Sunday, July 26

“போர்” திரைப்பட விமர்சனம்.

டி-சீரிஸ், கெட்அவே பிக்சர்ஸ், ரூக்ஸ் மீடியா சார்பில் பிஜாய் நம்பியார், பிரபு ஆண்டனி, மது அலெக்சாண்டர் தயாரித்திருக்கும் போர் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் பிஜாய் நம்பியார்

இதில் அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராம், டி.ஜே.பானு, சஞ்சனா நடராஜன், அம்ருதா சீனிவாசன், மெர்வின் ரோஜாரியோ மற்றும் பலர் நடித்துள்ளனர்.

தொழில் நுட்ப கலைஞர்கள்:இசை: சஞ்சித் ஹெக்டே, துருவ் விஸ்வநாத், கௌரவ் கோட்கிண்டி, பின்னணி இசை : ஸ்கோர் மார்டன் டேப் ஸ்கோர்கள் (ஹரிஷ் வெங்கட் மற்றும் சச்சிதானந்த் சங்கரநாராயணன்), கௌரவ் கோட்கிண்டி, ஒளிப்பதிவு : ஜிம்ஷி காலித் மற்றும் பிரெஸ்லி ஆஸ்கார் டிசோசா,எடிட்டர் : பிரியங்க் பிரேம் குமார், கலை இயக்குனர் : மணிமொழியன் ராமதுரை ,பாடகர்கள் : சஞ்சித் ஹெக்டே, வி.எம்.மகாலிங்கம், வர்ஷா எஸ்.கிருஷ்ணன், கபில் கபிலன், பாடல் வரிகள் : கிருத்திகா நெல்சன், விக்னேஷ் ஸ்ரீPகாந்த், மோகன் ராஜன், அதிரடி இயக்குனர் : ரியாஸ் மற்றும் ஹபீப், கிரியேட்டிவ் தயாரிப்பாளர் : பாலகுமாரன், ஒலி வடிவமைப்பு : டான் வின்சென்ட், நிர்வாக தயாரிப்பாளர் : லக்ஷய் குமார், பிஆர்ஓ : சதீஷ்குமார்

படத்தை பார்ப்போம்:

இரு மாணவர்களின் ஈகோ வால் போர்களம் ஆனது !

மருத்துவப் பல்கலைக்கழகத்தில் பி.ஹெச்டி பட்டம் சீனியர் மாணவராக பிரபு செல்வன் (அர்ஜுன் தாஸ்). அங்கு முதலாமாண்டு மாணவராக நுழைகிறார் யுவராஜ் (காளிதாஸ் ஜெயராம்). இருவருக்கும் சிறு வயதிலிருந்தே பள்ளி படிக்கும் போதே பகை. யுவராஜ் பள்ளியில் படிக்கும் போது ஏற்பட்ட பெரிய அவமானம் அதற்க்கு  பிரபு செல்வன் தான் காரணமாகிறார் அந்த பகை அது இங்கும் தொடர்கிறது. இவர்களின் பொதுவான தோழிகளாக ரிஷ்விகா (சஞ்சனா நடராஜன்), காயத்ரி (டி.ஜெ.பானு) இருக்கின்றனர். இன்னொரு பக்கம், மாணவர் தேர்தலில் கல்லூரி டிரஸ்டி மகள் சூர்யாவுக்கும் (அம்ருதா சீனிவாசன்) காயத்ரி குழுவுக்கும் பகை. இந்த இரு பகைகளும் ஒன்றாக இணைகின்றன் . அதன் விளைவால் பல்கலைக்கழகம் எப்படி ‘போர்’க்களமாகிறது என்பது கதை.

பிரபு செல்வன் (அர்ஜுன் தாஸ்) கல்லூரி தாதாவாக கோபம் காதல்,  என அத்தனை உணர்ச்சிகளையும் அற்புதமாக வெளிப்படுத்தி இருக்கிறார். ஒரே கட்ட குரல் ,உடல் மொழி கடைசி வரையும் நல்ல நடிப்பு தன்னுடைய கதாபாத்திரம் சிறப்பாக செய்துள்ளார்.

யுவாராஜ் இதுவரை (காளிதாஸ் ஜெயராம் )மென்மையான கதாபாத்திரம் நடித்திருந்தார் இந்த படத்தில் வித்தியாசமான கதாபாத்திரம் சிறப்பாக நடித்துள்ளார்

நாயகிகள் சஞ்சனா நடராஜன், டி. ஜெ. பானு மற்றும்  நித்யஶ்ரீ, அம்ருதா ஸ்ரீனிவாசன் சிறப்பான தன் நடிப்பை கொடுத்துள்ளார்

கல்லூரியில் நடக்கும் தேர்தலில் அரசியல்வாதியின் மகளை எதிர்த்து போராடும் புரட்சிப் பெண் காயத்ரி, சரியாக தன் பங்களிப்பை கொடுத்துள்ளார்

இயக்குனர் பிஜாய் நம்பியார் அரசியல்வாதியின் வாரிசு செய்யும் அராஜகங்கள், கல்லூரி தேர்தல், ஜாதியம், உரிமைக்குப் போராடும் பெண் என பல கதைகள் தொட்டுயிருக்கிறார். சமூகத்தில் நடக்கும் பல்வேறு பிரச்சனை சொல்ல முயற்ச்சிக்கிறார் இயக்குநர்   திரைக்கதையில் கவனம் செலுத்திருக்கவேண்டும் சொல்ல வந்ததை சரியாக சொல்லவில்லை. 

ஒளிப்பதிவாளர்கள்  ஜிம்ஷி காலிட், பிரெஸ்லி ஆஸ்கர் டிசோசா,  பின்னணி இசை ஹரீஷ் வெங்கட், சச்சிதானந்த் சங்கரநாராயணன்,  கௌரவ் கோட்கிண்டி,
கலை இயக்குநர்கள்  லால்குடி இளையராஜா, மானசி சாவரே, படத்தொகுப்பாளர்கள் பிரியங்க் பிரேம் குமாரி… சிறப்பாக தன்பணியை செய்துள்ளனர்.

கிளைமேக்ஸ் காட்சி மிக பொருட் செலவில் எடுக்கப்பட்டு உள்ளது.

மொத்தத்தில் இப் படம் போர் படம் . இளைஞர்கள் ஜோர்! ! எனக்கு செம போர்…