Saturday, July 25

“ராவ் பகதூர்” திரை விமர்சனம்.

நடிகர்கள் :-
சத்யா தேவ் – ராமப்பா ராவ் பகதூர்
விகாஸ் முப்பலா – டாக்டர் ஆச்சாரி
தீபா தாமஸ் – ரேணுகா
பாலா பராசர் – அச்சம்மா
ஆனந்த் பாரதி – இன்ஸ்பெக்டர்

தயாரிப்பாளர்கள்: சிண்டா கோபாலகிருஷ்ண ரெட்டி, அனுராக் ரெட்டி, சரத் சந்திரா, ஈஸ்வரன் விஜயராகவன்

தொழில்நுட்பக் கலைஞர்கள்:-
கதை, திரைக்கதை, இயக்கம் – எடிட்டர் : வெங்கடேஷ் மஹா
ஒளிப்பதிவு: கார்த்திக் பர்மர்
இசை: ஸ்மரன் சாய்
மக்கள் தொடர்பு: சதீஷ் குமார், எஸ்2 மீடியா

படத்தை பார்ப்போம்;

கதை 1968 முதல் 1991 வரையிலான காலகட்டங்களில் நடக்கின்றது ‘புவனாலயம்’ என்ற  அரண்மனை மாளிகையில் நடக்கிறது. படத்தின் நாயகன் புவனம் ராமப்பா ராவ் பகதூர் (சத்யா தேவ்) மரண நோயால்  பாதிக்கப்பட்டு, .சாகக் கிடக்கும் அவரது மனதில் தீராத சந்தேகம்  . அதாவது, இறந்து போன அவரது இளைய மகன் குசுமா (மாஸ்டர் கிரண்) எனக்கு பிறக்கவில்லை,  என்ற சந்தேகம்  இதனால் அவரது மனைவி ரேணுகா (தீபா தாமஸ்) கடந்த 8 வருடங்களாக இருண்ட தனிஅறைக்குள்  தனிமைப்படுத்திக் கொண்டு வாழ்கிறாள். மூத்த மகன் லவானா (பிரணய் வாகா) தந்தையின் கொடுமையாலும் தாயின் பிரிவாலும் வாடுகிறான். அவர்களது குடும்ப மருத்துவரான டாக்டர் ஆச்சாரிக்கு (விகாஸ் முப்பலா) மட்டும் ராமப்பாவின் இந்த மனநோய் தெரியும்.இறுதியில் ராவ் பகதூர் குசுமப்பா தன்னுடைய மகன்தான் என்று நீதிமன்றத்தில் நிரூபித்தாரா ? இல்லையா ? கடந்த 8 ஆண்டுகளாக வீட்டில் தனி அறையில் இருக்கும் ரேணுகா  வெளியே வந்தாரா ? இல்லையா ? என்பதே பல திருபங்களுடன் ‘ராவ் பகதூர்’ படத்தின் மீதிக்கதை.

ராமப்பா என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சத்யதேவ் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். பல்வேறு காலகட்டத்திற்கு ஏற்றவாறு வயது, தோற்றம்,  நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.  . வயதான தோற்றத்திலும், பிளாஷ்பேக் காட்சிகளிலும் கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்.

சத்யதேவ் மனைவியாக நடித்திருக்கும் தீபா தாமஸ்  துணிச்சல் மிக்க கதாபாத்திரத்தில் அனைவரின் கவனத்தை ஈர்க்கிறார் . படத்தின் பெரிய பலம்

நாயகனின் நண்பராகவும், மருத்துவராகவும் நடித்திருக்கும் விகாஸ் மப்புலா தன் வேலையை சரியாக  திருப்பங்களுக்கு கைகொடுக்கும் விதத்தில் நடித்திருக்கிறார். மற்றும் பாலா பரசர் ஆகியோர் தங்களுக்கான கதாபாத்திரங்களை குறையில்லாமல் செய்திருக்கின்றனர். பின்னணி இசையும் ஒளிப்பதிவும் படத்தின் காலப்பின்னணியை நம்பகமாக உருவாக்க உதவுகின்றன.

இசையமைப்பாளர் ஸ்மரன் சாய் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலமாக உள்ளது. கார்த்திக் பர்மார் ஒளிப்பதிவு அழகாவும் பிரமாண்டமாகவும் காட்சிப்படுத்தியிருக்கிறார்.

அரண்மனையில் நடக்கும் சம்பவங்களை மைய கருவாக வைத்து கதை எழுதி இயக்கியிருப்பதோடு, படத்தொகுப்பும் செய்திருக்கும் வெங்கடேஷ் மஹா, ஒரு சாதாரணமான பீரியட் படமாக அல்லாமல், சாதி வெறி, நிற வெறி,  ஆணவம் ஆகியவற்றை  தைரியமாக துணிச்சலாக ஒரு கதைக்களத்தை  திரில்லர் பாணியிலான படமாக கொடுத்து மிரட்டியிருக்கிறார். நேர்மையான நேர்த்தியான படைப்பு. இருப்பினும், படத்தின் அதிகப்படியான நீளம் கொஞ்சம் குறைத்து இருக்கலாம் இருந்தாலும் உங்கள் முயற்சிக்கு பாராட்டு கிளைமாக்ஸ்  காட்சி எதிர்பாராத திருப்பங்களுடன் அனைவரும் ரசிக்கும் படியாக இருந்தது பாராட்டு வழக்கமான கமர்ஷியல் படங்களை எதிர்பார்க்கும் ரசிகர்களுக்கு இது சற்று சலிப்பை தரலாம் வித்தியாசமான கதை விருப்புகறவர்கள் சரியான தேர்வு

ரேட்டிங் 3:0