
கேஜேபி டாக்கீஸ் மற்றும் 7 வாரியார் பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் கேஜே.பாலமணிமார்பன், சுரேஷ் குமார், கோகுல் பினாய் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள படம் “ஹாட்ஸ்பாட்”.
சிக்ஸர் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் தினேஷ் கண்ணன் வெளியிட ஹாட் ஸ்பாட் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் விக்னேஷ் கார்த்திக்.
இதில் கலையராசன் – ஏழுமலை, சோஃபியா – லக்ஷ்மி, சாண்டி – சித்தார்த், அம்மு அபிராமி – தீப்தி , ஜனனி – அனிதா , சுபாஷ் – வெற்றி, கௌரி ஜி. கிஷன் – தன்யா, ஆதித்யா பாஸ்கர் – விஜய் ஆகியோர் அந்தந்த கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள் : ஒளிப்பதிவு – கோகுல் பினோய், இசை – சதீஷ் ரகுநாதன், வான், படத்தொகுப்பு – முத்தையன் ஏ, கலை – சிவா சங்கரன், நிர்வாக தயாரிப்பாளர் – ஆர். பாலாகுமார், தயாரிப்பு மேற்பார்வை – பிரியான், சேர்க்கை உரை, திரைக்கதை – கிஷோர் சங்கர், பப்லிசிட்டி டிசைனர் – ராஜின் கிருஷ்ணன், டைட்டில் டிசைன் – ட்வென்டி ஒன் ஜி, இயக்குநர் குழு – எம் பி எழுமலை, சபரி மணிகண்டன், மாதவன் ஜெயராஜ், எம்.பிரபாகரன் ஜாய், வெற்றி ஏஜேகே, பி.ஆர்.ஓ – வேலு
படத்தின் தலைப்பிற்கு ஏற்ப வித்தியசமான 4 கதைகளை கையில் எடுத்துள்ளார் படத்தின் இயக்குனர் விக்னேஷ் கார்திக்
படத்தை பார்ப்போம்:
ஆரம்பம் ஒரு சினிமா தயாரிப்பாளரிடம் நான்கு கதைகளை சொல்லும் இயக்குநராக விக்னேஷ் கார்த்திக்கே நடித்திருக்கிறார். இயக்குநர் கதை சொல்வது போல படம் தொடங்குகிறது
ஹாப்பி மேரிட் லைஃப்
கதை ஒன்று :திருமணத்திற்கு பிறகு நான் மனைவி வீட்டில் தான் வசிப்பேன். ஆண், பெண் இருவரும் சரிசமமானவர்கள் என தன் வருங்கால மனைவியிடம் கன்டிஷன் போடும் இளைஞனின் கதை ஒன்று.
கோல்டன் ரூல்ஸ்
கதை இரண்டு
ஒரு ஆணும் பெண்ணும் தீவிரமாகக் காதலிக்கிறார்கள் இரண்டு பேர் காதலிக்கிறார்கள். திருமணம் செய்ய முடிவு செய்தபோது அவர்கள் அண்ணன், தங்கை உறவு முறை என்பது தெரிய வருகிறது.
தக்காளி சட்னி :கதை மூன்று
வாலிபரின் தவறான செயலால் தான் வேலை பார்த்த கம்பெனியில் வேலை இழக்கிறார்.அதன் பிறகு வேலை தேடியும் வேலை கிடைக்கவில்லை பீச்சில் கடற்கரையில் அறிமுகம் இல்லாத ஆள் வாலிபரை சந்திக்கிறார் தனக்கு வேலையில்லாத விவரத்தை அவரிடம் கூற அவர் மூலம் வேலை கிடைக்கிறது ஆண் உடம்பை வைத்து பணம் சம்பாதிக்கிறது இந்த விஷயம் தன் காதலிக்கு தெரியவருகிறது!
ஃ பேம் குறும்படம் :கதை நான்கு
ஏழை ஆட்டோ டிரைவர் தன் மகளை பிரபல டிவி சேனல் நடத்தும் போட்டியில் கலந்து கொள்ளச் செய்கிறார். அங்கு மகள் மர்மமான முறையில் இறக்கிறார். மகளின் மரணத்திற்கு காரணம் அந்த டிவி சேனல் தான் குற்றம் சுமத்துகிறார் . டிவி சேனலில் நடந்தது என்ன ? இது தான் கடைசி கதை.










