Sunday, May 31

“மகாசேனா” திரை விமர்சனம்.

மருதம் புரொடக்ஷன்ஸ தயாரித்திருக்கும் மகாசேனா படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் தினேஷ் கலைச்செல்வன்

இதில் விமல் -​ செங்குட்டுவன், சிருஷ்டி டாங்கே – பொம்மி, யோகிபாபு – சுருளி ,ஜான் விஜய் – பிரதாப் , கபீர் துஹான் சிங் – கிங் ஆப் காட்ஸ் , மஹிமா குப்தா – கங்கா , விஜய் சேயோன் – இடும்பன் , அல்ஃப்ரெட் ஜோஸ் – காமராஜ் , சுபாங்கி ஜா – மைத்திலி ,சிவகிருஷ்ணா – காளி , இலக்கியா – அல்லி மற்றும் பலர்  நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள் :- ஒளிப்பதிவாளர் – மனாஸ் பாபு, இசை – பிரவீன் குமார் , பின்னணி இசை – உதய் பிரகாஷ் , கலை இயக்குனர் – தினேஷ் குமார், படத்தொகுப்பாளர் – நாகூரான் ராமச்சந்திரன் , சண்டைக்காட்சி – ராம்குமார் , பாடல் வரிகள் – தினேஷ் கலைச்செல்வன், பாபு வசிகர்மன் , மக்கள் தொடர்பு – ரேகா

கதை கரு

இருமலை கிராமங்களுக்கு கிடையே உள்ள பகையைவைத்து சாமிசிலை கடத்தல் கும்பல் மலைக்கு வருகிறது

படத்தை பார்ப்போம்:

பழங்குடியினரான நாயகன் விமல் சேனா என்ற யானையை வளர்க்கிறார்.மலைமேல் உள்ள மக்களுக்கு தலைவராக இருக்கிறார்

அடிவாரத்தில் வாழும் பழங்குடி மக்களுக்கு யாளீஸ்வரர் சிலையை தாங்கள் வழிபட கடத்தி வர வேண்டும் என்ற பெரிய ஆசை நிறைவேறாமல் இருப்பதால் பகை தீராமல் இருக்கிறது.யாளிஷ்வரன் சிலையை வனத்துறை அதிகாரி ஜான் விஜய், திருட திட்டமிடுகிறார். இதற்கிடையே யானை மதம் பிடித்த விமலின்   மகளை தாக்கிவிட்டு காட்டுக்குள் சென்று விடுகிறது. யானையை தேடி காட்டுக்குள் செல்லும் விமல், கோவில் சிலை கடத்தல் திட்டத்தை முறியடித்தாரா ? , காட்டுக்குள் சென்ற யானை என்னவானது ? என்பது தான் படத்தின் மீதிகதை..

கதையின் நாயகனாக பழங்குடியினராக நடித்திருக்கும் விமல், வழக்கம் போல்  சாதாரணமாக நடிப்பு.

நாயகியாக நடித்திருக்கும் சிருஷ்டி டாங்கே, பழங்குடியின பெண்ணாகவும், வீரம் மிக்கவராகவும் தனது பணியை சிறப்பாக செய்திருக்கிறார்.

யோகி பாபு வரும் காட்சிகளில் சில சிரிக்க வைத்தாலும், நகைச்சுவை வழக்கம்போல் நடிப்பு. எடுபடவில்லை

ஒளிப்பதிவாளர் – மனாஸ் பாபு, இயற்க்கை பசுமை, மலையின் அழகையும் அள்ளி கொடுத்துள்ளார

இசையமைப்பாளர் ஏ.பிரவீன் குமாரின் இசையில் பாடல்கள் சுமார் ரகம். உதய் பிரகாஷ் பின்னணி இசை கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.

எடிட்டர் : நாகூரான் ராமச்சந்திரன், படத்திற்க்கு தேவையான காட்சிகள் மட்டும் இணைத்துள்ளார்

எழுதி இயக்கியிருக்கும் தினேஷ் கலைச்செல்வன், கதை தேர்வு சிறப்பாக இருந்தாலும்  திரைகதையில் கவனம் செலுத்தியிருக்கலாம்  உங்கள் முயற்ச்சிக்கு பாராட்டு வாழ்த்துக்கள்

இப்படம் அனைவரும் பார்க்கலாம்