார் போலீசிடம் மாட்டாமல் தப்பிக்க பலவித யுக்திகளை கையாண்டு கஞ்சா வியாபாரத்தில் கொடி கட்டிப்பறக்கிறார்கள். எதிர்க்கும் போலீஸ் அதிகாரிகளை பணபலத்தால் இடமாற்றலும் செய்து அனுப்பி விடுகிறார்கள். இவர்களை கைது செய்ய புதிய இன்ஸ்பெக்டர் லைலா வியூகம் அமைக்கிறார்.

. லைலாவை பார்த்தவுடன் ஒரு தலையாக பாண்டி காதலிக்க ஆரம்பிக்க, இதை பயன்படுத்தி இன்ஸ்பெக்டர் லைலா சண்முக பாண்டியை கஞ்சா கேசில் கைது செய்கிறார் மற்றும் வெடிகுண்டு தயாரித்தார்கள் என்று பொய் வழக்கு போட்டு உள்ளே தள்ளுகிறார். பொய் வழக்குயிருந்து வெளியே வந்தார்களா?? இருவரும் கஞ்சா தொழிலை தொடர்ந்து செய்தனரா? அதனால் ஏற்பட்ட எதிர்பாராத சம்பவம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.

சண்முக பாண்டியன் காதல், சண்டைக்காட்சிகள், காமெடி என்று அனைத்திலும்  ஸ்கோர் செய்கிறார்,

சரத்குமார் இளமை மற்றும் வயோதிக மாறுபட்ட தோற்றத்தில் ,   கலந்த நடிப்புடன் ஆக்ஷன், நகைச்சுவை இரண்டிலும் அசத்துகிறார்  கவனிக்க வைத்துள்ளார்.

நாயகியாக நடித்திருக்கும் அறிமுக நடிகை தார்னிகா, காவல்துறை அதிகாரியாக மிடுக்காகவும், எடுப்பாகவும் இருக்கிறார். புடவையில் கூடுதல் கவனம் ஈர்ப்பவர்,

முனிஷ்காந்த் –, கல்கி ராஜா – குந்து, காளி வெங்கட் – கான்ஸ்டபிள், ஜார்ஜ் மரியம்- கான்ஸ்டபிள், பிரபாகர் – கொண்டா ரெட்டி, ராமச்சந்திரன் – தரகர் பண்பாலன், இந்துமதி –  ஆகியோர் கொடுத்த  கதாபாத்திரத்தில் சிறப்பாக  நடித்துள்ளனர்.

இசை: யுவன் சங்கர் ராஜா, எடிட்டர்: தினேஷ் பொன்ராஜ், ஒளிப்பதிவு: பாலசுப்ரமணிய​ம், சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளனர்

  • ஒட்டுமொத்தமாக, படம் , சண்முக பாண்டியன் மற்றும் சரத்குமார் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. 

இயக்குனர் பொன்ராம்,  சண்முக பாண்டியனின் கிராமத்து ஹீரோயிசம், சரத்குமாரின் நடிப்பு, ஆக்‌ஷன், காமெடி பாராட்டப்பட்டாலும், திரைக்கதையில் கூர்மை இல்லை உங்கள் முயற்ச்சிக்கு பாராட்டு