Thursday, June 11

பிரபல எழுத்தாளரான ஜெயமோகன் மஞ்சும்மல் படத்தை கடுமையாக விமர்சனம்

நண்பர் குழு ஒன்று கொடைக்கானலுக்கு செல்கிறது. அதில் ஒருவர் குணா குகையில் விழுந்து விடுகிறார். அவனை நண்பர்கள் குழு எப்படி மீட்டது என்பதே படத்தின் கதை. இந்தப்படத்தை பார்த்த பிரபலங்கள் பலர் படத்தை கொண்டாடிய நிலையில், பிரபல எழுத்தாளரான ஜெயமோகன் மஞ்சும்மல் படத்தை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.

அந்த விமர்சனத்தில், “ தென்னகம் முழுக்க உள்ள சுற்றுலா இடங்களுக்கு வரும் கேரளத்துப் பொறுக்கிகளிடம் அநாகரீக செயல் இருக்கிறது. இப்படத்தில் வருபவர்கள் குடிப்பொறுக்கிகள். இவர்கள் குடித்து வீசிய பாட்டில்களால் யானைகளின் கால்கள் அழுகி இறக்கின்றன.

இப்படத்தினைக் கொண்டாடுபவர்கள் நம்மூர் அரைவேக்காடுகள். மலையாள சினிமா இக்கால சமூதாயத்தை கெடுக்கிறது. அடுத்து வரும் தலைமுறைகளை ஜாலியாக இருப்பது என்றால், அது குடியும் கும்மாலமும்மாக இருப்பது தான் என போதிக்கிறது.

கேரளத்தின் நலம் நாடும் ஓர் அரசு இருந்தால் “மஞ்சும்மல் பாய்ஸ்” படத்தை எடுத்த படக் குழுவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், தமிழில் மூடர்கூடம் திரைப்படத்தை இயக்கி கவனம் பெற்ற இயக்குநர் நவீன் ஜெயமோகனை தன்னுடைய ட்விட்டர் தளத்தில் கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார்.

இது குறித்து அவர் வெளியிட்டு இருக்கும் பதிவில், “ தமிழ் பொறுக்கிஸ்’ என்று சொன்ன அந்த சங்கியும், ‘மலையாளப் பொறுக்கிகள்’ என்று சொல்லும் இந்த சங்கியும், ஒரே சாக்கடையில் ஊறும் இரண்டு தவளைகளே.

தமிழர்கள் கேரளம் சென்றாலும், மலையாளிகள் தமிழ்நாடு வந்தாலும், அவர்கள் நம்மிடம் தமிழிலேயே பேசுகிறார்கள். குடிப்பொறுக்கிகள் உலகெங்கும் நிறந்துள்ளனர்” என்று பதிவிட்டு இருக்கிறார். இந்தப்பதிவு தற்போது சமூகவலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

இந்தப்படம் வெளியான அன்றைய தினம் 3.3 கோடி ரூபாய் வசூல் செய்தது. முதல் நாள் படம் பார்த்தவர்கள் படத்தைப் பற்றி பாசிட்டிவாக கருத்துக்களை பகிர, அதனைதொடர்ந்து படத்தை பார்க்க ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக திரையரங்கிற்குள் வர ஆரம்பித்தனர்.

இதனால் முதல் வார இறுதியில் இந்த திரைப்படம் 28. 35 கோடி ரூபாய் வசூல் செய்தது. இரண்டாவது வார முடிவில் 37.15 கோடி ரூபாய் வசூல் செய்தது. இந்த நிலையில் படம் வெளியாகி 17 நாட்கள் கழிந்த நிலையில், இந்தப்படம் தற்போது இந்தியாவில் மட்டும் 77.40 கோடி ரூபாய் வசூல் செய்திருக்கிறது. 20 கோடி ரூபாயில் எடுக்கப்பட்ட இந்தப்படம் உலக அளவில் இந்தப்படம் 100 கோடியை தாண்டி வசூல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: