
ஒய் நாட் ஸ்டியோஸ் சார்பில் சக்ரவர்த்தி ராமச்சந்திரா இணைந்து எஸ்.சஷிகாந்த் தயாரித்து இயக்கியிருக்கும் படம் டெஸ்ட். நெட்பிளிக்ஸ் தளத்தில் நேரடியாக வெளியாகி இருக்கிறது.
இதில் மாதவன், நயன்தாரா மற்றும் சித்தார்த், மீரா ஜாஸ்மின், காளி வெங்கட், ஆடுகளம் முருகதாஸ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
படக்குழு:-எழுத்து : சுமன் குமார்;,ஓளிப்பதிவு : விராஜ் சின் கோஹில், எடிட்டர்: டி எஸ் சுரேஷ், இசை: சக்திஸ்ரீ கோபாலன், தயாரிப்பு வடிவமைப்பாளர்கள்: என் மதுசூதன், ஸ்வேதா சாபு சிரில், ஆடை வடிவமைப்பாளர்கள்: பூர்ணிமா ராமசாமி, அனு வர்தன், சண்டைக்காட்சி: தினேஷ் சுப்பராயன், விளையாட்டு இயக்குனர்: துருவ் பி பஞ்சுவானி, ஒப்பனை: ஒரு சபரி கிரிசன், ஸ்டில்ஸ் : எம் எஸ் ஆனந்தன், பி.ஆர்.ஓ.: நிகில் முருகன்.
ஏப்ரல் – 4 – தேதி நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி OTT தளத்தில் டெஸ்ட் திரைப்படம் நேரடியாக வெளியிடுகிறது.
கதை கரு
ஒரு கிரிக்கெட் மைதானம் மூன்று பேரின் வாழ்க்கையில் மையம் கொண்டு நடக்கும் சம்பவங்கள் தான் ‘டெஸ்ட்” படகதைகளம்
படத்தை பற்றி பேசுவோம் சென்னையை சேர்ந்த சித்தார்த் அனுபவம் வாய்ந்த இளம் சிறந்த கிரிக்கெட் வீரர். அவர் தொடர்ச்சியான ஆட்டங்களில் குறைந்த ரண்களே எடுத்திருப்பதால் அவருடைய ஆட்ட காலம் முடிந்து விட்டதாகவே இந்திய கிரிக்கெட் வாரியம் எண்ணுகிறது. ,சித்தார்த் சென்னையில் நடக்கும் இந்தியா -பாகிஸ்தான் மேட்சில் தன்னைநிரூபிக்க வேண்டிய நெருக்கடியில் இருக்கிறார். இதற்காக மனைவி, மகனைக் கூட கவனிக்காமல் கிரிக்கெட் தான் எல்லாமே என்று இருக்கிறார்.
தண்ணீரிலிருந்து எரிபொருள் தயாரிக்கும் என்ஜினை கண்டுபிடிக்கும் விஞ்ஞானி மாதவன் அரசு அங்கீகாரத்துக்காக போராடி வருபவர். தன் மனைவி நயன்தாரா நடத்தும் கேண்டீனை கூட அவருக்கு தெரியாமல் விற்று கடன் வாங்கி தன் ஆராய்ச்சிக்காக செலவு செய்து, கடனாளியாக கடனில் சிக்கித் தவிக்கிறார். இவர்களுக்கு குழந்தை இல்லை தாய்மைக்காக ஏங்கும் நயன்தாரா – வின் ஆசை கனவைக் கூட நிறைவேற்ற முடியாமல் தவிக்கிறார்.குழந்தையின்மையால் , தன் மனைவியுடன் தனியார் மருத்துவமனையில் கருத்தரித்தல் சிகிச்சை பெற்று வருகிறார்.அதற்கான IVF சிகிச்சைக்கு அதிக பணம் தேவைப்படுகிறது.
