
வி கிரியேஷன்ஸ் கலைப்புலி எஸ்.தாணு மற்றும் கிச்சா கிரியேஷன்ஸ் சார்பில் இணைந்து தயாரித்திருக்கும் மேக்ஸ் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் விஜய் கார்த்திகேயா.
இதில் போலீஸ் இன்ஸ்பெக்டராக அர்ஜுன் மஹாக்ஷய் – மேக்ஸ் கதாபாத்திரத்தில் சுதீப், காவல் ஆய்வாளர் ரூபாவாக வரலட்சுமி சரத்குமார், காவலர் ஆரத்தியாக சம்யுக்தா ஹொர்னாட்,காவலர் மீனாவாக சுக்ருதா வாக்லே, கானியாக சுனில், அமைச்சர் பரசுராமாக சரத் லோகிதாஸ்வா, நரசிம்மனாக வம்சி கிருஷ்ணா, அமைச்சர் டேனியலாக ஆடுகளம் நரேன், தேவராஜாக பிரமோத் ஷெட்டி, செபாஸ்டியனாக ரெடின் கிங்ஸ்லி, தலைமைக் காவலர் ராவணனாக இளவரசு, காவலர் ஜகதீஷாக அனிருத் பட், உதவி காவல் ஆய்வாளர் தாஸாக ‘உக்ரம் மஞ்சு’இகாமராஜு கரண் ஆர்யா ஆகியோர் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப வல்லுனர்கள் :- ஒளிப்பதிவாளர் : சேகர் சந்திரா, இசையமைப்பாளர் : பி. அஜனீஷ் லோக்நாத், தயாரிப்பு வடிவமைப்பாளர் : சிவகுமார் ஜே.,படத்தொகுப்பாளர் : எஸ். ஆர். கணேஷ் பாபு, அதிரடி ஆக்ஷன் இயக்குனர் : சேத்தன் டிசோசா ,நிர்வாக தயாரிப்பாளர் : எம். டி. ஸ்ரீPராம், தயாரிப்பு கட்டுப்பாட்டாளர் : ஏ இளங்குமரன், தயாரிப்பு நிர்வாகி : என் மகேந்திரன், சம்பகடமா பாபு கே. எஸ்.,ஆடை வடிவமைப்பாளர் : பாரத் சாகர், ஆடைகள் : பெருமாள் செல்வம்,ஒப்பனை : நெல்லை வி.சண்முகம், ஒலிப்பதிவு : டி. உதய் குமார் (நாக் ஸ்டுடியோஸ்), ஒலி வடிவமைப்பு : டி. உதய் குமார், ரஞ்சித் வேணுகோபால், எம். சரவணா குமார் (சவுண்ட் வைப்),டிஐ : நாக் ஸ்டுடியோஸ்,எம். பி. சஜய் குமார்,வண்ணக் கலைஞர் : பிரசாத் சோமசேகர், விஎஃப்எக்ஸ் : அஜாக்ஸ், நாக் ஸ்டுடியோஸ், ஃபைவ்எஃப்எக்ஸ், படங்கள் : இம்ரான், டிசைன்கள் : பவன், nரடோட் டிசைன்ஸ், விளம்பரங்கள் : கே. ஆர். ஜி கனெக்ட்ஸ், பிஆர்ஒ தொடர்பு – ரியாஸ் கே.அஹ்மத்
படத்தை பார்ப்போம்:
ஒரே இரவில் நடக்கும் கதை
போலீஸ் அதிகாரி அர்ஜுன் என்கிற மேக்ஸ் (கிச்சா சுதீப்) பணி இடைநீக்கம் முடிந்து மாற்றலாகி புதிய போலீஸ் ஸ்டேஷனுக்கு (நாளை காலை) பொறுப்பேற்க வருகிறார் வரும் வழியில் பெண் போலீஸிடம் இளம் வாலிபர் இருவர் தகராறு செய்வதை பார்க்கிறார் அவர்களை அடித்து லாக்காப்பில் தள்ளி அடைகிறார் . இவர்களை எப்.ஐ.ஆர் போடச் சொல்லி வீட்டுகுச் செல்கிறார் இவர்கள் இருவரும் அமைச்சர் மகன்கள் தெரிந்ததும் மற்ற போலீஸ்காரர் -. எப்.ஐ.