
சாவீ – திரை விமர்சனம்
நடிகர்கள்:உதயா தீப,ஆதேஷ்,யாசர், பாலா,மற்றும் பலர்.
இயக்குனர், எழுத்தாளர்: ஆண்டன் அஜித்
இசையமைப்பாளர்: சரண் ராகவன், வி.ஜே.ரகுராம்
ஒளிப்பதிவாளர்: பூபதி வெங்கடாச்சலம்
எடிட்டர்: சுந்தர் எஸ், ராகேஷ் லெனின்
தயாரிப்பு நிறுவனம்;: ஆண்டனி அஜித் புரொடக்ஷன்ஸ்
மக்கள் தொடர்பு: ஆர். மணிமதன்.
கதை கரு
‘சாவு வீட்டில் பிணம் காணாமல் போனால் எப்படி இருக்கும்?’ என்கிற கற்பனையில் இது உருவாகி இருக்கிறது.காமெடியாக சொல்ல முயன்றிருக்கிறார்.
படத்தை பார்ப்போம்
உதய தீப், பல வருடங்களுக்கு முன் இறந்த தனது அப்பாவின் மரணத்திற்கு இரு மாமன்கள் தான் காரணம் என்கிற ஒரு சந்தேகம் இருக்க அவர்கள் இருவர் மீது கடும் கோபத்தில் இருக்கிறான். அதே நேரம், ஒரு மாமனின் மகளான கவிதாவை காதலிக்கிறார் ஹீரோ உதயா தீப். கவிதாவும் உதயாவை காதலிக்கிறார். இவர்களின் காதல் விவகாரம் தெரிந்த கவிதாவின் தந்தையான ப்ரேம் கே சேஷாத்ரி, கவிதாவின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார..இந்த சூழலில், ப்ரேம் கே சேஷாத்ரி ஒரு விபத்தில் சிக்கி இறந்துவிடுகிறார்.
உடலை அவரது வீட்டிற்கு இறுதி அஞ்சலிக்காக வைத்திருக்கின்றனர். இரவு நேரத்தில் வீட்டில் இருந்த பிணம் காணவில்லை பிணத்தைக் கண்டுபிடிக்க இன்ஸ்பெக்டரான ஆதேஷ் பாலா வருகிறார்.
இறுதியில் பிணத்தை யார் எடுத்துச் சென்றார்.? எதற்காக கடத்தப்பட்டது.? உதயாவின் காதல் என்ன ஆனது உள்ளிட்ட கேள்விகளுக்கு படத்தின் மீதிகதை ..
கதையின் நாயகனாக ஜூடு மாரிமுத்து பாத்திரத்தில் வரும் உதயா தனக்கான கதாபாத்திரத்தை புரிந்து கொண்டு ஜாலியாக நடித்துள்ளார். .சக்கரவர்த்தி பாத்திரத்தில் இன்ஸ்பெக்டராக வரும் ஆதேஷ் பாலா நேர்த்தியான நடிப்பை வழங்கியுள்ளார் .ஸ்டெல்லாவாக வரும் கவிதா சுரேஷ் எளிமையான தோற்றத்தில் தனக்கு கொடுத்த வேலையைச் சரியாக செய்து முடித்துள்ளார். மற்றும் இப்படத்தில் நடித்த அனைவரும் சிறப்பாக செய்துள்ளனர்
இசை:சரண் ராகவன்,ராகுரம், ஒளிப்பதிவு: பூபதி வெங்கடாசலம்,எடிட்டர்: சுந்தர் எஸ், ராகேஷ் லெனின் தனக்கு தெரிந்த வேலையை சிறப்பாக செய்துள்ளனர்
இயக்கம்: ஆண்டன் அஜித். குறைந்த பட்ஜெட் தயாரிப்பில் காதல், , போதைப் பழக்கம் , சஸ்பென்ஸ் திரில்லர் இன்றைய இளைஞர் எப்படி சீரழிக்கிறார்கள் என்பதை சமூக அக்கறையாக சொல்லியிருக்கும் இயக்குநர் ஆண்டன் அஜித். பாராட்டு மொத்தத்தில் சாவீ நகைச்சுவையாக ஜாலியாகவும் நம்மை சிரிக்க வைக்க முயற்ச்சி …










