
இன்சோம்னியாக்ஸ் ட்ரீம் கிரியேஷன்ஸ் எல்எல்பி மற்றும் லாக்லைன் பிக்சர்ஸ் சார்பில் கண்ணதாசன், மோகனா மஞ்சுளா எஸ். தயாரித்திருக்கும் டியர் ரதி படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் பிரவீன் கே மணி.
இதில் சரவண விக்ரம் , ஹஸ்லி அமான் , ராஜேஷ் பாலச்சந்திரன் –, சாய் தினேஷ் ,, யுவராஜ் சுப்ரமணியன் , பசுபதி ராஜ் , சரவணன் பழனிச்சாமி , மற்றும் பலர் நடித்துள்ளனர்.
படக்குழுவினர்கள்:-இசை: எம்.எஸ். ஜோன்ஸ் ரூபர்ட், ஒளிப்பதிவு: லோகேஷ் இளங்கோவன், படத்தொகுப்பு: பிரேம் ,மக்கள் தொடர்பு: சக்தி சரவணன்
படத்தை பார்ப்போம்
ஐடியில் வேலை பார்க்கும் சரவண விக்ரம், எந்த பெண்களிடம் பேச மாட்டார் பயம் பதற்றம் கூச்ச சுபாவம் கொண்டவர் அவனது நண்பன் பயம் பதற்றத்தை போக்க பாலியல் விடுதிக்கு அழைத்துச் சென்று விலைமாது ஹஸ்லி அமான் சந்திக்க வைக்கிறார். ஹஸ்லி அமான் மனம் விட்டு பேசும் சரவண விக்ரம் , ஒரு நாள் முழுவதும் ஹஸ்லி அமான் என்னுடன் பைக்கில் சுற்ற அழைக்க அதற்கு பணம் தருவதாக சொல்ல அதனால் சம்மதிக்கும் ஹஸ்லி அமான் மறுநாள் வரச்சொல்கிறாள். அன்று விலைமாது ஹஸ்லி அமான் அன்று இரவு ரெகுலர் கஸ்டமர் போலீஸ் எஸ் ஐ சரவணன் பழனிச்சாமி உடன் தங்க நேரிட, காலை எழுந்து சரவண விக்ரம் பார்க்க சென்று விடுகிறாள் ,போலீஸ் சரவணன் பழனிசாமி தன் துப்பாக்கி காணாமல் போக கண்டுபிடிக்க தீவிரமாக தேடுகிறார். விலைமாது ஹஸ்லி அமான் அவள் தான் என் துப்பாக்கி எடுத்து போய் இருப்பாள் சந்தேகம் வருகிறது அந்த சமயத்தில் ஹஸ்லி அமான் கணவன் ரவுடியும் அங்கு வருகிறான். போலீஸ் எஸ்.ஐ மற்றும் ரவுடி இருவரும் கூட்டணி வைத்துக் கொண்டு ஹஸ்லி அமான் யை தேடி அலைகின்றனர். முதலில் நண்பனை பிடித்து விசாரிக்க, எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை விடுதி ஊழியர் அடித்து உதை மிரட்டல் துப்பாக்கி சூடு மற்றெரு பக்கம் சரவண விக்ரம் _ ஹஸ்லி அமான் இருவரும் ஜாலியாக ஊர்சுற்றுதல் சரவண விக்ரம் சிறு வயது ஆசை கூற பள்ளி படிக்கும் போது கணக்கு டீச்சர் உடன் ஒரு ஆசை இருந்தது அப்படி என்ன ஆசை, நிறைவேறியதா , போலீஸ் துப்பாக்கி கிடைத்ததா.? துப்பாக்கி எடுத்து செல்ல காரணம் என்ன , ஹஸ்லி அமான் ரவுடி கணவன் துரத்த காரணம் இவர்களை கண்டுபிடித்தார்களா? அதன் பின் இறுதியில் நடந்த சம்பவம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.
கதாநாயநாயகனாக நடித்திருக்கும் சரவண விக்ரம், தொலைக்காட்சி தொடரில் நடித்திருந்தாலும் , படம் முழுவதும் பேசிக்கொண்டே இருப்பதை கொஞ்சம் குறைத்து இருக்கலாம் இவரது நடிப்பு படத்தில் குறைவு தான் பரவாயில்லை!
கதாநாயகி ஹஸ்லி அமான் , இவரை சுற்றி தான் கதை செல்கிறது படத்தில் நாயகனும் நாயகியும் இவங்கதான் நடிப்பு சூப்பர் அசத்தியுள்ளர் தமிழ் திரையுலகில் நல்ல எதிர்காலம் உள்ளது
வில்லன் ராஜேஷ் பாலச்சந்திரன் தனது குழுவினருடன் செய்யும் வில்லத்தனம் காமெடி கலாட்டா. ஆனால் சிரிப்புதான் வர மறுக்கிறது. ஓவர் ஆக்டிங் மற்றும் இவர்களுடன் நடித்த அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர் கொடுத்துள்ளனர்
:இசை: எம்.எஸ். ஜோன்ஸ் ரூபர்ட், ஒளிப்பதிவு: லோகேஷ் இளங்கோவன், எடிட்டர்: பிரேம் பி, அனைவரும் சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளனர்
இயக்குனர் பிரவீன் கே மணி. கதை களம் புரியாத புதிர்ராக இருக்கிறது திரைக்கதை கவனம் செலுத்திருக்கலாம் உங்கள் முயற்ச்சி பாராட்டு வாழ்த்துக்கள்.
“டியர் ரதி” வயது வந்தவர்கள் மட்டும் பார்க்கவும்