ஆர் போட தயங்குகிறார்கள். ஸ்டேஷனில் இருந்த போலீஸ்காரர்கள் வெளியில் (Duty) டூட்டிக் சென்று விடுகிறார்கள் இருந்த ஒரு போலீஸ்காரர் மறுநாள் (ஓய்வு பெறும் ஏட்டு )தன் மனைவிக்கு உடல் நலம் சரியில்லையென்று போலீஸ் ஸ்டேஷனை பூட்டி (Lock)யிட்டு போய்விடுகிறார் . வெளியில் சென்ற போலீஸ்காரர் ஸ்டேஷனுக்கு வருகிறார்கள். வந்து பார்த்த லாக்காப்பில் – இருந்து இரண்டு இளைஞர்கள் இறந்து கிடக்கின்றனர். இந்த விஷியம் அமைச்சர்களுக்கு தெரிந்தால் நம்மளை கொன்றுவிடுவார்கள் பயத்தில் இங்கு நடந்த உண்மையை எல்லா போலீஸ்சும் ஒன்றுகூடி போலீஸ் அதிகாரி சுதீப்யிடம் (புதிதாக பொறுப்பேற்க்கும்) சொல்லுகிறார்கள் . அவர் சொல்படி ஸ்டேஷனில் சில மாற்றங்கள் செய்கிறார் . அமைச்சரின் அடியாட்கள் படையெடுத்து போலீஸ் ஸ்டேஷனில் வருகிறார்கள் அவர்களை உள்ளே வர விடாமல் வெளியே அடித்து தும்சம் செய்கிறார்..உடனே போலீஸ் கமிஷனர் போன் வீடியோகால் ( video call ) வருகிறார் போலீஸ் ஸ்டேஷனை Inch இன்ச்சாக பார்கிறார்.. சரியா தான் இருக்கிறது நம்பிகையுடன் அமைச்சரிடம் உன் மகன்கள் அங்கு இல்லை கூறுகிறார் இருந்தாலும் அமைச்சர் நம்பவில்லை தனக்கு வேண்டிய பணத்துக்காக (விஸ்வாஸம்) வேலை செய்யும் போலீஸ் அதிகாரி வரலட்சுமி சரத்குமார் ஸ்டேஷன் உள்ளே வருகிறார் எந்த தடயமும் கிடைக்கவில்லை இருந்தாலும் சந்தேகம் வலுக்கிறது.
ஒரு பக்கம் அமைச்சர் தன் மகன்கள் காணவில்லை டென்ஷன் வேதனை அடியாட்கள் படையை விட்டு தேட சொல்லுகிறார் , போலீஸ் ஸ்டேஷனை கண்காணிக்க சொல்லுகிறார் . மற்றொரு பக்கம் போலீஸ் ஸ்டே ஷனில் இருந்த இறந்த இருவரின் உடல் (பாடி) எங்கே ? அவர்கள் எப்படி இறந்தார்கள் யார் காரணம் ? இந்த கொலை பழியிலிருந்து போலீஸ்காரர்கள் தப்பித்தார்களா? புதியதாக பொறுப்பேற்க்க வந்த போலீஸ் அதிகாரி கிச்சா சுதீப் பொறுப்பேற்றாரா.? பல கேள்விகள் நமக்குள் கேட்கிறது மீதி கதை….
கிச்சா சுதீப் நடிப்பு மாஸ் ஆக்ஷன் என்ட்ரி கொடுக்கிறார் காதல் இல்லை தொடர்ந்து அடிதடி சண்டை காட்சிகள் சூப்பர்.. இளவரசு போலீஸ் ஏட்டு – ஆக நடிப்பு சரியாக சிறப்பாகவும் செய்துள்ளர் . போலீஸ் வில்லன் வில்லியாக வரலஷ்மி சரத்துகுமார் பரவாயில்லை மற்றும் இதில் நடித்த அனைவரும் சிறப்பாக இருந்தது
தொழில்நுட்ப கலைஞர் :ஒளிப்பதிவாளர் : சேகர் சந்திரா, ஒளிவீச்சு இரவு காட்சிகள். ஹாலிவுட் படம் போல் இருந்தது.
இசையமைப்பாளர் : பி. அஜனீஷ் படத்தின் ஒட்டத்திற்க்கு ஏற்ப இசை நம்ம இழுத்துச் செல்லுகிறது
படத்தொகுப்பாளர் : எஸ். ஆர். கணேஷ் பாபு படத்தின் வேகம் , குறையாமல் அடுத்தது என்ன என்ற எதிர்ப்பார்ப்புடன் இருக்கிறது
அறிமுக இயக்குனர் விஜய் கார்த்திகேயன் முதல் படம் த்ரில்லர் வித்தியசமான கதைகளம் சூப்பர் எளிதில் யூகிக்க முடியாது அடுத்த காட்சி என்ன என்று சொல்ல முடியாது படம் வேகமாக நகர்கிறது திரையுலகில் வெற்றியும் பெறுவார்.
இதில் பணியாற்றிய அனைத்து தொழில்நுட்ப கலைஞர்கள் சிறப்பாக தன் பங்களிப்பை கொடுத்துள்ளார்
மொத்த படத்தையும் ஒரே ஆள் ஹீரோ கிச்சா சுதீப் தாங்கி பிடிக்கிறார் .
படத்தில் ஏகப்பட்ட லாஜிக் சிக்கல்கள் இருந்தாலும் max மேக்ஸ் மேக்ஸிமம் பொழுது போக்கு படம்










