
பாவகி என்டர்டெயின்மென்ட்’ நிறுவனத்தின் சார்பில், ஜெயச்சந்தர் பின்னம்நேனி மற்றும் பாலாஜி மாதவன் இணைந்து தயாரித்துள்ளதுடன் இயக்கியிருக்கும் படம், இடி மின்னல் காதல்.
இடி மின்னல் காதல் படத்தில், சிபி மற்றும் பவ்யா த்ரிகா முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருக்க, இவர்களுடன் ராதா ரவி, பாலாஜி சக்திவேல், ஜெய் ஆதித்யா, ஜெகன், வின்சென்ட் நகுல், மனோஜ் முல்லத், மோனா பெத்ரே, அனுஷா, ஸ்ரீ ராம், சோமு, சிவராஜ், ருத்ரு மற்றும் ஆரண்ய காண்டம் படத்தில் நடித்த யாஸ்மின் பொன்னப்பா ஆகியோர் நடித்துள்ளனர்.
சிபி – பவ்யா த்ரிகா இருவரும் காதலர்கள்.வெளிநாடுசெல்லத்தயாராக இருக்கிறார் சிபி. அதற்கு முன், இருவரும் காரில் ஜாலியாக சுற்றிவர வருகின்றனர். அப்போது இவர்களது காரில் சற்றும் எதிபாரத சூழ்நிலையில் திடீரென்று குறுக்கே ஒருவர் வருகிறார் அவர் மீது கார் மோதி அடிபட்டு இறந்து விட, அதை போலீசிடம் மறைப்பதுடன், சிபி வெளிநாடு செல்ல, பவ்யா த்ரிகா செல்வதற்கான அனைத்து உதவிகளையும் காதலி பவ்யா ட்ரிகா செய்து வருகிறார்.
இதற்கிடையே, உயிரிழந்த நபரின் மகன் ஆதித்யா தனது அப்பா இறந்ததை ஏற்றுக்கொள்ள முடியாமல் மன அழுத்தத்திற்கு ஆளாகிறார். லோகல் போலீஸ் ஏட்டுஐயா நடித்திருக்கும் பாலாஜி சக்திவேல் அந்த பையனுக்கு உதவி செய்கிறார்
பாலியல் தொழிலாளி யாஷ்மின் பொன்னப்பா ஆதரவளிக்க, இறந்து போனவர் வாங்கிய கடனுக்காக அவருடைய மகன் ஆதித்யாவை தாதா வின்செண்ட் நகுல் அழைத்துச் செல்ல முயற்சிக்கிறார்.
தன்னால் உயிரிழந்தவரின் மகன் தான் ஆதித்யா என்பது தெரியாமலேயே அவரை காப்பாற்றும் முயற்சியில் நாயகன் சிபி ஈடுபடுகிறார். ஆனால், தனது தந்தை இறந்ததற்கு காரணம் சிபி தான் என்பதை தெரிந்துக்கொள்ளும் சிறுவன் ஆதித்யா, சிபி மீது கொலை வெறிக்கொள்ள, அதனால் எப்படிப்பட்ட பாதிப்புகள் ஏற்படுகிறது என்பதை சொல்வது தான் ’இடி மின்னல் காதல்’.
சிபி, காதல் காட்சிகளிலும், ஆக்ஷன் அதிரடி காட்சிகளிலும் கவனம் ஈர்க்கிறார். ஆக்ஷன் ஹீரோக்கான தகுதிகளுடன் இருப்பது சிறப்பு! இவரது திறமை திரையுலகில் நல்ல எதிர்காலம் உள்ளது .
பவ்யா த்ரிகா, அழகாக இருக்கிறார். உணர்வுகளை வெளிப்படுத்தி அவரது காதல் காட்சிகள் நன்றாக இருக்கிறது சிறப்பாக நடித்திருக்கிறார்.
பாலியல் தொழிலாளியாக நடித்திருக்கும் யாஷ்மின் பொன்னப்பா கொடுத்த வேலையை சிறப்பாக தன் நடிப்பை (மனதில் நிற்கிறார்) குறையில்லாமல் செய்திருக்கிறார்.
வில்லன் வேடத்தில் நடித்திருக்கும் வின்செண்ட் நகுல், சிறப்பாக தன் நடிப்பை கொடுத்துள்ளார்.
கிறிஸ்தவ பாதிரியராக நடித்திருக்கும் ராதாரவி அனுபவம் வாய்ந்த நடிப்பு :
போலீஸ் கான்ஸ்டபிளாக நடித்திருக்கும் பாலாஜி சக்திவேல் நடிப்பு படத்திற்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறார்கள்.
நாயகனின் நண்பராக நடித்திருக்கும் ஜெகன், காமெடி நடிகராக அல்லாமல் குணச்சித்திர நடிகராக மிளிர செய்திருக்கிறார் ..
சிறுவன் ஆதித்யா அப்பா இறந்த துக்கத்தை தாங்காமல் மன ரீதியாக பாதிக்கப்பட்டு தடுமாறும் காட்சிகள் சிறப்பாக செய்துள்ளார்
இப்படத்தில் நடித்த அனைத்து கதாபாத்திரங்கள் சிறப்பாக உள்ளது
இதில் பணியாற்றி தொழில்நுட்ப கலைஞர் அனைவரும் தன்பணியை சிறப்பாக செய்துள்ளனர்.
இயக்குநர் பாலாஜி மாதவன் அமைத்திருக்கும் கதைகளம் சிறப்பானவை அருமையானது ஒகே :திரைக்கதையில் இன்னும் கவனம் தேவை பயிற்ச்சி முயற்ச்சியும் தொடரட்டும் … உங்களுக்கு திரையுலகில் நல்ல எதிர்காலம் உள்ளது.
இடி மின்னல் காதல்… ஒரு முறை பார்க்கலாம்
ரோட்டிங் : 2.8










