Sunday, May 31

“பீனிக்ஸ்” திரை விமர்சனம்.

ராஜலட்சுமி ‘அனல்’ அரசு தயாரித்திருக்கும் பீனிக்ஸ் படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் ‘அனல்’அரசு

இதில் சூர்யா சேதுபதி, வரலக்ஷ்மி சரத்குமார், சம்பத் ராஜ், தேவதர்ஷினி, முத்துக்குமார், ஒளிப்பதிவாளர் வேல்ராஜ், திலீபன், அஜய் கோஷ், ஹரிஷ் உத்தமன், மூனார் ரமேஷ், ‘காக்கா முட்டை’ விக்னேஷ், அபி நக்ஷத்ரா, வர்ஷா விஸ்வநாத், நவீன், ரோகித், மது வசந்த், கிஷோர், ரிஹான், பிரசாந்த், ரிஷி, நந்தா சரவணன், ஆடுகளம் முருகதாஸ், ஆடுகளம் நரேன், ஸ்ரீPஜித் ரவி ஆகியோர் நடித்துள்ளனர்.

படக்குழுவினர்கள் : ஒளிப்பதிவு இயக்குனர்: வேல்ராஜ் ஆர்.இணை இயக்குனர்: என். ஜான் ஆல்பர்ட், இசை: சாம் சிஎஸ், எடிட்டர்: பிரவீன் கே.எல், கலை இயக்குனர்: மதன் கே, பாடலாசிரியர்: விவேகா, மதன் கார்க்கி, லோகன், வித்யா,நடனம்: பாபா பாஸ்கர், ஜானி, அதிரடி ஆக்ஷன்: ‘அனல்’ அரசு,தயாரிப்பு நிர்வாகி: சக்தி ஜெகதீசன்,நிர்வாகத் தயாரிப்பாளர்: எம்.எஸ்.முருகராஜ், மக்கள் தொடர்பு: ரியாஸ் கே அகமது, பராஸ் ரியாஸ்​

விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதி கதாநாயகனாக அறிமுகமாகியுள்ள படம்.

ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.வான சம்பத்தை  நடுரோட்டில் வெட்டி சாய்க்கும் சிறுவன் சூர்யா, சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் (சிறுவர் சீர்திருத்த சிறை) அடைக்கப்படுகிறார் . சூர்யாவை கொலை செய்ய சம்பத்தின் மனைவியான வரலட்சுமி போலீஸ்  உதவியுடன் சிறைக்குள்ளே தீர்த்து கட்ட  உள்ளூர் ரவுடி கும்பல்  ,அனுப்புகிறார். போனவர்கள் அடிவாங் திரும்பி வருகிறார்கள் மீண்டும் இந்தியாவில் இருக்கும் பிரபல ரவுடி கும்பலை  சிறைக்குள் அனுப்புகிறார் வந்த ஆட்களை .அத்தனை பேரையும் அடித்து ‘துவம்சம்’ செய்து ஓட விடுகிறார் சிறையில்   சூர்யா கொலை செய்ய திட்டம் போடும்  வரலஷ்மிக்கும் சூர்யாவுக்கும்  என்ன பிரச்சனை    அடுத்து நடந்தது என்ன? எம்.எல்.ஏ.வை கொலை செய்யும் அளவுக்கு சூர்யா சென்றது ஏன்? என்ற கேள்விகளுக்கு விடை சொல்கிறது மீதி கதை.

அறிமுக படத்திலேயே ‘ஆக்ஷன்’ நாயகனாக உருவெடுத்துள்ளார். படம் முழுக்க ரவுடிகளை அவர் அடித்து தும்சம் செய்வது  காட்சிகளை ரசிக்க முடிந்தாலும், நம்ப முடியவில்லை.

வில்லி வேடத்தில் வரலட்சுமி சரத்குமார் மீண்டும் முத்திரை படைத்துள்ளார். பிற்பாதியில் வரும் விக்னேஷ் – அபி நக்ஷத்ரா ஜோடியின் காதலும், நடிப்பும் கவனிக்க வைக்கிறது.    , தேவதர்ஷிணி. ஹீரோ சூர்யா விஜய்சேதுபதிக்கு அம்மா நடிப்பை அள்ளி வழங்கியிருக்கிறார் அஜய் கோஷ், திலீபன், சம்பத் ராஜ், ‘ஆடுகளம்’ முருகதாஸ், ஸ்ரீஜித் ரவி உள்ளிட்ட அனைவருமே நிறைவான நடிப்பை கொடுத்துள்ளனர்.

ஆர்.வேல்ராஜின் ஒளிப்பதிவு சிறப்பு  ,சாம் சி.எஸ். இசை படத்துடன் ஒன்ற வைக்கிறது. பாடல்களில் இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாம்.எடிட்டர்: பிரவீன் கே.எல், பணிகள் சிறப்பு .

வழக்கம்போல் பழி வாங்கும் கதை இருந்தாலும்  திரைக்கதை யில் கவனம் செலுத்தியிருக்க வேண்டும்  ஹீரோவுக்கு 17-வயது பையன் அவன் அளவுக்கு தான் கதையை சொல்லனும்   சண்டை காட்சி  வைக்கனும் விஜய்சேதுபதி நடிக்க வேண்டிய கதையை அவருடை மகனுக்கு எப்படி பொருந்தும் அப்பா சட்டையை மகன் போட முடியுமா? அப்படி போட்டா என்ன ஆகும்  அப்படிதான் இந்த கதையும்

பரபரப்புடன் செல்லும் ‘ஆக்ஷன்’ காட்சிகள் ஸ்டண்ட்’ மாஸ்டர் என்பதால், ‘ஆக்ஷன்’ காட்சிகளுக்கு மட்டுமே தனி கவனம்  கொடுத்து, படத்தை இயக்கி , ‘அனல்’ அரசு. இப்படத்தை சிறு வயது 17, / 18 வயது பிள்ளைகள் பார்த்த அவர்களுடை மனநிலை எப்படியிருக்கும்  பெண் பிள்ளை வயது முதியவர் பார்க்க முடியுமா?

பீனிக்ஸ் – அடிதடி /வெட்டு /குத்து ‘சண்டை பிரியர்களுக்கு விருந்து  .