Sunday, April 19

“வணங்கான்” திரைப்பட விமர்சனம்.

வணங்கான் திரைப்படத்தின் கதை என்னவென்றால் கன்னியாகுமரியில் சுனாமியின் பாதிப்பால்
வீடு வாசல் தாய் தந்தையரை இழந்த வாய் பேச முடியாத அனாதை சிறுவன் கோட்டி என்பவன் தனக்கு ஆதரவாக கிடைத்த பெண் பிள்ளை தேவியை தங்கையாகவே பாவித்து வளர்க்கிறான் இவர்களுக்கு அந்த ஊரின் சர்ச் பாதர் ஆதரவளித்து வளர்த்து வருகிறார்
அநியாயத்தை கண்டு பொங்கி பல பிரச்சினைகளை செய்யும் கதாநாயகனுக்கு பார்வையற்ற பிள்ளைகள் தங்கி இருக்கும் அனாதை ஆசிரமத்தில் காவல்காரன் வேலை கிடைக்கிறது

வாய் பேச முடியாத கதாநாயகன் கண்பார்வையற்ற பிள்ளைகளிடம் அண்ணனாக பழகுகிறான் அங்கு அந்தப் பெண்கள் குளிப்பதை ரசிக்கும் அந்த விடுதியில் பணிபுரிவோ வரை மிகக் கொடூரமாக கொன்று விடுகிறான் தானே கொன்றதாக காவல்துறையிடம் சரணடைந்து நீதிமன்றத்தின் விசாரணைக்கு நிறுத்தப்படுகிறான்

சிறையில் இருந்து அவன் எப்படி வெளியே வந்தான் வெளியே வந்தபின் அவனின் தங்கையின் நிலைமை என்ன என்பதுதான் இந்த படத்தின் கதை..

இயக்குனர் பாலா தனது பாணியை மாற்றவே இல்லை மீண்டும் நந்தாவையும் பிதாமகனையும் இணைத்து எடுத்த படமாகவே இந்த வணங்கான் இருக்கிறது கிட்டத்தட்ட பிதாமகளில் விக்ரம் நடித்த நடிப்பை தான் அருண்குமார் இதில் நடித்திருக்கிறார் வழக்கமாக பாலாவின் படங்களின் நடித்த கதாநாயகர்கள் வெற்றி பெறுவார்கள் அப்படியே நிச்சயம் அருண் விஜய் இந்த படத்தின் மூலம் வெற்றி பெறுவார் என்று நம்பலாம்

கதாநாயகியான ரோஷினி பிரசாத் அவரின் நடிப்பு நன்றாக இருந்தும்
படத்திற்கு ஒட்டவே இல்லை

அருண் விஜயின் தங்கையாக வரும் தேவி என்னும் கதாபாத்திரத்தில் நடித்த ரிதா அற்புதமாக நடித்துள்ளார்

வழக்கமான பாலா படங்களை விரும்புபவர்கள் இந்த படத்தை பார்க்கலாம் இயக்குனர் பாலாவின் சமுதாய சாடல்
இந்த படத்தில் பளிச்சிடுகிறது

பெரியாரையும் விநாயகரையும் கதாநாயகன் கிணற்றில் இருந்து எடுத்து வருவதைப் போன்று போஸ்டரில் போட்டு விட்டு படத்தில் ஒன்றுமே இல்லாமல் வழக்கம் போல் விநாயகரை வழிபடும் படமாகவே படைத்ததற்கு எதற்கு இவர் பெரியாரை கையில் தொட்டார் என்றே புரியவில்லை பாலா இதை கவனிக்கவும் இனி இது போன்ற தவறை பாலா செய்யக்கூடாது.

அன்புடன்
விக்ராந்த்.. (உதவி ஆசிரியர் சினிபஜார் )