Thursday, April 16

விஜய் டிவிக்கு கும்பிடு போட்டு சன் டிவிக்கு தாவிய நடிகை… விரைவில் ஒளிபரப்பாகும் புதிய சீரியல்….!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பான 7சி சீரியல் தொடங்கி இறுதியாக வெளியான ஈரமான ரோஜாவே 2 வரை விஜய் டிவியில் ஏராளமான நிகழ்ச்சிகள் மற்றும் தொடர்களில் பங்கேற்றவர் தான் நடிகை கேப்ரில்லா.

இவர் சின்னத்திரை தவிர 3, அப்பா போன்ற ஒரு சில படங்களிலும் நடித்துள்ளார். இவர் ஹீரோயினாக நடித்த ஈரமான ரோஜாவே 2 சீரியல் சமீபத்தில் முடிவடைந்த நிலையில், அடுத்த ப்ராஜெக்ட் குறித்து இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகாமல் இருந்தது.

இந்நிலையில் தற்போது கேப்ரில்லா சன் டிவியில் ஒளிபரப்பாகவுள்ள புதிய சீரியல் ஒன்று முதன்மை கேரக்டரில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளாராம். ஏற்கனவே ஒளிபரப்பாகி வரும் வானத்தை போல சீரியல் தயாரிப்பு நிறுவனம் தான் இந்த புதிய சீரியலையும் தயாரிக்க உள்ளதாம்.

இதுதவிர இந்த தொடரில் கேப்ரில்லா உடன் ஜோடியாக நடிகர் ராகுல் ரவி நடிக்க உள்ளார். சீரியல் பெயர் மற்றும் பிற நடிகர்கள் உள்ளிட்ட தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts: