Sunday, July 26

“மனிதர்கள்” திரைவிமர்சனம்

நடிகர்கள் :கபில் வேலவன் – கார்லி
தக்ஷா – சதீஷ்
குணவந்தன் – மனோ
அர்ஜுன்தேவ் சரவணன் – தீபன்​
சாம்பசிவம் – சந்ரு

படக்குழுவினர்:
இயக்குனர் – ராம் இந்திரா
தயாரிப்பு – Studio Moving Turtle & Sri Krish Pictures
தயாரிப்பாளர்கள் – ராஜேந்திர பிரசாத், ஜே நவீன் குமார், சாம்பசிவம் எம் கே
இணை தயாரிப்பாளர்கள் : தரணிதரன் பரிமளா குலோத்துங்கன், யுவராஜ்
ஒளிப்பதிவு – அஜய் ஆபிரகாம் ஜார்ஜ்
படத்தொகுப்பு – டின்சா
இசை – அனிலேஷ் எல் மேத்யூ
கூடுதல் பின்னணி ஸ்கோர் – ஜான் ராபின்ஸ்
கலை இயக்கம் – மகேந்திரன் பாண்டியன்
பாடல் வரிகள் – கார்த்திக் நேத்தா
பாடியவர் – கபிலன்
ஒலிக்கலவை – ஆனந்த் ராமச்சந்திரன்
ஒப்பனை கலைஞர்- சபிரிகிரிசன்
டிஐ – வசந்த் எஸ் கார்த்திக்
ஸ்டண்ட் – வின் வீரா
மக்கள் தொடர்பு – சதீஷ், சிவா (AIM)

திண்டுக்கல் அருகே உள்ள ஒரு பகுதியில் ஆறு நண்பர்கள் கார்லி (கபில் வேலவன்), சதீஷ் (தக்ஷா), மனோ (குணவந்தன்), தீபன் (அர்ஜுன்தேவ் சரவணன்), சந்திரு (சம்பாசிவம்) மற்றும் பிரேம் ஆகியோர் ஆறு நண்பர்கள் ஒன்று சேர்ந்து மது குடித்தார்கள் . குடிபோதையில், அவர்களுக்கு கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு, திடீரென்று சண்டை ஏற்பட்டு ஒருவரையொருவர் தாக்கிக் கொள்கிறார்கள். இதில், மது பாட்டிலால்  எதிர்பாராத குத்தப்பட்டு  ஒரு நண்பர்- பிரேம் இறந்துவிடுகிறார். குடிபோதையில் இருந்த மற்ற ஐந்து நண்பர்களும் எழுந்து, தங்கள் நண்பர் பிரேம் இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைகிறார்கள். பயத்திலும் , தங்கள் நண்பரின் உடலை என்ன செய்வது என்று தெரியாமல் அவர்கள் போராடுகிறார்கள், நண்பர் கார்லியின் ஆலோசனையின்படி அவரது உடலை அப்புறப்படுத்த முடிவு செய்கிறார்கள். பிரேமின் உடலை தங்கள் காரின் டிக்கியில் மறைத்து வைத்துவிட்டு, நடு இரவில் பயந்தும் பதட்டத்துடனும் காரை ஓட்டிச் செல்கிறார்கள்.செல்லும் வழியில் நண்பர்களுக்குள் மீண்டும் மோதல் உருவாகிறது ,மற்றொரு பக்கம் செல்லும் வழியில் பெரிய வழிபறி கும்பலிடம் சிக்கி கொள்கிறார்கள்  பல்வேறு தடங்கள் பிரச்சனை எதிர்கொண்டு, இறுதியில் யாருக்கும் தெரியாமல் தங்கள் நண்பனின் உடலை வேறொரு ஊரின் ஒதுக்குபுறத்தில் ஒரு பகுதியில்  புதைக்க ஒரு குழி தோண்டுகிறார்கள். அந்த நேரத்தில் மழை பெய்து கொண்டிருக்கிறது. இறந்து விட்டதாக கருதப்பட்ட சாக்கு மூட்டையில் இருக்கும் தங்கள் நண்பன் உடல் அசைவதை பார்த்து அதிர்ச்சி பயம் ஒரு சில நண்பர்கள்   மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லலாம்   அவரைக் காப்பாற்ற முடியும் என்று கூறுகிறார்கள்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு அவன் இறந்தால், அது அனைவருக்கும் பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்றும், இரு நண்பர்கள் கூற அதனால் அவனைக் கொன்று விடலாம் என்றும்  கூறுகிறான். மீண்டும் அவர்களுக்குள் அடிதடி /சண்டை வெறித்தனமாக உச்சத்திற்க்கு போகிறது    . இறுதியில் அங்கே என்ன நடக்கிறது. பிணத்தை புதைத்தார்களா? இல்லையா? என்பதே  முடியும் படத்தின் மீதிக்கதை.

கார்லி , சதீஷ்  மனோ,  தீபன்  , சந்திரு  ஆகிய ஐந்து பேரும் தங்களுடைய கதாபாத்திரத்தில்,  பதற்றம், குழப்பம், பயம்,  என அனைத்தையும்  சிறந்த நடிப்பை வழங்கியுள்ளனர், மற்றும் பிரேம் ஒரு சடலம் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளார்.

படம் முழுக்க ஓர் இரவில் நடக்கும் கதைக்களத்தில், பெரும்பாலும் காருக்குள்ளேயே நகரும் கதைக்கு அட்டகாசமான காட்சி  ஒளிவீச்சு  மற்றும் ஒளி அமைப்பு, ஒளிப்பதிவாளர் அஜய் ஆபிரகாம் ஜார்ஜ் கவனம் பெறுகிறார்.

எடிட்டர் தின்சா படம் முழுவதும் பதற்றத்துடன் விறுவிறுப்பை கூட்டி கடைசி வரை அடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்புடன் படத்திற்க்கு தேவையான காட்சிகள் மட்டும் இணைத்து கொடுத்துள்ளார் அவருக்கு பாராட்டு .

இசை அனிலேஷ் மாத்யூ  மற்றும் பின்னணி இசையால் படத்திற்க்கு பக்க பலமாக இருந்தது .

ஒரு இரவு, ஆறு நண்பர்கள், மது போதை,   தேவையற்ற வார்த்தையால் ஏற்படும் எதிர்பாராத சம்பவம் மற்றும் அதனால் ஏற்படும் விளைவுகள்  வெளிப்படுத்தும் திரைக்கதையுடன், ஒரு இரவு பின்னணியில் புதுமுகங்களுடன் பார்வையாளர்களை கவனத்தை ஈர்த்து வைத்திருக்கும் ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லரை பெண் கதாபாத்திரம். இல்லாமல் ஆண்கள் மட்டும் நடித்துத்திருப்பது சிறப்பு இயக்குனர  :ராம் இந்திரா உங்கள் புதிய முயற்ச்சி பாராட்டு.