Sunday, July 26

“நாளை நமதே ” திரை விமர்சனம்.

நடிப்பு : மதுமிதா, வேல்முருகன், ராஜலிங்கம், செந்தில், முருகேசன் மற்றும் பலர்

தொழில்நுட்ப கலைஞர் :

தயாரிப்பு : துர்கா கிரியேசன்
இயக்கம் : வெண்பா கதிரேசன்

ஒளிப்பதிவு : பிரவீன்
இசை : ஹரிகிருஷ்ணன்
வெளியான தேதி : ஆகஸ்ட் 8, 2025

கதைகரு  :ஒரு கிராமத்தில் நடக்கும் பஞ்சாயத்து தேர்தலைச் சுற்றி வருகிறது. அங்கு நடக்கும் கலவரத்தால் தனித்தொகுதி, பொதுத்தொகுதியாக மாறும் கதை. 

படத்தை பார்ப்போம்

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் உள்ளாட்சி தேர்தல் தலைவர் பதவிக்கு பட்டியல் சாதியினருக்கான ( தனி தொகுதியாக )அறிவிக்கின்றனர். அந்த தொகுதியில் காலம் காலமாக  மேல்சாதி மக்கள் மட்டுமே தலைவர் பதவியில் இருந்து வருகின்றனர். அப்படி இருக்கும் போது பட்டியல் சாதியினர  தாழ்த்தப்பட சமூகத்தில்  தலைவர் பதிவிக்கு வந்துவிட கூடாது என்று சூழ்ச்சியால் தேர்தல் தடை செய்ய கலவரம் ஏற்படுத்துகிறார்கள் எதிர்த்து நின்ற தாழ்த்தப்பட சமூகத்தினரை கொலை செய்து விடுகிறார்கள் இதனால் அந்த தொகுதி பொது தொகுதியாக  அறிவிக்கப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட  மேல்சாதியினர் பஞ்சாத்து தலைவராக மீண்டும் வருகிறார்..

15 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அந்த தொகுதி பட்டியல் சாதியினர் தனிதொகுதியாக மாறுகிறது . மேல்சாதி எதிர் கோஷ்டியினர்  சூழ்ச்சியால் ஊர் பஞ்சாயத்தில் தலைவர் பதவி ரூ7 லட்சம் ஏலம் எடுத்துள்ளார்  தாழ்த்தப்பட்ட மக்களின் நபரை தனக்கு கை கூலியாக  அடிமையாக  இருப்பவரை தேர்தல் நிற்க வைத்து ஜெயிக்க வச்சு பதவி சுகத்தை  அனுபவிக்க ஆசைப்படுகிறார்      இப்பொழுது தேர்தலில் போட்டியிட பட்டியல் சாதியினர் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சார்ந்த அதே சாதியை சேர்ந்த நாயகி மதுமிதா தேர்தலில் போட்டியிட முடிவு செய்கிறார். அவருக்கு வழக்கும் போல் பல விதமான  மிரட்டல்கள் , நாயகி மீது பொய் வழக்கு, திருமண தடை /தேர்தல் வேட்பு மனு தள்ளுபடி  பல தடைகள் …. ஊர் பஞ்சாயத்து தலைவர் வேட்பாளர்    மாமனார் , மருமகள்  போட்டியில் வெற்றி பெற்றவர் யார்?  பல கேள்விகள் மீதிக்கதை….

நாளை நமதே (2025)
இப்படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் மதுமிதா, வேல் முருகன் ,ராஜலிங்கம்,மற்றுமொரு வில்லனாக சிறப்பாக நடித்துள்ளார்.
6.2 இயக்குநர் ராமைய்யாவாக வில்லனாக ஊர் தலைவர் கேரக்டரில் சிறப்பாக நடித்துள்ளார். ராஜலிங்கம்,மற்றுமொரு வில்லனாக சிறப்பாக நடித்துள்ளார். இப்படத்தில் நடித்த ஊர் மக்கள் கதாபாத்திரம்  அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர்.
தொழில் நுட்பகலைஞர் :

பிரவீனின் ஒளிப்பதிவு கிராமத்து அழகை அப்படியே படம் பிடித்து கொடுத்துள்ளார் அருமை:இசையமைப்பாளர் வி.ஜி.ஹரிகிருஷ்ணனின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கதைக்களத்திற்கு ஒட்டத்திற்க்கு வலிமை சேர்த்துள்ளது.

இயக்குநர் வெண்பா கதிரேசன், தாழ்த்தப்பட்ட   மக்கள் அரசியலில் பேச வைக்கிறார்  தனக்கான உரிமைகளை யாருக்கும் விட்டுக் கொடுக்க கூடாது    தனிதொகுதி தேர்தல் கலவரம்  மற்றும் அரசியலில் ஏமாற்று  நாடகத்தை துணிச்சலாக  உண்மை சம்பவங்களின் பின்னணியோடு சொல்லியிருப்பதே ‘ நாளை நமதே..