
தக்தம் மோஷன் பிக்சர்ஸ் சார்பில் அனிஷ் மசிலாமணி தயாரித்திருக்கும் ஃப்ரைடே படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் ஹரிவெங்கடேஷ்
இதில் மைம் கோபி, கேபிஒய் தீனா, அனிஷ் மாசிலாமணி, ராமச்சந்திர துரைராஜ், கலையரசன், சித்ராசேனன், சித்து குமரேசன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
படக்குழுவினர்கள்:-ஒளிப்பதிவு – ஜானி நாஷ், இசை – டுமே, படத்தொகுப்பு – பிரவீன் எம், கலை – கார்த்தி லோகா, சண்டைக் காட்சிகள் – அபினாஷ் ஆதி, மக்கள் தொடர்பு – திரு.
கதை கரு
துப்பாக்கி எடுத்தவர்க்கு துப்பாக்கியால் தான் முடிவு” என்பதை பல்வேறு கோணத்தில் Friday சொல்கிறது.
படத்தை பார்ப்போம்:
ஒரு வெள்ளிக்கிழமை இரவில் நடக்கும் கதை. அரசியல்வாதி மற்றும் அதிகார பலம் பெரிய ரவுடியான மைம்கோபி தன் அரசியல் எதிரியை போட்டுத்தள்ளி எம்.எல்.ஏ சீட் வாங்க நினைக்கிறார்.
அனிஷ் மாசிலாமணிக்கு தன் தம்பியை நன்றக படிக்க வைத்து நல்ல வேலை சேர்க்க வேண்டும் என்பது விருப்பம். அவரின் தம்பிக்கு அண்ணன் போல் தாதாவாக சம்பவக்காரன் ஆகவேண்டும் என்பது ஆசை . மைம்கோபி.. கொலை செய்படுகிறார் , அனிஷ் மாசிலாமணி தம்பியும் கொல்லப்படுகிறார் இந்த கொலைகள் எப்படி நடந்தது ? யார் தான் காரணம் ? பழிவாங்கலும் எவ்வாறு சிக்குகிறார்கள் என்பதைச் சுற்றி பயணிப்பதே படத்தின் மீதிகதை….
இதில் நடித்திருக்கும்
மைம்கோபி அனுபவ நடிப்பை சிறப்பாக கொடுத்துள்ளார் மற்றும் அணிஸ் மாசிலாமணி, ராமச்சந்திரா துரைராஜ், கலையரசன், சித்து குமரேசன், KPY தீனா என எல்லோரும் அவரவர் கதாபாத்திரம் உணர்ந்து சிறப்பாக நடித்துளளனர்.
ஜானி நாஷின்
ஜானி நாஷின் ஒளிப்பதிவு இரவு காட்சிகள் அருமை.
M பிரவினின் எடிட்டிங் படத்திற்க்கு தேவையான காட்சிகள் மட்டும் சேர்த்துள்ளார் இசை – டுமே, பரவாயில்லை..
இயக்குநர் ஹரி வெங்கடேஷ் எடுத்நுக்கொண்ட கதை இன்றைய இளைய தலைமுறைகள் கெத்து காட்ட நினைத்து தவறான வழியை தேர்ந்து எடுத்து கெத்தாக வலம் வந்தவர்கள் வெத்தாக காலியானவர்களின் கதை பட்ஜெட் படம் சுவாராஸ்யமாக எல்லேரும் ரசிக்கும்படி சொல்லியிருக்ஙிறார். உங்கள் முயற்சி பாராட்டுக்கள்.










