
தயாரிப்பு : டர்ன் ப்ரொடக்ஷன்ஸ் ஹவுஸ்
இயக்கம் : தம்பிதுரை மாரியப்பன்
நடிகர்கள் : விவேக் பிரசன்னா, சாந்தினி தமிழரசன், சஞ்சீவ், ஆனந்த் நாக், பூர்ணிமா ரவி, பார்த்தோஷ், நிழல்கள் ரவி, வையாபுரி
படத்தின் தொடக்க காட்சி : இரவு கார் வருகிறது காரில் பிணம் இருக்கிறது போலீஸ் மாட்டி கொள்கிறார்கள் மாட்டிகொண்ட இருவரும் போலீஸ்லிருந்து தப்பித்து விடுகிறார்கள்…
விவேக் பிரசன்னா – சாந்தினி தமிழரசன் இவர்களுக்கு குழந்தை இல்லை இவர்கள் பல மருத்துவரிடம் காண்பித்து மருந்து மாத்திரை எடுத்து கொள்கிறார்கள் ஆனாலும் எந்த பயனும் பலனும் இல்லை குழந்தையில்லாத ஏக்கம் மனக் கவலையுடன் இருந்து வருகின்றனர். தின பேப்பர் ல் வந்த கருத்தரிப்பு மையத்தின் விளம்பரத்தை பார்க்கிறார் அந்த மருத்துவ மனைக்கு செல்கிறார் மருத்துவரை சந்திக்கிறார் மருத்துவர் கொடுக்கும் மருந்தை மனைவிக்கு தெரியாமல் அவர் சாப்பிடும் உணவில் கலந்து கொடுக்கிறார் கொஞ்ச நாட்கள் கடந்ததும் மனைவி கர்ப்பமாகிறாள் . இவர்களுடன் ஆறுதலாகவும் ஆதரவாக அவருடைய நண்பர் ஆனந்த் நாக் உடன் இருந்து வருகிறார். இன்னொரு பக்கம் ஆட்டோ டிரைவரான மாரிமுத்து – ரமா தம்பதியின் மகளான பூர்ணிமா ரவி பெட்ரோல் பங்கில் வேலை செய்து வருகிறார். அவரை பார்த்தோஷ் காதலிக்கிறார் முதலில் காதலை ஏற்க்க வில்லை பிறகு ஏற்று கொல்கிறார் திருமணம் ஆகாமலே பூர்ணிமா கர்ப்பமாகிறார் பார்த்தோஷ் மாயமாகிறார் தொடர்பு இல்லை .. மற்றொருபுறம் கார் மெக்கானிக்கான ஈஸ்வர், அவருடைய நண்பர்கள் முதலில் . பிக்பாகெட் திருடர்களாக தொழில் தொடங்கி பிறகு கார் திருடர்களாக மாறிவிட்டார்கள் . மற்றொரு கதாபாத்திரம் பிரதீப் கே.விஜயன் குழந்தை இல்லாதவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனையை நடத்தி வருகிறார். இந்த மருத்துவ மனையில் மருந்து எடுத்து கொண்டதினால் தான் சாந்தனி பிரச்சன கர்ப்பம் ஆகிறாள் இந்த நான்கு விதமான கதாபாத்திரம் ஒரு பிரச்சனையில் சந்திக்கிறார்கள் அந்த பிரச்சனையிலிருந்துவெளிவருகிறார்கள.? அது என்ன? என்பதே படத்தின் மீதி கதை.
நடிகர் விவேக்பிரச்சன்னா அவருக்கு கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக நடித்துள்ளார் அவரது மனைவியாக நடித்த சாந்தினி தமிழரசன் ஒவ்வொரு பெண்களின் தாய்மை அடைய ஏங்கும் ஏக்கமும் தாய்மை கிடைத்ததும் அவர்கள் பெருகின்ற மகிழ்ச்சியை உணர்வையும். அருமையாக பிரதிபலித்துள்ளார் .. மாரிமுத்து (ஆட்டோ டிரைவர்)- ரமா நடுத்தர குடும்பத்தின் வாழ்க்கை நம் கண்முன் கொண்டு வருகின்றனர். மற்றும் இதில் நடித்த பூர்ணமா ரவி மற்றும் பார்த்தோஷ் / ஆனந்த் நாக் /சஞ்சீவ் வையாபுரி , நிழல்கள் ரவி இவர்களின் கதாபத்திரத்தை உணர்ந்து சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளனர்
தொழிநுட்ப கலைஞர்கள் :
ஒளிப்பதிவு: அஜித் ஸ்ரீனிவாசன் ஒளிப்பதிவு படத்திற்க்கு பக்கபலமாக இருந்தது. இசை: ஆர் எஸ் ராஜ் பிரதாப் பின்னனி இசையும் பாடல்களும் ரசிக்கவைத்திருக்கிறது
எடிட்டர் : படத்திற்க்கு தேவையான காட்சிகள் சேர்த்து படத்தின் ஒட்டத்திற்க்கு சரியாக இருந்தது.
மற்றும் இப் படத்தில் பணியாறறிய அனைத்து தொழில்நுட்ப கலைஞர்கள் சிறப்பாக தன் பணியை செய்துள்ளன.
இயக்குனர் தம்பிதுரை மாரியப்பன் : சொல்லியிருக்கும் கதை களம் சமீபகாலமாக அங்காகே நம் நாட்டில் செயற்கை கருத்தரிப்பு மையம் என்ற பெயரில் புதுசு புதுசா தொடங்குவதை நாம் பார்க்கிறோம் சிலர் குழந்தை இல்லாத தம்பதியரிடம் . ஆசையை தூண்டும் விதமாக விளம்பரம் செய்து பணத்தை கொள்ளையடிக்கும் மருத்துவ கும்பலை பற்றி சொல்லியிருப்பது சிறப்பாகவும் மருத்துவத்துறை பின்னணி -யில் நடக்கும் மோசடியை சஸ்பென்ஸ் திரில்லர் படத்தை இயக்குனர் தம்பிதுரை மாரியப்பன் கொடுத்துள்ளார். அவருடைய முயற்ச்சி பாராட்டு வாழ்த்துக்கள்










