Thursday, April 16

“மதராஸி”படத்தின் விமர்சனம்.

நடிப்பு: சிவகார்த்திகேயன், ருக்மணி வசந்த், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன், சபீர் கல்லர்கால், விக்ராந்த்,தயாரிப்பு: ஸ்ரீலட்சுமி மூவிஸ்,இசை: அனிருத் ஒளிப்பதிவு: சுதீப் எலமான் இயக்கம்: ஏ ஆர் முருகதாஸ்

பிஆர்ஓ: சதீஷ் ( AIM), சிவா

படத்தை பார்ப்போம்:

தமிழ்நாட்டுக்குள் துப்பாக்கி கலாச்சாரத்தை உருவாக்க நினைக்கும் மிக பெரிய பயங்கரவாத கும்பல் ஒன்று, மிகப்பெரிய அளவிலான   ஆயுதங்களை தமிழ்நாட்டிற்கு 6 கண்டெய்னர் லாரியில்  கொண்டு வருகிறார்கள்  இதனை தடுக்கும் முயற்சியில் பிஜு மேனன் தலைமையிலான தேசிய புலனாய்வு அமைப்பு ஈடுபடுகிறது பாதுகாப்பு படையினர் பலர் உயிர் இழக்கிறார்கள் இதில் பிஜு மேனனுக்கு விபத்து ஏற்பட்டு மருத்துவ மனையில் அனுமதிக்கப்படுகிறார். அதே மருத்துவமனையில்  காதல் தோல்வியால் சிவகார்த்திகேயன் தற்கொலை செய்து கொள்ள மேம்பாலத்தின் மீது இருந்து கீழே குதிக்க சிறு காயங்களுடன் இதே மருத்துவ மனையில் சேர்க்கப்படுகிறார். சிவகார்த்திகேயன் தொடர்ந்து தற்கொலை செய்து கொள்ள  முயற்சி செய்கிறார். இதை தெரிந்து கொண்ட பிஜு மேனன் ஏற்கனவே பாதுகாப்பு படையினர் பலர் உயிர் இழந்த நிலையில் மற்றொரு வீரரை இழக்க விரும்பாத தேசிய புலனாய்வு  அதிகாரி பிஜு மேனன் தற்கொலைக்கு தயாராக இருக்கும் சிவகார்த்திகேயன் வைத்து, பயங்கரவாத கும்பலின் திட்டத்தை முறியடிக்க பிஜு மேனன் முடிவு செய்கிறார் அந்த கண்டெய்னர் லாரி அம்பத்தூரில் உள்ள ஒரு தொழிற்சாலையில் இருப்பது தெரிய வர அந்த ஆயுதங்களை அழிப்பதற்காக சிவகார்த்திகேயனை அனுப்பி வைக்கிறார் பிஜு மேனன் இந்நிலையில் சிவகார்த்திகேயன் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும், அதற்காக சுமார் 16 ஆண்டுகள் சிகிச்சை பெற்று வந்தவர் என்றும் பிஜு மேனனுக்கு தெரிய வருகிறது.இதே வேளையில் சிவகார்த்திகேயனை தேடி நாயகி ருக்மணி வசந்த் தேசிய புலனாய்வு துறை அலுவலகத்திற்கு வருகிறார். இறுதியில் சிவகார்த்திகேயன் மூலம் பயங்கரவாத கும்பலின் திட்டம் முறியடிக்கப்பட்டதா ? இல்லையா? சிவகார்த்திகேயன் – ருக்மணி வசந்த் இருவரும் ஒன்று சேர்ந்தார்களா? இல்லையா? என்பதே ’மதராஸி’ படத்தின் கதை.

நாயகனாக நடித்திருக்கும் சிவகார்த்திகேயன் மனநல பாதிக்கப்பட்ட இளைஞராக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். காதல்,, சண்டை, காமெடி என அனைத்திலும் அசத்தியிருக்கிறார். குறிப்பாக வித்யூத் மோதும்  ஹாலிவுட் நிகரான கிளைமாக்ஸ் ஆக்சன் சண்டை காட்சியில்  .

நாயகியாக நடித்திருக்கும் ருக்மணி வசந்த் அழகாக வந்து அளவான நடிப்பின் மூலம் கவர்கிறார். துப்பாக்கி படத்திற்குப் பிறகு மீண்டும் வில்லனாக மிரட்டியிருக்கிறார் வித்யூத் ஜமால்

மற்றொரு வில்லனாக நடித்திருக்கும் சபீர் கல்லரக்கல், தேசிய புலனாய்வு அமைப்பின் அதிகாரியாக நடித்திருக்கும் பிஜு மேனன், விக்ராந்த் ஆகியோர் கதைக்கு ஏற்ற தேர்வாக இருக்கிறார்கள்.

இசையமைப்பாளர் அனிருத் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்க்கும் விதத்தில் உள்ளது. சுதீப் இளமோன் ஒளிப்பதிவில் காட்சிகள் அழகாகவும் பிரமாண்டமாகவும் இருக்கிறது.

அமைதியாக இருக்கும் தமிழகத்தில் துப்பாக்கி போன்ற பயங்கரமான ஆயுதங்கள் கிடைத்தால் அது பொதுமக்களுக்கு எத்தகைய ஆபத்து  உருவாகும் என்பதை மைய கருவாக வைத்து முழு நீள ஆக்ஷன் திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இத்திரைப்படத்தை ஆரம்பம் முதல் இறுதிவரை விறுவிறுப்பாக கொண்டு சென்ற இயக்குனருக்கு பாராட்டுக்கள்.