Wednesday, September 9

TN 2026 திரை விமர்சனம். அரசியல் காமெடி கலாட்டா! ரேட்டிங்; 4.0

நடிகர்கள்:-​நட்டி நட்ராஜ், தம்பி ராமையா, எம்.எஸ்.பாஸ்கர், இளவரசு, ஸ்ரீதா ராவ், சாந்தினி தமிழரசன், யாஷிகா ஆனந்த், ரெடின் கிங்ஸ்லி மற்றும் பலர்.
படக்குழுவினர்:-
தயாரிப்பு பேனர்: கண்ணன் ரவி குரூப்ஸ்
தயாரிப்பாளர்: கண்ணன் ரவி
இணை தயாரிப்பாளர்கள்: தீபக் ரவி

தொழில்நுட்ப கலைஞர்கள் :
இயக்குனர்: உமாபதி எஸ். ராமையா
இசையமைப்பாளர்: தர்புகா சிவா
ஒளிப்பதிவு இயக்குனர்: பி.ஜி.முத்தையா
எடிட்டர்: ஆரல் ஆர் தங்கம்
கலை இயக்குனர்: என்.கே. ராகுல்
நடன இயக்குனர்கள்: சாண்டி, பிரவின் ஜி ,ஸ்டண்ட் இயக்குனர்: மகேஷ் மேத்யூ,மக்கள் தொடர்பு: சதீஷ் ஏஐஎம்

படத்தை பார்ப்போம:

பொள்ளாச்சியில் செல்வாக்கு மிக்க ஜமீன் குடும்பத்தைச் சேர்ந்தவர் மன்றாடியார் பரம்பரை சார்ந்த 1000 ஆயிரம் ஏக்கர் நிலம் சொந்தகாரர்  தம்பிராமையா இவரிடம் வேலை பார்க்கும் வேலையாட்கள் புதிதாக ஒரு ஹீரோ நடிகர் குல்கந்த் குமார் வந்து இருக்கிறார். அவர்தான் அடுத்த எம்ஜிஆர் என  புகழ்ந்து பேசி கொள்கிறார்கள் இதை கேட்டதும் தம்பிராமையா அவரை சந்திக்க ஆசை  அதே சமயம் குல்கந்த் குமார் என்ற நட்டி நட்ராஜ் வெளிமாநிலத்திலிருந்து தமிழ் தெரியாத நடிகர் தமிழ்நாட்டிற்க்கு படபிடிப்பிற்க்காக வருகிறார் அவரை படபிடிப்பு தளத்தில்  தம்பிராமையா சந்தித்து பேசுகிறார்.ஆரம்பத்தில் எந்த ஆதரவும் இல்லாமல் தடுமாறும் நட்டி நட்ராஜ்  அவருக்கு,  தம்பி ராமையா உதவியாக நிற்கிறார். மேலும், வளர்ந்து வரும் நடிகரான அவருக்கு பணத்தை செலவு செய்து, சொந்த செலவில் திரைப்படம் தயாரித்து நட்டி நட்ராஜ்மிக ஒரு பெரிய மாஸ் ஹீரோவாக ஆக்குகிறார். இவருக்காக பல ரசிகர் மன்றங்கள் உருவாக்கிறார் தங்க நட்சத்திரம்’ என்று ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார். அடுத்தது ரசிகர் மன்றங்கள் அரசியல் கட்சியாக  உருவாகிறது நட்டிக்கு மக்கள் செல்வாக்கு கூடுகிறது இதை தெரிந்து கொண்ட ஆளும்கட்சி எதிர்கட்சியினர் சூழ்ச்சியால் தம்பிராமையாவையும் நட்டி நடராஜ் ய யும் இருவரை  பிரிகிறார்கள் பிரிந்தவர்கள் ஒன்று சேர்ந்தார்களா ? முதலமைச்சர்  கனவு ? நட்டி நட்ராஜ் கட்சி நிலை என்ன ? தம்பிராமையா  அடுத்த திட்டம் என்ன? என்ற  பல திருபங்களுடன் படத்தின் மீதி கதை…

நடிகர்கள்

நட்டி நட்ராஜ் எடுத்து கொண்ட கதாபாத்திரம் எம் ஜி ஆர் / ரஜினி / கமல் / விஜய் இவர்களின் திரையுலம் மற்றும்  அரசியல் பயணத்தை சொல்லுகிறது ஒரு சாதாரண நடிகனா தொடங்கி, பெரிய நடிகராகவும், பின்னர் அரசியல் தலைவராகவும் மாறும் மாற்றங்களை நன்றாக வெளிப்படுத்தியுள்ளார். மிகசிறப்பான நடிப்பை  கொடுத்துள்ளீர் நீங்கள் நடிப்பில் சகலகல வல்லவன் சால பொருந்தும்

தம்பி ராமையா,மற்றெரு முதன்மையான கதாபாத்திரம் ஜமீன்தாராகவும் நட்டிநட்ராஜ் க்கு நல்ல திரையுலக வளர்ச்சி , அரசியல் நல்ல வழிகாட்டி மற்றும் சூழ்ச்சியாளராகவும், தனது கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளார். இவர்களுடன்  M.S பஸகர்,இளவரசு இவர்களின் மூவருக்கும்  ஒரு சண்டைகாட்சி அசத்துகிறார்கள்  தங்களுக்கான நடிப்பை சிறப்பாக  செய்துள்ளனர். மற்றும் இப்படத்தில் நடித்த துணை கதாபாத்திரங்கள் அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர்

ஒளிப்பதிவு

பி.ஜி.முத்தையாவின் ஒளிப்பதிவு  காலத்திற்கு ஏற்ப சிறப்பாக ஒளிப்பதிவு அமைந்து இருக்கிறது.

இசை

தர்புகா சிவாவின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசை காட்சிகளுடன் இணைந்தே பயனிக்கிறது  .

படத்தின் பலம் தம்பி ராமையாவின் கதையும் வசனமும்.சில இடங்களில் வரும் வசனங்கள் திரையரங்கில் கைட்டல் வாங்குகிறது கதையில் யாருடைய மனம் புண்படாமல் நேர்த்தியாக எழுதியிருப்பதுதான்

அரசியல் படம் இயக்குனர்: உமாபதி இயக்கிய விதமும் விறுவிறுப்பாக காட்சிகள் நகர்வதும் அடுத்தது என்ன என்ற எதிர்பார்ப்பை கூட்டுகிறது நகைச்சுவை  துணுக்குகளுக்கு பஞ்சமில்லை  ரசிக்கும்படியாகவும் இருக்கிறது இயக்குனர் முதல் படத்திலே முத்திரை பதித்துள்ளார் பாராட்டு வாழ்த்துக்கள்

இந்த படம் நடிகர்கள் அரசியல் வருகை மறைமுக மேலோட்டமாக தொட்டும் தொடமலும் யாரையும் அதிகம்  தாக்காமல் குறிபிடாமல் இன்றைய அரசியல் களத்தை  அப்படியே அப்பட்டமாக  துணிச்சலாக தைரியமாக கொடுத்ததுக்கு பாராட்டலாம் படம் ஆரம்பம் முதல் கிளைமாக்ஸ்  காட்சிகள் வரை எல்லோரும்  ரசிக்கும்படியாகவும் கோடை வெயில் TN 2026 நம்மை குளிர வைத்து சிரித்து மகிழ வைக்கிறது அரசியல் விமர்சர்களுக்கு செம விருந்து

ரேட்டிங் :4.0