
நடிப்பு: அபர்ணதி, லிங்கேஷ், வெற்றிச்செழியன், சுரேஷ் மேனன், அஸ்வின், தமிழரசி, அன்பு.
தொழில்நுட்ப கலைஞர்கள்:-
எழுத்து – இயக்கம்: வெற்றிச்செழியன்
தயாரிப்பு: வேலாயுதம் (V6 ஃபிலிம் பிரைவேட் லிமிடெட்)
இசை: தினேஷ் ஆண்டனி
ஒளிப்பதிவு: அர்ஜுன் ரவி, ஞானசேகர் ஆர்.எஸ்.
எடிட்டிங்: ரஞ்சித் சி.கே.
கலை இயக்கம்: ராகவன் சஞ்சீவி)
சண்டைப்பயிற்சி: ராக் பிரபு
மக்கள் தொடர்பு: டீம் ஏய்ம் ,சதீஷ்
படத்தை பார்ப்போம்;
ஆதிக்க சாதியினரால் தன் கணவரை இழந்த துப்புரவு தொழிலாளியான அபர்ணதி, தன் ஒரே மகனை நன்றாக படிக்க வைத்து வக்கீலாக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார். செஸ் விளையாட்டின் மீது ஆர்வமாக இருக்கும் அவரது மகன் அப்போட்டியில் கிராண்ட்மாஸ்டர் பட்டம் வெல்ல வேண்டும் என்று விரும்புகிறார் ஆனால், பள்ளி ஆசிரியரோ கழிப்பறையை சுத்தம் செய்ய வைத்து அஸ்வினின் ஆர்வத்திற்கு முட்டுக்கட்டை போடுகிறார். தனியார் நடத்தும் செஸ் பயிற்சி பள்ளியில் சேர்க்க மறுக்கிறார் காரணம் தாழ்த்தப்பட்ட ஜாதி என்பதால் இன்னொரு பக்கம் ஒரு போலீஸ் அதிகாரியின் உதவியுடன் மாவட்டம் பள்ளி அளவிலான செஸ் போட்டியில் கலந்து கொள்ளும் அஸ்வின், தனது திறமையால் வெற்றி பெற்று அனைவரது கவனத்தையும் ஈர்க்கிறார். அந்த வெற்றி தொடர்ந்து அஸ்வினுக்குள் இன்னொரு பெரிய கனவு. கிராண்ட் மாஸ்டர் பட்டம் வெல்ல வேண்டும்! என்ற லட்சியத்துடன் அடுத்தடுத்த போட்டிகளில் பங்கேற்க தயாராகிறார்.இந்நிலையில் அஸ்வின் செஸ் போட்டியில் கலந்து கொள்ள எதிர்ப்பு சுரேஷ்மேனன் தன் அடியாட்கள் விட்டுதேட சொல்கிறார் இதைதெரிந்து கொண்ட அபர்ணதி தன் மகன் அஸ்வின் அழைத்துகிட்டு ஊரை விட்டு பக்கத்தில் இருக்கும் மாநிலத்தில் ஆந்திர, கேரளா, வட மாநிலங்களில் தப்பிஒடி தலைமறைவாக இருக்கிறார் சுரேஷ்மேனன்னை பார்த்து பயந்து ஓட என்ன காரணம்! அஸ்வின் போட்டிகளில் கலந்து கொண்டாரா? இல்லையா.? பல திருப்பங்களுடன் படத்தின் மீதி கதை..
நடிப்பு பங்களிப்பு :
கதாநாயகி அபர்ணதி பொறுப்பான குடும்ப பெண்ணாகவும் மேல் ஜாதியினர் தன் கணவரை துன்புறுத்தல் அவர்களிடமிருந்து மீட்க விட முயற்சி தன்னந்தனியாக பெண்ணின் உறுதியான போராட்டம் எதிரிக்கு சீறிய பாம்புபாகவும் மகன் அஸ்வின்க்கு நல்ல தாயாக பல பரிமாணங்கள் கதாபாத்திரத்தில் சிறப்பான பங்களிப்பு கொடுத்துள்ளார் _ இவருக்கு மகனாக குழந்தை நட்சத்திரமாக அஸ்வின் சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளார் இவர்களுடன் “செஸ் “பயிற்சி அகடமி நடத்தும் சுரேஷ் மேனன், சிறப்பான பங்களிப்பு மற்றும் இவர்களுடன் லிங்கேஷ், வெற்றிச்செழியன்,, தமிழரசி, அன்பு. கதை ஓட்டத்திற்கு ஏற்ப நடிப்பை வழங்கி யுள்ளனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள்:பங்களிப்பு
பின்னனி இசை: தினேஷ் ஆண்டனி ஒகே
ஒளிப்பதிவு: அர்ஜுன் ரவி, ஞானசேகர் ஆர்.எஸ். கிராமப்புறம், செஸ் போட்டிகளில் நடக்கும் இடத்தை அழகாக ஒளிபதிவு செய்துள்ளார்.
எடிட்டர்: ரஞ்சித் சி.கே. படத்திற்கு தேவையான காட்சிகள் மட்டும் இணைத்துள்ளார்.
எழுத்து – இயக்கம்: வெற்றிச்செழியன் எடுத்து கொண்ட கதைகளம் இந்த சமுதாயத்தில் தேங்கிகிடக்கும் ஜாதி கொடுமை அவலங்களை தைரியமாக ,துணிச்சலாக சொல்லியுள்ளார் உங்கள் முயற்சி பாராட்டு வாழ்த்துக்கள்
ரேட்டிங் 3:5










