
திருமலை புரொடக்ஷன் சார்பில் கே.கருப்பசாமி தயாரித்திருக்கும் “ஒண்டிமுணியும் நல்லபாடனும்” படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் சுகவனம்.
இதில் பரோட்டா” முருகேசன் நல்லபாடனாக, கார்த்திகேசனாக “பெரிய பண்ணாடி” , சித்திர நடராஜனாக தங்கம், முருகனாக “சின்ன பண்ணாடி”, சேனாபதியாக மாப்பிள்ளை, விஜயன் வேலனாக, விகடன் பங்காளியாக ஆகியோர் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப குழுவினர்கள்:-இணை தயாரிப்பாளர் – அமராவதி, ஒளிப்பதிவு – விமல், பின்னணி இசை – என்டிஆர் (நடராஜன் சங்கரன்) படத்தொகுப்பாளர் – சதீஷ் குரோசா , , பிஆர்ஓ – நிகில் முருகன்.
கதை கரு
ஒண்டிமுனியும் நல்லபாடனும்’ – ஒரு கிராமத்து உண்மையான உழைப்பாளி இரு பண்ணாடியார் (பண்ணையார்) இவர்களுக்கு நடந்தது என்ன?
படத்தை பார்ப்போம்:
கதையின் முக்கிய கதாபாத்திரம் பரோட்டா முருகேசன்.தன் மகன் ஊர் கிணற்றில் தவறி விழுந்து உயீர் பிழைக்க தனது மகனுக்காக காவல் தெய்வமான ஒண்டிமுனிக்கு கிடாய் பலி கொடுப்பதாக வேண்டுதல் ஒரு கிடா குட்டியை வாங்கி பாசத்தோடு பாதுகாப்பாக வளர்க்கிறார். காலம் சென்றதும் கிடாயும் வளர்ந்தது மகனும் வளர்ந்தார் பலியை நிறைவேற்ற நேரம் வந்தது அந்த ஊரில் இருக்கும் (பன்னாடிகளுக்கிடையிலான) தகராறு இரு பண்ணனயர்கள் அவர்களின் பிடிவாதம் காரணமாக கோவில் வருட வருடம் நடக்கும் திருவிழா வேறு எந்த நிகழ்ச்சியும் நடப்பதில்லை,, திடீர் கோயில் கிடாவை மகன் தன் காதலுக்காக மோட்டார் சைக்கிள் வாங்க வேண்டும் என்பதற்காக தந்தை வளர்த்த கிடாயை கசாப்பு கடைகாரரிடம் விற்று விடுகிறான் ஊரில் இருக்கும் இரு (பன்னாடிகளுகள்) பண்ணையார் களும் வெட்டிசாய்த்துக் கொள்கிறார்கள் இதில் பரோட்ட முருகேசனின் வேண்டுதல் நிறைவேறியதா? இல்லையா ? இரு பண்ணையார்களும் எப்படி இறந்தார்கள் இவர்களை யார் வெட்டி சாய்த்தது ? படத்தின் மீதி கதை..
நடிகர்கள்
பரோட்ட முருகேசன் இவர் பல படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்தாலும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஏழை விவசாயியாக தன்னுடைய எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இவரை சுற்றி தான் கதை நகர்கிறது படத்தை கடைசி வரை தன் தோழில் சுமந்து சென்றிருக்கிறார் என்று சொல்லலாம். ஏழைகளின் உழைப்பை சுரண்டி திண்ணும் பெரிய பண்ணாடியாக இந்த படத்தில் கார்த்திகேசனும், சிறிய பண்ணாடியாக இந்த படத்தில் முருகனும் நடித்திருக்கிறார்கள். இவர்கள் இருவருடைய நடிப்பு பாராட்டுக்குரிய வகையில் உள்ளது. பரோட்ட முருகேசனின் மருமகன் சிறப்பாகவும் மற்ற அனைத்து கதாபாத்திரங்களுமே தங்களுக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார்கள். இயக்குனர் கதாபாத்திரங்களை சிறப்பாக தேர்வு செய்து இருக்கிறார். பாடல்கள் பெரிதாக கவரவில்லை என்றாலும் பின்னணி இசை படத்திற்கு பக்கபலமாக இருந்திருக்கிறது. ஒளிப்பதிவு, கிராமத்தின் அழகை அழகாக அப்படியே கொடுத்துள்ளார் எடிட்டிங் படத்திற்க்கு தேவையான காட்சிகள் மட்டும் இணைத்துள்ளார் எல்லாமே நன்றாக இருக்கிறது. சாதாரண கதைக்களமாக இருந்தாலும் அடுத்தது என்ன என்று எதிர்பார்ப்புடன் இயக்குனர் அதை சுவாரசியமாக கொண்டு சென்றிருப்பது படத்திற்கு கூடுதல் பலம். கிளைமாக்ஸ் யாரும் யூகிக்க முடியாத காட்சி இவரை பாராட்டலாம் தமிழ் திரையுலகில் நல்ல எதிர்காலம் உள்ளது. இப்படம் அனைவரும் பார்க்கலாம்










