Sunday, May 31

“ஓ பட்டர்ஃப்ளை” திரை விமர்சனம்.

ஆன்ட்ஹில் சினிமா – பாலம்பூர் டாக்கீஸ் சார்பில் வெங்கி, ஆனந்த் எஸ் ஷா, விஜய் ரங்கநாதன், நிஷா பாட்டியல் தயாரித்திருக்கும் ஓ பட்டர்ஃப்ளை படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் விஜய் ரங்கநாதன்

இதில் நிவேதிதா சதிஷ், சிபி சந்திரன், அதுல், நாசர், லட்சுமி பிரியா சந்திரமௌலி, கீதா கைலாசம் ஆகியோர் நடித்துள்ளனர்.

தொழில்நுட்பக் கலைஞர்கள்: இசை: வைசாக் சோமநாத், ஒளிப்பதிவு: வேதராமன் சங்கரன், படத்தொகுப்பு: புவனேஷ் மணிவண்ணன்,, பாடல்கள்: கார்த்திக் நேத்தா, விஜய் ரங்கநாதன், விக்னேஷ் ஸ்ரீகாந்த்,  மக்கள் தொடர்பு: ரியாஸ் கே அஹ்மத், பாரஸ் ரியாஸ்

கதைகரு

கதாநாயகியின் முன்னால்  காதலை பற்றி தன் கணவனிடம் சொல்ல நினைப்பு தவிப்பு …கணவன் மரணம்.

படத்தை பார்ப்போம்:

திருமணமாகி சில மாதங்களிலேயே கணவரை இழந்த நிவேதிதா சதீஷ், அதிர்ச்சியாலும் மனதளவில் பாதிக்கப்படுகிறார். கணவரின் மரணத்திற்க்கு நான்தான் காரணம்  , நினைத்து தற்கொலை முயற்சி செய்கிறார்  அந்த நேரத்தில், வீட்டை விட்டு வெளியேறிய துறவறம் பூண்ட அவரது சகோதரி லட்சுமி பிரியா வீட்டு வருகிறார்  நிவேதிதா சதீஷ், ஆறுதல் கூறி உண்மையை புரிய வைக்க பல்வேறு முயற்சிக்கிறார். அப்போது தனது திருமண வாழ்க்கை மற்றும் முன்னாள் காதலன் எதிர்பாரத கணவர் சந்திப்பு வீட்டுக்கு அழைத்து வந்ததையும்  நிவேதிதா, தன் கணவரை தானே கொன்றதாக கூறுகிறர் கணவரை கொன்றதாக அவரேசொல்ல காரணம் என்ன? அவரது கணவரை கொன்றது  யார் ? முன்னால் காதலன் வீட்டுக்கு வந்தது ஏன் ? யார் காரணம்  ? சகோதரி லட்சுமி பிரியா துறவறம் பூண்ட காரணம் என்ன…? நடந்தது என்ன? பல திருப்பங்களுடன் படத்தின் மீதிக்கதை.

கதாநாயகியாக நடித்திருக்கும் நிவேதிதா சதிஷ், மொத்த கதையும் இவருடன் பயணிக்கிறது பலம் வாய்ந்த கதாபாத்திரத்தில் மிக சாதாரணமாகவே நடித்திருக்கிறார். ஒரு பக்கம் ஏமாற்றிய முன்னாள் காதலன், மறுபக்கம் கணவர் என்று ஒரே வீட்டுக்குள் பதற்றமான சூழ்நிலை மனநிலையில் இருக்க, எதையும் காட்டி கொள்ளாமல் மிக சாதாரணமாக சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளார  பார்வையாளரின்  கவனத்தை பெற்றுயிருக்கிறார் .

பணியிலிருந்து நீக்கப்பட்டதனால் ஏற்படும் மனச்சோர்வு, அனைத்தையும் உணர்ச்சிமிக்கதாகவே அணுகும் முறை எனப் பல  கதாபாத்திரத்திற்கு மிகை நடிப்பை மட்டுமே தந்திருக்கிறார் நிவேதிதாவின் கணவர் அட்டுல்.

உண்மைகளை வெளிப்படுத்த முடியாமல் மனப் போராட்டங்களில் சிக்கித் தவிக்கையில் இறுக்கமான முகம், உளவியல் ரீதியாகப் பாதிக்கப்படுவது, அனைத்திலிருந்து விடுதலைப் பெற்றுச் சிறகடிப்பது என அனைத்துக்கும் அழுத்தமான நடிப்பை வழங்கியிருக்கிறார் நிவேதிதா சதீஷ்.

வேலை பறிபோன நிலையில்  ஏற்படும் மனச்சோர்வு, அனைத்தையும் உணர்ச்சிமிக்கதாகவே  கதாபாத்திரத்திற்கு மிகை நடிப்பை மட்டுமே தந்திருக்கிறார் அட்டுல்.

ராயல் என்ஃபீல்டு, நீள முடி, ஆடைகள் எனக் கதாபாத்திரத்தின் ஸ்டைலாக வந்து சிபி சந்திரன், சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளார்.

கொடைகானலில் இருக்கும் நிவேதிதா சதீஷ்.வீட்டின் உன்மை நேர்மை நம்பிக்கையான வேலைகாரன் மற்றும்

பட்டாம்பூச்சிகளைக் குழந்தைகளை போல் பாதுகாத்து வளர்ந்ததும் வெளியில் பறக்கவிட்டு சந்தோஷ்ம் படும் நாசர், இவர்களுடன் சோடா புட்டி கிழவியாக பிழைப்புகாக ஜோசியம் பார்க்கும் கீதா கைலாசம், இளம் வயதிலேயே ஆன்மிகப் பாதையைத் தேர்ந்தெடுத்த சகோதரியாக லக்ஷ்மி ப்ரியா சந்திரமௌலி ஆகியோரை ஒரு சில காட்சிகள் தோன்றினால் பார்வையாளரின் மனதில் இடம் பிடிக்கிறார்.

தொழில்நுட்பக் கலைஞர்கள்: இசை: வைசாக் சோமநாத், ஒளிப்பதிவு: வேதராமன் சங்கரன், படத்தொகுப்பு: புவனேஷ் மணிவண்ணன்,, அவர்களின் பணிகளை சிறப்பாக செய்துள்ளனர்.

ஓ பட்டர்ஃப்ளை படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் விஜய் ரங்கநாதன் வழக்கமான  முக்கோண காதல் கதை .. பார்க்க பொறுமை தேவை ..