
விஜய சதீஷ் தயாரித்திருக்கும் மனிதன் தெய்வமாகலாம் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் டென்னிஸ் மஞ்சுநாத்.
இதில் செல்வராகவன், குஷி ரவி, ஆர்.எஸ்.சதீஷ், கௌசல்யா, மைம் கோபி, ஒய்.ஜீ.மகேந்திரா, குழந்தை நட்சத்திரம் லிர்த்திகா, மற்றும் துணை நடிகர்கள் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள் ::- ஒளிப்பதிவு இயக்குனர் – ரவி வர்மா, இசை – ஏ.கே.பிரியன், எடிட்டர் – தீபக்.எஸ், மற்றும் பலர் இவர்களுடன், மக்கள் தொடர்பு – ரேகா
படத்தை பார்ப்போம் :
சாலை வசதிகள் குடிநீர் வசதி இல்லாத ஒரு சிறிய கிராமத்தில் அமைதியாக வாழ்ந்து வருகிறார் செல்வராகவன் சாலை ஓரத்தில் நுங்கு வியாபாரம் செய்து வாழ்க்கையை நடத்துகிறார் பக்கத்து கிராமத்தில் படித்த பெண் ஒரளவு வசதியான குடும்பம் குஷி ரவி விருப்பப்பட்டு செல்ராகவனை திருமணம் செய்து கொள்கிறார். கொஞ்ச நாள் கழித்து மனைவி விருப்பம் கடன் வாங்கி சாலையோரம் ஒரு சிறிய தாபா உணவகத்தை நடத்த ஆரம்பிக்கிறார். இவர்களுடன் கௌசல்யா மற்றும் அவருடைய கணவரும் செல்வராகவனுக்கு உதவியாக இருக்கிறார்கள் அதே தொகுதி M.L.A வாக இருக்கும் ஒய்.ஜீ.மகேந்திரனின் வலதுகரமாக இருக்கும் மைம்கோபி ஒரு நாள் சாலையோரம் உணவகம் நடத்தும் செல்வராகவனின் கடைக்கு தகராறு செய்து உணவகத்தை அடித்து நொறுக்குகிறர்கள் இவரிடம் வட்டிக்கு பணம் வாங்கிய பெண்கள் பணம் திருப்பி கொடுக்க முடியாத பெண்களை கற்பை சூரையாடுகிறார் இந்த கொடூர செயலை செல்போன் வீடியோவில் படம் எடுத்து தன் காமபசிக்கு தேவைக்கு இந்த வீடியோவில் இருக்கும் அப்பாவி பெண்களை மிரட்டி தன் காமபசியை தீர்த்துகிட்டு அந்த பெண்களை துன்புறுத்தி கொடுமைபடுத்தி அதில் சந்தோஷம் காண்பது இவனுடை வழக்கம் மீண்டும் சாலையோர தாபா உணவத்தை திறந்து நடத்துகிறார் செல்வராகவனுக்கு திடீர் போன் வருகிறது வீட்டிற்கு பேகிறார் மனைவி இறந்து கிடக்கிறார் உடல் ஆரோக்கியமான மனைவி எப்படி இறந்தார் ? யார் கொன்றது என்ன நடந்தது உன்மையை கண்டுபிடிக்கும் முயற்ச்சி சில அதிர்ச்சிகரமான உன்மைகள் வருகிறது பல திருப்பங்களுடன் படத்தின் மீதி கதை..
இயக்குனரும் நடிகருமான செல்வராகவன் கதாநாயகனாக நடித்திருக்கும் படம். அனுபவ வாய்ந்த நடிப்பை அழகா வெளிபடுத்தியுள்ளார் மனைவி மற்றும் பக்கத்து வீட்டு குழந்தை நட்சத்திரம் அமுதா, மற்றும் நண்பர்கள் மீது அதிக பாசத்தை காட்டியதையும் இதற்க்கு காரணமாணவர்களை பழிவாங்க சீறி பாயும் காட்சியும் அசுரனையே மிஞ்சிட்டார் நடிப்பு சிறப்பு
நாயகியாக நடித்த குஷி ரவி, நல்ல அழகு குறைந்த காட்சிகளிலேயே வந்தாலும் தப்பை தட்டி கேட்கும் காட்சிகளில் கணவன் மீது பாசம் ~ எல்லாம் இயல்பான நடிப்பை கொடுத்து அனைவரின்.கவனத்தையும் பெறுகிறார் மற்றும் துணை நடிகர்கள் கெளசல்யா, ஆர்.எஸ்.சதீஷ் ஆகியோர் தங்களுக்கான கதாபாத்திரங்களை சரியாக செய்து முடித்துள்ளனர்.
மைம் கோபி, வில்லனாக தன் பங்களிப்பை வெறுப்பு வரும்படி சிறப்பாக நடித்துள்ளார். மற்ற இப்படத்தில் நடித்த அனைவரும் தங்களின் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளனர் .
ஒளிப்பதிவு
ரவி வர்மாவின் ஒளிப்பதிவு கிராமத்தின் அழகையும் வாழ்க்கையின் உண்மை நிலையை நம் கண்முன் நிறுத்துகிறது.
இசை
ஏ.கே.பிரியனின் இசை மற்றும் பின்னணி இசை காட்சிகளின் இணைந்து பயனிக்கிறது
இயக்கம்
இயக்குனர் டென்னிஸ் மஞ்சுநாத், அடிப்படை வசதிகள் இல்லாமல் வாழும் கிராம மக்களின் பிரச்சனைகள் மற்றும் கந்துவட்டி கொடுமைகளை உணர்ச்சிகரமாக பதிவு செய்துள்ளார். பாராட்டு
ஆரம்பத்தில் காட்சிகள் மெதுவாக நகர்ந்தாலும், கதாபாத்திரங்களின் வலி மற்றும் உணர்வுகளை பார்வையாளர்களிடம் கொண்டு சேர்க்கிறது. இப்படத்தில் கிளைமாக்ஸ காட்சி யாரும் யூகிக்க முடியாது நமக்கு ஒரு பழமொழி ஞாபகத்திற்க்கு வருகிறது சாது மிரண்டால் காடு கொள்ளாது அமைதியான ஒருவன் எடுக்கும் முடிவு அராஜகாரர்களுக்கு சரியான பாடத்தை கொடுத்துள்ளார் இப்படம் அனைவரும் பார்க்கலாம்
ரேட்டிங் 3.0