மாதவனின் ஆராய்ச்சி அரசு அங்கீகாரம் கிடைக்க அமைச்சரின் பி ஏ 50 லட்சம் லஞ்சமா கேட்கிறார் …இன்னொரு பக்கம் ஆராய்ச்சியாக மார்வாடியிடம் பணம் வாங்கியதற்கு அடியாட்கள் வைத்து அடிக்கடி மிரட்டல் கொடுக்கிறார்கள்
.மர்வாடி பைனான்சியர் வட்டிக்கு கொடுப்பதும் மற்றும் கிரிக்கெட் சூதாட்டத்தில் பெரும் புள்ளியாக இருக்கிறார் சென்னையில் நடக்கும் இந்தியா – பாகிஸ்தான் டெஸ்ட் ஆட்டத்தை முன்வைத்து நடைபெறும் பல ஆயிரம் கோடி ரூபாய் சூதாட்டத்தில் சித்தார்த்தை தன் பக்கம் இழுக்க முயற்சிக்கிறார். அது முடியவில்லை பல்வேறு நெருக்கடி கொடுக்கிறார்கள் . இதை தெரிந்து கொண்ட மாதவன் மார்வாடி கொடுக்க வேண்டிய கடனை அடைக்க திட்டம் போடுகிறார் மனைவி நயன்தாரா உதவியாக இருக்கிறார் எப்படி ? கடனை அடைப்பதற்காக மாதவன் எடுக்கும் முடிவு என்ன? என்பதே ‘டெஸ்ட்’ படத்தின் மீதிக்கதை.
வில்லன் ,ஹீரோவாக /விஞ்ஞானியாக மாதவன் ஏற்று நடிக்கும் கதாபாத்திரம் மிகவும் சிறப்பாக இருந்தது இவரின் மனைவி நயன்தாரா போட்டி போட்டு நடித்துள்ளார் . குழந்தைக்காக ஏங்கும் காட்சிகளில் எமோஷனல் ஆன நடிப்பை தந்துள்ளார். மற்றும்.சித்தார்த்தை பார்க்கும் போது ரியல் கிரிக்கெட் வீரராக அப்படியே . இருக்கிறார், அவரின் மனைவியாக மீரா ஜாஸ்மின் . சித்தார்த்தின் மனைவி ரோல் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு இடத்தில் சித்தார்த்தின் கன்னத்தில் பளார் பளார் விடும் காட்சிகளில் பிரம்மாதப்படுத்தியுள்ளார்.சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளனர்.காளி வெங்கட், மாதவனின் நண்பனாக சிறப்பாக நடித்துள்ளார் ஆடுகளம் முருகதாஸ் மற்றும் இப்படத்தில் நடித்த அனை வரும் சிறப்பாகச் செய்திருக்கிறார்கள்.
தொழில்நுட்ப கலைஞர்கள் :
விராஜ் சிங் கோஹிலின் ஒளிப்பதிவு, . சேப்பாக்கம் மைதானம் மற்றும் காட்சிகள் ரியல் . கிரிகெட் மேட்ச்சாக பிரம்மாண்டமாக தெரிகின்றன. சக்திஸ்ரீ கோபாலனின் இசையும் படத்தின் ஒட்டத்திற்க்கு சரியாக இருந்தது
டி.எஸ்.சுரேஷின் எடிட்டிங் படத்திற்க்கு.தேவையான காட்சி மட்டும் சேர்த்து விறுவிறுப்பை கூட்டி இருக்கிறது
அறிமுக இயக்குனராக களமிறங்கியிருக்கும் எஸ். சஷிகாந்த் இயக்கியிருக்கும் இந்த படத்தில் கிரிக்கெட்டை மையமாக வைத்து நட்பு, , சூதாட்டம், , கடன் அவர்களின் வாழ்க்கையும், சந்திக்கும் பிரச்சனைகளை அழகாகவும் ஆழமாக . பல.திருப்பங்களுடன் கதைக்களத்தை படைத்துள்ளார் .
கிரிக்கெட் வீரர் ஒருவர் பார்மில் இல்லாததையும், ஓய்வு பெற வேண்டிய நெருக்கடிக்கு ஆளாவதையும் மையமாகக் கொண்டு ‘டெஸ்ட்’ கதையைப் உருவாக்கியுள்ளார் இயக்குனர் எ ஸ்.சஷிகாந்த் முயற்ச்சிக்கு பாராட்டு ..
மொத்தத்தில் டெஸ்ட் ஒரு முறை பார்க்கலாம் .










