Sunday, July 26

“பைசன்” திரைவிமர்சனம்.

அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் சார்பில் சமீர் நாயர், தீபக் சேகல், பி.ஏ. ரஞ்சித், அதிதி ஆனந்த் தயாரித்திருக்கும் சுனில் சைனானி, பிரமோத் செருவலத், பிரசூன் கார்க், மனிந்த் பேடி தயாரித்திருக்கும் பைசன் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் மாரி செல்வராஜ்.

தொழில்நுட்ப கலைஞர்கள் :-இசை : நிவாஸ் கே பிரசன்னா, பாடலாசிரியர்கள்: மாரி​ செல்வராஜ், அறிவு, ஒளிப்பதிவு : எழில் அரசு கே, கலை இயக்குனர் : குமார் கங்கப்பன், படத்தொகுப்பாளர்: சக்தி திரு, சண்டை : திலிப் சுப்பராயன், நடனம் : சாண்டி, ஒலிப்பதிவு : சுரேன்.ஜி, ஒலி வடிவமைப்பாளர்: சுரேன்.ஜி, அழகியகூத்தன், ஆடை வடிவமைப்பாளர்: ஏகன் ஏகாம்பரம், ஒப்பனை: கலையழகன், ஸ்டில்ஸ் : ஆர்.எஸ்.ராஜா,மக்கள் தொடர்பு : குணா, சதீஷ் ( AlMஎஐம்), யுவராஜ்

இதில் கிட்டன் வேடத்தில் துருவ் விக்ரம், வேலுசாமியாக பசுபதி, பாண்டியராஜாவாக அமீர், கந்தசாமியாக லால், ராணியாக அனுபமா பரமேஸ்வரன், ராஜிஷா விஜயன் ராஜி, காண்டீப்பனாக அழகம் பெருமாள், சாந்தன்ராஜ் வேடத்தில் அருவி மதன், விஸ்வேஷ் சிங்காக அனுராக் அரோரா, தரனாக விஸ்வதேவ் ரச்சகொண்டா ஆகியோர் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

கபடி விளையாட்டின் மீது ஆர்வமாக இருக்கும் தென்மாவட்டத்து கிராமத்து இளைஞன், ஜாதி பிரச்னைகள், அவமானங்கள், வன்முறை, துரோகங்களை கடந்து, தடைகளை மீறி எப்படி ஜெயித்தான். தமிழக அணி, இந்திய அணியில் இணைந்து ஆசிய விளையாட்டு போட்டியில் எப்படி ஜொலித்தான் என்பது பைசன் – காளமாடன் படத்தின் கதை. தனக்கே உரிய பாணியில் இயக்கி இருக்கிறார் மாரி செல்வராஜ்.

ஜப்பானில் நடக்கும் ஆசிய கபடி விளையாட்டு போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதுகிற காட்சியில் இருந்து படம் தொடங்குகிறது. அங்கே விளையாடும் இந்திய அணி வீரர் துருவ் விக்ரம், அந்த இடத்துக்கு எப்படி வந்தார். என்னென்ன பிரச்னைகளை சந்திக்கிறார் என, அவரின் பள்ளி வாழ்க்கையில் இருந்து கதை விரிகிறது. பிரேயர் நடக்கும்போது பசியில் சக மாணவர்களின் டிபன்பாக்ஸ்களை திறந்து திருட்டுத்தனமாக சாப்பிட்டு விட்டு, அதற்கு பனிஷ்மென்ட்டாக ஸ்கூல் கிரவுண்டில் வெறியோடு ஓடுகிறார் துருவ். படம் முழுக்க பல இடங்களில் ஓடிக்கொண்டே இருக்கிறார். அது ஒரு குறியீடு.

கபடி வீரராக உடல்வாகு, கபடி ஆட்டம், நெல்லை ஸ்லாங், உணர்ச்சிகர பேச்சு, கோபம், கொந்தளிப்பு, அவருக்கு பக்காவாக செட்டாகி இருக்கிறது. துருவ் சினிமா வாழ்க்கையில் இது முக்கியமான படம், ஹீரோவாக ஜெயித்து, மனதில் நிற்கிறார். அடுத்தபடியாக அவர் அப்பாவாக வரும் பசுபதி செம சாய்ஸ். தான் ஏன் கபடி விளையாட்டை எதிர்க்கிறேன் என்று பொங்குவதில் ஆரம்பித்து, மகனுக்காக போலீசிடம் கெஞ்சுவது வரை நடிப்பில் பாசக்கார அப்பாவாக உணர்ச்சிபூர்வமாக நடித்து கலக்கியிருக்கிறார். அவர் கேரக்டரை பார்த்து தங்கள் நிஜ அப்பா, அவர்களின் பாசம், தியாகத்தை நினைத்து பலர் கண் கலங்குவது நிஜம். மற்றும் இப்படத்தில் நடித்த அனைத்து கதாபாத்திரமும் சிறப்பாக இருந்தது

எழில் அரசுவின் ஓளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம்.படத்தொகுப்பாளர்: சக்தி திரு படத்திற்க்கு தேவையான காட்சிகள் இணைத்து கொடுத்துள்ளார்

நிவாஸ் பிரசன்னாவின் பாடல்கள் இசையும் பிண்ணனி இசையும்தான் படத்திற்கு பெரிய பலமே.

மாரி செல்வராஜ் இதுவரை இயக்கியுள்ள 4 படங்களுமே ஹிட் அந்த வரிசையில் இந்த பைசன் படமும் பெரியளவில் ஹிட்டாகும். வாழ்த்துக்கள்.