Thursday, April 16

“நிர்வாகம் பொறுப்பல்ல” திரைவிமர்சனம்.

ஆர்.கே. ட்ரீம் ஃப்பேக்டரி சார்பில் டி.ராதாகிருஷ்ணன் தயாரிப்பில், கே எம் பி புரொடக்ஷன்ஸ் சார்பில் எம்.புவனேஸ்வரன், ஜோதிலட்சுமி மற்றும் எஸ் பி எம் ஸ்டுடியோஸ் சார்பில் ஷாஜு சி இணைந்து தயாரிக்கும் திரைப்படம் “நிர்வாகம் பொறுப்பல்ல” .


எஸ்.கார்த்தீஸ்வரன் இயக்கி கதையின் நாயகனாக நடித்துள்ளார். இவருடன் முக்கிய கதாபாத்திரத்தில் லிவிங்ஸ்டன், இமான் அண்ணாச்சி, பிளாக் பாண்டி, ஆதவன், அகல்யா வெங்கடேசன், ஸ்ரீநிதி, கோதை சந்தானம், அம்மன்புரம் சரவணன், ராதாகிருஷ்ணன், ஆசு அர்ஜுன், மிருதுளா, ஜெயஸ்ரீ சசிதரன், தீட்சண்யா, மஞ்சு மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்க, இசையமைப்பாளர் தேவா, சின்ன குயில் சித்ரா, நடிகர் ஜெய், மற்றும் சைந்தவி ஆகியோர் பாடல்கள் பாடியுள்ளனர், சஜின் சி படத்தொகுப்பும், என்.எஸ். ராஜேஷ் ஒளிப்பதிவாளராகவும், சுரேஷ் சித் நடன இயக்குநராகவும், ஜாக்கி ஜான்சன் ஸ்டண்ட் மாஸ்டராகவும் பணி புரிந்துள்ளனர். மக்கள் தொடர்பு: நிகில் முருகன்

கதைக்கரு

பேராசைப்படும் மக்களை மோசடி செய்யும் கதை,

படத்தை பார்ப்போம்:

நாயகன் கார்த்தீஸ்வரன் தலையில் மக்களை ஏமாற்றும் ,ஐந்து பேர் இவர்கள்  மொபைல் சாட் செய்யும் இளைஞர்களை குறிவைத்து  செக்ஸ் வார்த்தையால் பெண் பேசி வலையில் சிக்க வைத்து பணம் பறித்தல்  பேராசை கொண்ட அப்பாவி மக்களிடம் ஆசை வார்த்தைகள் கூறி குறைந்த முதலீட்டிற்கு அதிக பணம் கொடுத்தல் குறைந்த விலையில் மொபைல் போன் என்று பல கவர்ச்சிகரமான விளம்பரங்கள் கொடுத்து பல வழிகளில் மோசடி செய்து ரூ.5 ஆயிரம் கோடி சம்பாதிக்கிறார். அந்த பணத்தை எடுத்துக் கொண்டு வெளிநாட்டுக்கு தப்பித்து விட நினைக்கும் போது, போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீநிதியிடம் சிக்கிக் கொள்கிறார்.இறுதியில் போலீஸிடம் சிக்கிக் கொண்ட கார்த்தீஸ்வரன் தப்பித்தாரா? கார்த்தீஸ்வரன் செய்த மோசடிகள் என்ன? மோசடி செய்ய என்ன காரணம்? என்பதே படத்தின் மிதிக்கதை.

நடிகர்கள்:

படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கும் கார்த்தீஸ்வரனே மக்களை ஏமாற்றும் மோசடி மன்னன், காதல் மன்னன் பல கதாபாத்திரத்தில் நடிப்பில் அசத்தியுள்ளார்  இவருடன்  இணைந்துள்ள மோசடி கூட்டனி  நண்பர்கள் கதாபாத்திரம் சரியான பொருத்தமாக ஆதவன், அகல்யா வெங்கடேசன் சிறப்பாக இருந்தது . இவர்களிடம் ஏமாந்த பொறுப்பான குடும்பஸ்தன்  கோழிழிபண்னை வியாபாரி  லிவிங்ஸ்டன், இரு காட்சியில் நடித்த பிளாக் பாண்டி மற்றும் இப்பட த்தில் நடித்த அனைவரும்  கொடுத்த வேலையை சிறப்பாக செய்துள்ளனர்.

இசை

ஸ்ரீகாந்த் தேவாவின் இசை குத்தாட்ட பாடலுக்கு ஆட்டம் போட வைக்கிறது. பின்னணி இசை சிறப்பாக இருந்தது

ஔிப்பதிவு

என்.எஸ்.ராஜேஷ் ஒளிப்பதிவில் காட்சிகளை  சிறப்பாக கொடுத்துள்ளார்.

எடிட்டர் :, என்.எஸ். ராஜேஷ் படத்திற்க்கு தேவையான காட்சிகள் மட்டும் சேர்த்துள்ளார்.

இயக்கம் கதை தேர்வு சரியானது இதற்க்கு முன் பல படங்கள் வந்திருந்தாலும் மக்கள் ஏமாறுவதை தடுக்க முடியவில்லை : ஏமாற்றுபவன் புதுசு புதுசான ஏமாற்றுவழியில் வந்து கொண்டு இருக்கிறார்கள் தற்போது ஆன்லைன் மோசடியில் சிக்கி பணத்தை பறிகொடுக்கும் மக்களின் பரிதாப நிலையை  அப்படியே  எல்லோரும் ரசிக்கும்படியாக சொல்லி இருக்கிறார்  சமூக அக்கறையுடன் எடுத்துள்ள படத்தின் இயக்குனர் கார்த்தீஸ்வரன். முயற்ச்சி பாராட்டு வாழ்த்துக்கள்