
தெலுங்கு மொழி காவிய வரலாறு இந்தியாவிற்குச் சுதந்திரம் கிடைத்த பிறகு, நிஜாம் மிர் ஒஸ்மான் அலி கானின் ஆளுகைக்கு உட்பட்ட ஹைதராபாத் மாகாணத்தில் ஏற்பட்ட நிர்வாகக் குழப்பங்களையும், அதன் விளைவாக ஹிந்துக்களுக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட அரசு பயங்கரவாதத்தையும் பற்றிப் பேசுகிறது இப்படம். மிர் ஒஸ்மான் அலி கானை யோசிக்கவிடாமல், எப்படி காஸிம் ரஸ்வி, ரஸாக்கர் ஆயுதப்படையை உருவாக்கி ஹைதராபாத் மாகாணத்து மக்கள் மீது வரிச் சுமையையும், ஹிந்து மத சடங்குகளையும் திருவிழாக்களையும் பொதுவில் கொண்டாடத் தடையையும் விதித்தார் என்பதே படத்தின் திரைக்கதை. குடூர் நாராயண ரெட்டி, இப்படத்தை சுமார் 40 கோடி ரூபாய் பொருட்செலவில் தயாரித்துள்ளார். மேலும் ஒரே நேரத்தில் இந்தி, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டது.
இதுவரை சொல்லப்படாத வரலாற்று உண்மைகளை மையமாக கொண்டு வடிமைக்கப்பட்டுள்ள இப்படத்தின் திரைக்கதை மற்றும் காட்சிகள்,
ஐதராபாத்தை ஆண்ட மிர் உஸ்மான் அலிகான் வேடத்தில் நடித்திருக்கும் மகரந்த் தேஷ் பாண்டே, அசிம் ரஸ்வி வேடத்தில் நடித்திருக்கும் ராஜ் அர்ஜூன், சந்தாவாவாக நடித்திருக்கும் வேதிகா, எம்மடி ராஜி ரெட்டியாக நடித்திருக்கும் பாபி சிம்ஹா, சர்தார் வல்லபாய் பட்டேல் வேடத்தில் நடித்திருக்கும் தேஜ் சப்ரு உள்ளிட்ட நடிகர்கள் அனைவரும் தங்களது வேலையை திறம்பட செய்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் குஷேந்தர் ரமேஷ் ரெட்டியின் உழைப்பு அனைத்துக் காட்சிகளிலும் ஒளிவீச்சு மிளிர்கிறது. பீம்ஸ் சிசிரோலியோ இசையில் பாடல்களும், பின்னணி இசையும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.
1947ம் ஆண்டுகளில் பயன்படுத்தப்பட்ட வாகனங்கள், துப்பாக்கிகள், கிராமம் என்று கலை இயக்குநர் திருமலா எம்.திருப்பதியின் அபாரமான பணி படத்தின் தரத்தை அதிகரிக்கச் செய்திருக்கிறது.
மிகப்பெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ள இப்படம் இப்படத்தில் நடித்த கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர் அனைவரும் மிக சிறப்பாக தன் பணியை செய்துள்ளனர்
“”ரஸாக்கர்” திரைப்படம் நம்.வரலாற்றையும் நம் முன்னோர்கள் அனுபவித்த கொடுமைகளை சொல்லுகிறது இன்றைய இளைய தலைமுறைகள் அவசியம் அனைவரும் பார்க்க வேண்டிய படம்.










