
90 பிக்சர்ஸ் புரொடக்ஷன் சார்பில் எஸ்.ஜி.சரவணன் தயாரித்திருக்கும் அருள்வான் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் கணேஷ் விநாயகன்.
நடிகர்கள் :- அருள்நிதி – முத்துவேல், ஆரவ் – காந்தன், ரம்யா பாண்டியன் – அமரவள்ளி, பேபி கிருத்திகா – குறிஞ்சி, ஜான் விஜய் – பாண்டியன், காளி வெங்கட் – தன்ராஜ், விடிவி கணேஷ் – சந்திரன், பருத்திவீரன் சரவணன் – காவல்துறை உயர் அதிகாரி ஆகியோர் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
தொழில்நுட்பக் கலைஞர்கள்:-
2021ல் வெளியான ‘தேன்’ படத்தைத் தொடர்ந்து இன்னொரு அருமையான படத்தை இயக்கியுள்ளார் ;கணேஷ் விநாயகன், ஒளிப்பதிவாளர்: எம். சுகுமார், இசையமைப்பாளர்: ஜி.வி.பிரகாஷ் குமார், எடிட்டர்: லாரன்ஸ் கிஷோர், மக்கள் தொடர்பு: நிகில் முருகன்.
கதைகரு
மலைவாழ் கிராமத்தில் கல்வி அறிவு இல்லாத மக்கள் கூட்டத்தில் ஒரு சிறுமி கல்விக்காக போராடும் கதை..
படத்தை பார்ப்போம்
தேனி மாவட்டத்தில் ஒரு மலைவாழ் கிராமத்தில் எழுத்தறிவு இல்லாத மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். இதில் ஆரவ் – ரம்யா பாண்டியன் தம்பதியின் மகளான கிருத்திகா, மலைகிராம அருகில் இருக்கும் ஊரிலிருந்து சில பிள்ளைகள் பள்ளிக்கு அந்தவழியாக செல்கிறார்கள் இந்த பிள்ளைகளை பற்றி கிருத்திகா தன் அப்பாவிடம் இந்த அண்ணன்கள் எங்கே போகிறார் அவர்கள் படிக்க போகிறார்கள் என்று கூறுகிறார் படிப்புயில்லாமல் நம் முன்னோர்கள்கள் ஏமாற்றபட்டார்கள், வஞ்சிக்கபட்டார்கள் என்பதை நினைத்து எனக்கு படிக்க வேண்டும் என்னை படிக்க வையுங்கள் அப்பா. அம்மாவிடம் கேட்க அவர்கள் மறுப்பு சொல்கிறார் இருந்தாலும் மகளின் பிடிவாதத்தால் அப்பா ( ஆரவ்) சரி உன்னை படிக்க வைக்கிறேன் என்று உறுதி கூறுகிறார் இதற்கிடையில் கிருத்திகா பருவ வயதடைகிறார் அவளுக்கு திருமணம் நடத்த முடிவு செய்கிறார்கள். ஆனால் தான் படிக்க வேண்டும், தனது கிராமத்துக்கு பள்ளிக்கூடம் வேண்டும் என்ற ஆசையில் கிராமத்தை விட்டு வெளியேறி, மாவட்ட கலெக்டரான அருள்நிதியை பார்த்து உதவி கேட்க செல்கிறாள்.காட்டில் வாழும் மிருகங்களுக்கே பயப்படாத சிறுமி கிருத்திகாவுக்கு, நகரத்தில் உலாவும் மனித மிருகங்களாள், ஏற்படும் பாலியல் தொந்தரவு, விபத்தில் சிக்கி மருத்துவ மனையில் உயிருக்கு போராடுகிறாள் அங்கு மருத்துவர் கருமுட்டை திருட்டு இப்படி நகரத்தில் கொடிய மிருகங்கள் வாழ்கின்றனர் இந்நிலையில் கிருத்திகா உயிர் பிழைத்தாரா ? கலெக்டர் அருள்நிதியை சந்தித்தாரா? இல்லையா? கிருத்திகாவின் ஆசையை கலெக்டர்அருள்நிதி நிறைவேற்றினாரா, இல்லையா? மலைப்பகுதிக்கு ஆசிரியர்கள் பாடம் நடத்த வந்தார்களா ? என்பதே பலதிருபக்கங்களுடன் படத்தின் மீதி கதை.
மலைவாழ்மக்களின் நலன் அக்கறை கொண்ட நேர்மையான கலெக்டராக அருள்நிதிக்கு பொருத்தமான கதாபாத்திரத்திம் நடித்து சிறப்பு சேர்ந்தார் படத்திற்கு பெரியபலம். ஆரவ் – ரம்யா பாண்டியன் – , பேபி கிருத்திகாவின் அப்பா ,அம்மாவும் மற்றும் கலெக்டரின் உதவியாளர் விடிவி கணேஷ் ,வில்லதன வனத்துறை போலீஸ் அதிகாரி ஜான் விஜய் –மலைவாழ் மக்கள் நலனுக்காக போராடும் நேர்மையான பத்திரிகையாளராக காளி வெங்கட் – தன்ராஜ், வனகாவல்துறை உயர் அதிகாரியாக பருத்திவீரன் சரவணன் – ஆகியோர் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளனர்.
இயற்கை மலைஅழகை அப்படி அள்ளி கொடுத்துள்ளார் ஒளிப்பதிவாளர்: எம். சுகுமார், பாடல், பின்னணி இசையமைப்பாளர்: ஜி.வி.பிரகாஷ் குமார் படத்திற்கு பெரியபலம் ,எடிட்டர்: லாரன்ஸ் கிஷோர் படத்திற்கு தேவையான காட்சிகள் மட்டும் சேர்ந்து படத்தின் விறுவிறுப்பாக கூட்டியுள்ளது
2021ல் வெளியான ‘தேன்’ படம் அனைவரின் கவனத்தை பெற்றார் அதைதொடர்ந்து மலைவாழ் மக்கள் கல்விக்காக இப்போது “அருள்வான்” பழங்குடியின மக்களின் கல்வி மற்றும் அடிப்படை வசதிகளுக்கான வழி செய்யு கலெக்டர் மற்றும் அதிகாரிகள் மலையேறும் காட்சியும், “எனக்கு மட்டும் கல்வி கிடைத்தால் போதாது. என் ஊருக்கே வேண்டும்” என்ற சிறுமியின் சொல்லும் வசனமும் பார்வையாளர்களை கவனிக்க வைக்கிறது.! கத்தி ,இரத்தம், கொலை, ஆபாசம் இல்லை இந்த படம் இயக்குனர் கணேஷ் விநாயகன். பல விருதுகளைப் பெற்று தரலாம் பாராடடு வாழ்த்துக்கள்.
ஆட்சி மாற்றம் ஏற்படுகிறது ஆனால் மலைவாழ் மக்களின் வலிகள் மாற்றம் இல்லை இந்த படம் போசுகிறது!
மொத்தத்தில் அனைவரும் பார்க்கும் படம்
ரேட்டிங் ४:0/
